Posts

Showing posts from January, 2013

மாவட்ட ஆட்சியர்களும் செம்மையான நிர்வாகமும்.

இந்திய ஆட்சிப் பணி என்பது, மத்தியத் தேர்வாணையத்தால் நடத்தப்படும் தேர்வினை எழுதி, அதில் இந்திய அளவில் உயர் மதிப்பெண் பெறும் இளைஞர்களுக்கு வழங்கப் படும் பொறுப்பு. இந்தத் தேர்வில் வெற்றிப் பெறுவது என்பது அவ்வளவு எளிதல்ல.  திட்டமிட்ட, தொடர்ந்த உழைப்பும், புத்திக்கூர்மையும் சற்று அதிகமாகவேத் தேவை. ஒரு மாவட்டத்தின் மைய நிர்வாகி என்பவர் சிறந்த முடிவெடுக்கும் திறன் கொண்டவராகவும், அதிக சவால்களைச் சமாளிக்கும் திறன் கொண்டவராகவும் இருத்தல் அவசியம். எனவே இந்தப் பணி மரியாதை மிக்க ஒன்றாகக் கருதப் படுகிறது.      இத்தகையச் சிறப்பு மிக்கப் பணியை, மிகக் கடுமையான உழைப்பின் மூலம் பெறுகிறவர்கள் அனைவரும், பாராட்டும்படியான நிர்வாகிகளாக இருப்பதில்லை. சிலர் ஊழல்வாதிகளாகவும், பலர் அரசியல் கட்சிகளின் கைப்பாவைகளாகவும், மாறிப் போகிறார்கள். எனவேத் தற்போது I.A.S அதிகாரிகளும் தங்கள் சொத்து விவரங்களை அரசுக்குத் தெரிவிக்க வேண்டியது அவசியமாக்கப் பட்டுள்ளது. எவ்வாறாக இருப்பினும், சில ஆட்சியர்கள், நேர்மையாகவும், தேசப்பற்று மிக்கவர்களாகவும் செயலாற்றுகிறார்கள். அத்தகைய வெகு சிலரைப் பற்றிய விசயங்களைப் பகிர்ந்து