Posts

Showing posts from October, 2017

நேதாஜி யாரெனில் 2 /2.

Image
சிப்பாய் கலகம் என அழைக்கப் பட்ட முதல் சுதந்திரப் போர் (1857)         நமது இந்தியப் படை வீரர்கள் 1857 ல் ஆங்கிலேயர்களை எதிர்த்து கிளர்ச்சி செய்தார்கள். அது கடைசியில் ஒடுக்கப்பட்டு, தோல்வியில் முடிந்தது. தோல்விக்கான காரணங்கள் 1. சரியான தலைவன் இல்லாமை, அதனால் முறையான திட்டமிடல் இல்லை. பகதூர் ஷா தயக்கத்துடனே தலைமையை ஒப்புக் கொண்டார். 2. ஆயுதங்கள் இல்லை, ஆங்கிலேயரிடமிருந்து கைப்பற்றிய ஆயுதங்களேப் பயன்படுத்தப் பட்டன. 3. தகவல் தொடர்பு இல்லை, எனவே சப்பாத்தி மூலம் ரகசியமாக செய்தி அனுப்பப்பட்டன. ஆங்கிலேயர்கள் தந்தி மற்றும் ரயில் அகியவற்றைப் பயன்படுத்தி கிளர்ச்சியாளர்களின் திட்டங்களை எளிதில் முறியடித்தார்கள். 4. இந்தியர் என்கிற எண்ணம் உருவாகி இருக்க வில்லை. இது போன்ற பின்னடைவுகள் இல்லாமல் இருந்திருந்தால், நாம் 1857 லேயே ஆங்கிலேயர்களை விரட்டியிருக்க முடியும். INA war Trial & Royal Indian Navy Mutiny (February 1946) :         நேதாஜி இந்த எல்லாக் குறைகளையும் களைந்து இந்திய தேசிய ராணுவத்தை கட்டமைத்து இருந்தார். இந்த ராணுவம், வட கிழக்குப் பகுதி வழியில் இந்தியாவுக்குள் நுழையும்

நேதாஜி யாரெனில் - 1 / 2

Image
நேதாஜி யாரெனில்            நேதாஜியைப் பற்றித் தெரியாதா என்ன? நேதாஜி ஒரு சுதந்திரப் போராட்ட வீரர். காந்திஜியின் கொள்கைகளோடு முரண்பாடு கொண்டவர். முத்துராமலிங்கத் தேவருடன் நட்பு கொண்டவர். INA வை உருவாக்கப் பெரிதும் தெற்காசியாவில் வாழ்ந்தத் தமிழர்களே உதவியதால், “மறுபிறவி என்று ஒன்று இருந்தால், நான் தமிழனாகப் பிறக்க விரும்புகிறேன்” என்று தெரிவித்தவர். இவ்வாறாகவெல்லாம் நமக்கு தெரிந்தவர் நேதாஜி.             ஆனால் நமக்கு சுதந்திரம் பெற்றுத் தந்தது யார், எந்த வழியில் என்றால், அது நிச்சயமாக நேதாஜிதான், ஆயுதப் போராட்ட வழியில்தான். அஹிம்சையைப் பார்த்து அச்சம் கொள்பவர்கள் ஆங்கிலேயர்கள் அல்ல. மாறாக, ஒரு வெள்ளை அதிகாரி சொன்ன வாசகம் என்னவென்றால் “ இந்தியாவில், பிரிட்டீஷாருக்கு இருக்கும் ஒரு பெரிய போலீஸ்காரர் காந்தி, மக்கள் எழுச்சியால் நிலைமைக் கட்டுக்கடங்காமல் போகும்போதெல்லாம் அதைக் காந்தியைக் கொண்டே, ப்ரிட்டிஷ்காரர்கள் அடக்கினர்” என்றார். இந்தியாவில் ராபர்ட் கிளைவ் கால் வைக்கும் சமயத்தில், வெள்ளையர்கள், அமெரிக்காவிலிருந்து தோல்வி கண்டு வெளியேறிக் கொண்டிருந்தார்கள். ஆகவே தாம் அமெரிக்காவில் செ

கோசெங்கோட் சோழர்

Image
கோச்செங்கண்ண சோழன்          திருவானைக்காவல் ஜம்புகேஷ்வரர் ஆலயத்தை கட்டிய மன்னர் செங்கண்ண சோழன். 63 நாயன்மார்களுள் ஒருவர். சிவகணமான இவர், முற்பிறவியில் சிலந்தியாக இருந்து, தான் வலை பின்னிப் பாதுகாத்துக் கொண்டிருந்த சிவலிங்கத்தை நீரால் தினமும் அபிஷேகம் செய்து வலையை அழித்த யானையைத் துதிக்கையினுள் புகுந்து கொன்றார். பின்னர் மறுபிறவியில் மன்னனாகப் பிறந்து சங்க காலச் சோழர் ஆனார். முற்பிறவியைப் பற்றி உணர்ந்து அதனாலேயே, திருவானைக்காவல் ஆலயத்தினுள் மூலவரை குட்டி யானை கூட நெருங்க முடியாதவாறு ஆலயம் எழுப்பி இருக்கிறார்.          இவர், தான் எதிர் கொண்ட போர்களில் தோல்வியே காணாதவர். கணைக்கால் இரும்பொறை என்னும் சேர மன்னருடன், கழுமலம் போரில் வெற்றி பெற்று அவரை சிறையில் அடைத்தார். அதன் பின்னர் புலவர் பொய்கையார் மூலம் இரும்பொறைத் தமிழை போற்றுபவர் என்பதை அறிந்து, அவரை விடுவிக்க சிறைச்சாலை சென்ற போது, சேரமான் கணைக்கால் இரும்பொறை தன்னை அலட்சியம் செய்த சோழ நாட்டுக் காவலர்கள் தந்த நீரை அருந்த மறுத்து, புறநானூற்று செய்யுள் ஒன்றை எழுதி வைத்து விட்டு உயிர் துறந்திருந்தார்.         கோசெங்கண்ணர் பிறக

சோழகங்கம் எனப்படும் பொன்னேரி.

Image
சோழ கங்கம்  எனப்படும் பொன்னேரி        தஞ்சாவூரில் இருந்து, மாமன்னர் ராஜேந்திர சோழன் தலைநகரை, கங்கை கொண்ட சோழபுரத்திற்கு மாற்றினார். படைகள் நகர்ந்து செல்லும்போது, தஞ்சையின் வயல்கள் அழிந்து போவதும், எதிரிகளின் கடற் படை தஞ்சையை எளிதில்  நெருங்க முடியும் என்பதும் காரணமாகக் கருதப் படுகிறது.          அரியலூர் பகுதியில் விவசாயம் செய்யப் படாமல், கொள்ளிடம் நதியால் மூன்று புற்மும் சூழப்பட்டு வெறுமனாக கிடந்த இந்தப் பகுதி, பெரிய தலை நகரத்திற்கு ஏற்றது என்று அவர் எண்ணியதே இதற்குக் காரணம். ஒரு புறம் மட்டும் பாதுகாப்பு இன்றி இருப்பதை கவனித்த அரசர், பாதுகாப்பு அரணாக இருக்க வேண்டும் என்பதற்காக கொள்ளிடம் நீரைத் தேக்கி வைத்து பயன்படுத்த ஏற்படுத்தியதே சோழகங்கம் ஏரி.          கப்பற் படை வலிமையின் மூலம் உலகை வென்ற அங்கிலேயர்கள், ஒரு தமிழ் மன்னன் 800 ஆண்டுகளுக்கு முன்பே தனது கப்பற் படை மூலம், தெற்கு ஆசியா முழவதும் கோலோச்சி இருக்கிறார் என்பதை அறிந்தார்கள். இதன் புகழைக் குலைப்பதர்காகவே, அப்போது, இந்த எரியின் நடுவே செல்லும் படி கும்பகோணம் நெடுஞ்சாலையை அமைத்தார்கள் என்று சொல்லப் படுகிறது. அதன் புகைப்படங்

நாணயம் ஆனவர்கள்

Image
Tநாணயமானவர்கள்.      நண்பர் ஒருவர், தன்னிடம் Debit card  இல்லை என்றும், விமானப் பயணச் சிட்டு ஒன்றை முன்பதிவு செய்து தருமாறும் வேண்டினார். 10000 ரூ டிக்கட் பதிவு செய்து தந்த பிறகு பயணம் செய்தார். பணம் கேட்க வேண்டாம் அவரே தருவார் என்று காத்திருந்தோம், கேட்பது நாகரிகம் அல்ல என்பதால். சில மாதங்கள் கழித்து வேறு வழியில்லாமல் கேட்ட போது அவர் சொன்ன பதில் “நான் அப்போதே கொடுத்து விட்டேனே”…!!!.      உறவினர் ஒருவர்….. நமக்கு ஆபத்து என்றால், வேடிக்கை பார்ப்பவர். தனக்கு ஆபத்து என்றால், நாம் ஓடோடி சென்று உதவ வில்லை என்பார். நிறைய கடன் வாங்கி சிக்கலில் இருந்தார். நம்மால் முடிந்தது என்று, ஒரு தொகையை தந்து உதவினோம். அதை திருப்பித் தர முடியாது, தரவும் மாட்டார் என்பது நன்றாகவேத் தெரியும். சில ஆண்டுகள் கழித்து, அதைப் போல 3 மடங்கு தொகையைக் கேட்டார். உடனேத் தந்து விடுவேன் என்றார். தற்சமயம் கையில் பணம் இல்லை என்றோம். அவருக்கு அதிக கோபம் வந்து விட்டது. “நான் கேட்டு பணம் இல்லை என்று எப்படி சொல்கிறீர்கள்?” என்றார். நொந்து போனோம்.      அண்டை வீட்டில், தனது பாட்டியை வேலைக்கு செல்லும் பேத்தி அடித்து வி

நாகரீகக் கோமாளி.

Image
நாகரீக கோமாளி    ஜோக்கர் என்னும் பெயரில் ஒரு நல்ல திரைப்படம் வந்தது. நேர்மையாக அரசாங்கம் நடக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் கோமாளிகள் என்பதாக காண்பித்திருந்த நல்ல ப(பா)டம் அது.            - சமீபத்தில் ஒரு சார்பதிவாளர் அலுவலகத்தில் வில்லங்க சான்றிதழ் வேண்டி விண்ணப்பம் செய்தோம். விண்ணப்பக் கட்டணம் 300 ரூ தாண்டாது. ஆனால், 760 ரூ வாங்கினார்கள். அதற்கு, ஒரு 3 செ மீ துண்டு காகிதத்தில் கையால் எழுதி பதிவெண் கொடுக்கிறார்கள்.             - குடி நீர் இணைப்பு வேண்டி, நகராட்சியில் மனு செய்த போதும் இதே நிலை. 3500 ரூ மட்டுமே வைப்புத்தொகை. 2000 ரூ சாலையை மீண்டும் செப்பனிடுவதற்கு என மொத்தம் 5500 ரூ மட்டுமேப் பெற வேண்டும். ஆனால், ரசீது தராமல் 12000 ரூ பெற்றுக் கொண்டும் கூட, குழாய் பதித்தப் பிறகு சாலையை தார் ஊற்றி மூட வில்லை. மண்ணை மட்டும் தள்ளி விட்டு சென்று விட்டார்கள்.             -  நண்பர்களாக இருந்தவர்கள், அரசாங்க வேலையில் சேர்ந்து விட்டால், அவர்கள் நமது நண்பர்கள் கிடையாது. அதிகாரிகள் மட்டுமே. 6 லிருந்து 12 ம் வகுப்பு வரை ஒரே பள்ளியில் படித்த வகுப்புத் தோழர் (நண்பர் இல்லை) ஒருவரிடம் ( நில அளவர்),