Posts

Showing posts from February, 2015

மாமன்னன் கரிகாலச் சோழன் ( ஒரு புத்தக விமர்சனம்).

Image
              மிக நீண்ட நாட்களுக்குப் பிறகு எனது தளத்தில் ஒருப் பதிவு...(நாங்களும் எழுத்தாளர்தாமுலே..!!) டாக்டர். நிரஞ்சனா தேவி என்பவரது எழுத்தில், விகடன் பிரசுரம் மூலம் வெளி வந்திருக்கிற கரிகால்  சோழன் என்கிறப் புத்தகத்தைப் படித்த போது எழுந்த எண்ணங்கள் எழுதத் தோன்றியது. தமிழ் மன்னர்களில் மாமன்னர் யார்?                வரலாற்றை சிறிதளவேப் படித்திருந்த எனக்கு, மாமன்னன் ராசேந்திரச் சோழன் தான் வலிமை மிகு மன்னன் என்கிற எண்ணம் இருந்தது. ஆனால் இந்தப் புத்தகம் படித்தபின், கரிகாலனே சிறந்தவர் என்கிற எண்ணம் மேலோங்குகிறது. கங்கை வரை வென்றவர் பெரியவரா? இல்லை, இமயம் வரை வென்றவர் பெரியவரா? என்கிற கேள்வியின் விளைவு.                 இமய வரம்பன் நெடுஞ்சேரலாதன், சேரன் செங்குட்டுவன் என மொத்தம் மூன்றுத் தமிழ் மன்னர்கள் இமயம் வரை வென்று வாழ்வாங்கு வாழ்ந்திருக்கிறார்கள். வரலாற்றுக்கு முந்தையக் காலங்களில் இன்னும் எத்தனைச் சிறந்த மன்னர்கள் இருந்தார்களோ, எப்படியெல்லாம் சிறப்பாகத் தமிழ் மக்களை காத்தார்களோ??!! என வியப்பு மேலிடுகிறது. உறையூர் மற்றும் காவிரிப்பூம்பட்டினம்