Posts

Showing posts from September, 2013

நகைச்சுவை..

எனது ஆசிரியர் ஒருவர் சொன்ன நகைச்சுவை ஒன்று. ஒரு ஊரில் சில கொக்குகளும், குளம் ஒன்றில் பல நண்டுகளும் இருந்தனவாம். நண்டுகளுக்கு இந்தக் கொக்குகளிடம் இருந்து எப்படி தப்பிப்பது என்றேக் கவலையாம். கொக்குகளுக்கு, கொழு கொழுன்னு இருக்கிற, அத்தனை நண்டுகளையும் ஆசை தீர சாப்பிட வேண்டும் என்று எண்ணமாம்.   அதனால் ஒரு சதித் திட்டம் தீட்டியக் கொக்குகள், நண்டுகள் தலைவருக்கு ஒரு தூதுவரை அனுப்பி, நாம் இரு தரப்பும் நண்பர்களாகி விடலாம் நமக்குள் பகை வேண்டாம் என்று சொல்லி அனுப்பினவாம். அதற்கு நண்டுகளும் ஒத்துக் கொண்டனவாம். ஆனால் உள்ளுக்குள் பேசி, அந்த ஒரே நாளில் அத்தனை நண்டுகளையும் தின்று தீர்த்து விட வேண்டும் என்று ரகசியத் திட்டம் போட்டிருந்தனவாம்.   ஒரு நல்ல நாள் குறித்து அந்த நாளில் மேள, தாளங்களுடன் நண்பர்களாகி விடுவது என்று கொக்குகள் எல்லாம் கிளம்பி போச்சுங்களாம். ஆனால், கதையில் முக்கியத் திருப்பமா, அந்தக் கொக்குங்களோட சதித் திட்டம் நண்டுகளுக்குத் தெரிஞ்சுருச்சாம்.   அங்க இருந்த எல்லா நண்டுகளும் வேறு ஒரு இடத்துக்குக் கிளம்பிப் போயிடுச்சிங்களாம். கொக்குங்களுக்கு ஒரே ஏமாற்றமா இருந்துச்சாம். என்

சாதியம்.

   கிராமங்களில் சாதிப் பாகுபாடு அதிகம் உண்டு. நான் பார்த்த, கேள்விப்பட்ட சில சம்பவங்கள் என்னை மிகவும் வருத்தப் பட வைத்தன. அவற்றுள் ஒன்று, காதல் தோல்வியால் ஏற்பட்ட நண்பர் ஒருவரின் தற்கொலை. எனக்கு 3 வயது மூத்தவர் அவர். அவர் “அண்ணன்” பள்ளியில் மேனிலை கல்விப் படிக்கும் போதேக் காதலித்தார் (சுமார் பதினைந்து ஆண்டுகள் முன்பு). சிறு வயது என்பதால் விபரீதம் புரியவில்லை. மிகத் தீவிரமானக் காதல். சற்று உணர்ச்சி வசப் படும் குணம். தனது வலது கரத்தின், மேல் பகுதியில் (அரைக் கை சட்டையின் மறைவில்) ஒரு தாலிக் கயிறினைக் கட்டி வைத்திருப்பார். தனது காதலிக்காக அதனைப் பத்திரமாக பாதுகாத்து வந்தார். அந்தத் தாலி முடிச்சு இளகும் போதெல்லாம் அதனை இறுக்கி விட வேண்டும் எனில் என்னைத் தேடி வருவார். அவரது காதலியின்   பெயரைக் குறிப்பிடும் போதெல்லாம் மனைவி என்றேக் கூறுவார். இருவருமே தாழ்த்தப் பட்டவர்களாகக் “ கருதப்படும்” வகுப்பினைச் சேர்ந்தவர்கள்தான். ஆனால் கொடுமை என்னவென்றால், அதில் ஒன்று சற்று உயர்ந்த “தாழ்ந்த சாதி”யாம், மற்றொன்று; அவர்களுக்குக் கீழான தாழ்ந்த சாதியாம். மேலோட்டமாகப் பார்த்தால் தெரிய வராத இந்த குரூ

சில சம்பவங்கள்...

ஒரு முறை, சென்னையின் மின்சார ரயில் நிலையம் ஒன்றில் கண்ட சம்பவம். 35 வயதை ஒத்த ஒருவரது கண்ணிற்கு சற்று மேலேத் தோல் கிழிந்திருக்கிறது. படிகளில் எல்லாம் ரத்தம் சிந்திக் கொண்டு, ரத்தம் தோய்ந்தக் கைக்குட்டையினால் காயத்தை மறைத்தவாறு அங்கு இருக்கும் அனைவரிடமும் அவர் உதவி கேட்கிறார். தன்னை ஒருவன் முகத்தில் குத்திவிட்டு தனது கைப் பேசியைப் பிடுங்கிச் சென்று விட்டதாகவும், தனக்கு எதாவது உதவி செய்யுமாறும் கெஞ்சுகிறார். யாருமே அதை பொருட்படுத்தவில்லை. போய் ரயில்வேப் போலீசில் சொல்லு என்கிறார்கள். தங்களது உரையாடலைத் தொடர்கிறார்கள்.    அவர் சற்று மனம் தளர்ந்தவராக, சுரங்கப் பாதையின் மேலும் கீழுமாக நடந்துக் கொண்டு என்ன செய்வது என்று தெரியாமல் விழிக்கிறார். அனைவரும் அவரது முகத்தின் ரத்தத்தைப் பார்த்து பயந்து, ஒதுங்கிச் செல்கிறார்கள். நல்ல வேளையாக அங்கு ஒரு கல்லூரி மாணவர் அவருக்கு உதவி செய்ய வேண்டும் என்கிற மனம் வந்து அவரை அழைத்துச் சென்றார். நான் சற்று பயந்திருந்தாலும், உடன் செல்வோமே என்ற எண்ணத்தில் உடன் சென்றேன். அருகில் ஒரு கட்டுமானப் பணி நடந்து கொண்டிருந்தது. அங்கு முதலுதவிப் பெட்டி இருக்கும் எ

ஊர்ப் பெயர்கள்

      சில மாதங்கள் முன்பு, நூலக வார விழாவை முன்னிட்டு, ஒரு சொற்பொழிவு ஒன்று பெரம்பலூர் நூலகத்தில் நடை பெற்றது. அங்குப் பேசிய ஒரு பேராசிரியரின் உரையில் இருந்து சில விசயங்கள்... பெரம்பலூர் மற்றும் அதன் சுற்றுப் புற ஊர்களின் பழையப் பெயர்களைக் குறித்து பேசினார். சிறுகுடல் மற்றும் பெருகுடல் என்ற ஊர்கள் உண்டு. உண்மையில் அங்கு இருந்த சிற்றாறுகளின் சங்கமம் காரணமாக, சிறுகூடல் பெருகூடல் என்றப் பெயர்களே மாறி, இப்படி மனித உடல் உறுப்புகள் போல மருவி விட்டது என்றார். கருமையான் மண் தன்மையின் காரணமாக, கரும் பாவூர் என்றப் பெயரே மறுவி, அரும்பாவூர் என்றாகி இருக்கிறது. வெண்மையான மண் கொண்ட ஊர், வெண்பாவூர். இதனைக் கேட்டப் பின்புதான் எனக்குத் தெரிந்த்து, கேரளாவில் உள்ள ஒரு ஊரின் பெயர் பெரும்பாவூர். நடிகர் ஜெயராமின் சொந்த ஊராம் அது. அனேகமாக அந்த ஊரின் மண் சற்று பெரியதாக இருந்திருக்குமோ என்னவோ..   தற்போதைய மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அமைந்திருக்கிற இடம், முற்காலங்களில், உறையூரிலிருந்து சோழர் படை தஞ்சை செல்லும் வழியில் தங்கும் ராணுவக் கேந்திரமாக இருந்த இடம் எனக் குறிப்பிட்டார். சில தளபதிகள் பெயரி

தங்கமனசுக்காரர்கள் (The Golden Hearts) ..!!!?

Image
 வரதட்சிணை :      தனது மகளை, மறு வீடு அனுப்புகிறோமே.., அவள் அங்கு மகிழ்வாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில், நமது முன்னோர்களால் மாப்பிள்ளை வீட்டாருக்கு அன்பளிப்பாக பணம் தரும் பழக்கம் துவங்கியிருக்க வேண்டும். அந்த நல்ல விசயம் பின்பு, மருவி.., இது கட்டாயம், தமது குடும்ப கவுரவம்.., என்றாகித் தற்போது வரதட்சிணைக் கொடுமையால் இந்தியாவில் ஒரு மணி நேரத்திற்கு ஒரு பெண் மரணம் அடைகிறார் என்று புள்ளி விபரம் தெரிவிக்கிறது. நான் கிராமத்தவன் என்கிறபடியால், பல்வேறு விசித்திரமானக் கொடுமைகளைக் கண்டதுண்டு. பதினைந்து வருடங்களுக்கு முன்னர், 5-10 பவுன் என்பது ஒரு மத்திய தர விவசாயக் குடும்பத்தில் சராசரியான வரதட்சிணை. அதுப் பின்னர், 15 ஆக உயர்ந்து, 30 சவரன் ஆக மாறி விட்டது. இன்றைக்கு இருக்கும் தங்கத்தின் விலையில், இவ்வளவு சவரன் நகை வாங்குவது எல்லாம் கனவில்தான் முடியும்.    ஆனால் இவ்வளவு நகை தந்துப் பணம் தந்து, ஒருப் பெண்ணைக் கல்யாணம் செய்து வைத்தால், அவர் மகிழ்ச்சியாக வாழ்ந்து விட முடியுமா? என்றால் இல்லை. பின்னர் மாப்பிள்ளை வீட்டாருக்கு எப்போதெல்லாம் பணம் தேவையோ அப்போதெல்லாம் அவர்கள் கை