Posts

Showing posts from August, 2013

அரசுத் துறைகள்.

  அரசு அலுவலர்களுக்கு என்று சற்று அதிக மரியாதை உண்டு சமூகத்தில். அந்த வீடு பேங்க் காரர் வீடு, இது சர்வேயர் வீடு, இது செகரட்டரி வீடு என்பார்கள் ஊர்ப் புறங்களில். சில வருடங்களுக்கு முன்பு வரை, அவர்களுக்கு வருமானமும் மற்றவர்களுடன் ஒப்பிட முடியாத அளவுக்கு அதிகம் என்பதால் சற்று அதிகாரம் தூள் பறக்கும்.   அதனால் வேலை செய்யும் இடங்களிலும், அவர்களாகப் பார்த்து வேலை செய்தால்தான் உண்டு என்ற நிலைமை உண்டு. எதற்கெடுத்தாலும் எரிந்து விழுவார்கள். காவல் துறையில் பணம் தந்தால் வேலை எளிதில் நடக்கும். சட்டம் எல்லாம் முடமாக்கப் படும். சமீபத்தில் ஒரு பெண் அலுவலர், பாரத் ஸ்டேட் வங்கியின் பரபரப்பான பணி நேரத்தில் கணினியில் சீட்டு விளையாடும் புகைப்படம் முகனூலில் பிரபலமாக இருந்தது. அவ்வாறான மன நிலையில்தான் பல அதிகாரிகளும் இருப்பார்கள். வட்டாட்சியர் அலுவலகங்களில், வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களில்.., லஞ்சம் வாங்குவதும் இல்லை, கேட்பதும் இல்லை என்று மூலைக்கு மூலை எழுதி இருப்பார்கள். ஆனால் கொடி நாள் பணம் என்று அனைவரிடமும் வசூலிப்பார்கள் ஆனால் ரசீது தர மாட்டார்கள்.   சார் பதிவாளர் அலுவலகத்தில் ஒரு பத்திரப