Posts

Showing posts from October, 2012

பயணங்களும் சில சிந்தனைகளும்

சிலப்  பயணங்களின் பொது நாம் காணும் சிலக் காட்சிகள் நம்மை  பல்வேறு விதமாக யோசிக்க வைத்து விடும் அது போன்ற  சிந்தனைகளின் வடிவமே இந்தப் பதிவு.. .        பிரபல ஆலயம் ஒன்றில் அந்த ஆலய நிர்வாகியின் புகைப்படத்தை விவேகானந்தருக்கும் வள்ளளாருக்கும் நடுவில் அச்சிட்டு விளம்பரம் செய்து இருந்தார்கள். விவேகானந்தரும், வள்ளளாரும் தங்களது முகத்தைத் தாங்களே விளம்பரம் செய்து கொள்ள நேர்ந்ததாகப் படித்ததில்லை. அடக் கொடுமையே என நினைத்தேன். இன்னொருப் பக்கம் நேதாஜி,மற்றும் காந்திஜிக்கு நடுவே மற்றொருவர் படம் ( அந்த ஊரிலெயே அவரை நிறையப் பேருக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை). என்னதான் சொல்ல வருகிறார்கள் இவர்கள் என்றேப் புரியவில்லை.    நாடோடிகள் திரைப்பட நகைச்சுவை நினைவுக்கு வந்தது.       ஒரு த ட்டி விளம்பரம் ஒன்றைப் பார்க்க    நேர்ந்தது. ஒரு குறிப்பிட்ட சாதியைச் சேர்ந்த ஒரு தலைவரின் நினைவு நாளை, “சாதி ஒழிப்பு??” தினமாகக் கொண்டாடுவதாக ஒரு விளம்பரம். அந்த சாதியைச் சேர்ந்தவர்கள் எல்லோரும் கடலெனத் திரண்டு வரவேண்டும் என்ற அழைப்பு. “பழகிப் பார் பாசம் தெரியும், பகைத்துப் பார் வீரம் புரியும