Posts

Showing posts from July, 2012

மனம்கவர் மணாலி – 2

Image
கோவிலின் உள்ளே...: இங்கிருந்துத் தெரியும் மலைச் சிகரத்திற்க்குப் பின்னால் இருந்து சீனா ஆரம்பம் என்றார்கள். ஒரு தேநீர்க் கடையின் அறிவிப்புப் பலகை :  நெடுஞ்சாலையோரம் வெயிலின் வருகைக்காக உறைந்திருக்கும் ஓடை :    பியாஸ் நதியின் பிரவாகம் :   பனிப் பாறையின் கீழே ஆரம்பமாகும் மலையோடை : மலையுச்சியில் ஒருக் காட்சி.     பள்ளிக் குறிப்பேடுகளின் ( Note books) அட்டைப் படங்களில்  இது போன்ற படங்களைப் முன்பு ஒரு காலத்தில் பார்த்ததாக நினைவு. செங்குத்தாக விழும் நீ...ண்ட அருவி : நைனா தேவி ஆலயம் :     சிவனாருக்கு நேர்ந்த அவமானம் தாங்காமல் பார்வதி தேவி யாகத்தில் குதித்து தன்னை மாய்த்துக் கொண்டதாகவும், அவரைச் சுமந்து கொண்டு சிவனார் உக்கிரத்தாண்டவம் ஆடியதாகவும், அந்த உக்கிரம் காரணமாக உலகம் அழிந்துபட நேரிடலாம் என்று எண்ணிய மஹா விஷ்ணு தனது சங்கு சக்கரத்தை ஏவி, பார்வதி தேவியின் உடலை 51 பகுதியாக வெட்டியதாகவும், அந்தப் பாகங்கள் பாரதம் முழுவதும் விழுந்ததாகவும், அவ்வாறு விழுந்த அனைத்து இடங்களும

மனம்கவர் மணாலி - 1

Image
  தமிழகத்தில் வசிப்பவர்கள் ஊட்டி  செல்வதுப் போல வட இந்தியாவில் வசிப்பவர்கள் கோடைக் காலங்களில் எளிதில் மணாலி அல்லது சிம்லா சென்று வர இயலும். நாங்கள் 6 பேர் குழுவாக சென்றிருந்தோம். மூன்றே நாட்கள்தான் என்றாலும் மறக்க முடியாத அனுபவமாக அமைந்தது. மலைப்பாதையில் பயணித்து...., பின்னர்..., மலைக்கு மேலே.., மலைக்கு மேலே..., இன்னும் மேலே.. சென்றால் ‘குல்லு’வைத் தாண்டி மணாலியை அடையலாம். செல்லும் வழியெங்கும் ஆப்பிள் மரங்களையும் விளைந்துத் தொங்கும் காய்களையும் காணலாம்.  மணாலி செல்லும் வழியில் சில மைல்களுக்கு முன்பாகவே பிரியும் மலைப் பாதை நம்மை மணிக்கரன் இட்டுச் செல்கிறது.                     மணிக்கரன் `நீர்வீழ்ச்சி :          சீக்கியர்களின் புனிதத் தலம் இது. நீர் வீழ்ச்சி என்று அழைப்பதுப் பொருத்தமில்லை. இங்கு வெந்நீர் ஊற்று அமைந்துள்ளது. இந்தியாவில் வெந்நீர் ஊற்று இருப்பதாகக் கேள்விப்படாத எங்களுக்கு ஆச்சர்யமான விசயமாக இருந்தது. அதுவும் இமய மலையில் கண்டதில் மிகவும் ஆச்சர்யம். அருகாமையில் இமய மலையில் இருந்து இறங்கி அசுர வேகத்துடன் ஆர்ப்பரித்து ஒடிவரும் ஆற்றின் பலத்த இரைச்சல் பாலத்தின் ம