Posts

Showing posts from November, 2018

புதுசாக் கட்டிக்கிட்ட சோடி நாங்கங்க

Image
புதுசா சேர்ந்த சோடிக் குருவிகள் வீடு கட்ட முடிவு செய்தன. இரண்டு வார பரிசீலனைக்குப் பிறகு முற்றிலும் பாதுகாப்பான இடம் தேர்வு செய்யப்பட்டது. அடிக்கல் நாட்டுவிழா நடந்தேறியது. ஆண்குருவி பிறவியிலேயே Engineer. அவ்வப்போது பெண்குருவியின் ஆலோசனைகள் வழங்கப்பட்டன மூன்று நாள் அயராத உழைப்பில் சிறப்பாக ஒரு அழகிய இல்லம் தயாரனது கிழக்குவாசல் வீடு Luxury resident suitable for all weather is ready to House warming ceremony. விருந்தினர்க்கு வாசல் நின்று வரவேற்பு..

பவளக்காளை

Image
        டிராக்டருக பிரபலமானத்துக்கப்பறம் கிராமங்கள்ல எருதுமாடுங்க இல்லாமப் போயிடுச்சி. காய்ச்சல் நாட்கள்ல பசு மாட்டுக்கே தீனி (பசும்புல்) கிடைக்கிறது இல்ல. மாடுகளுக்கு தண்ணீர் கிடைக்கிறதும் சில நேரங்கள்ல பத்தாம போகுது. பல வருசத்துக்கு முந்தி பெரியப்பாரு ஒரு சோடி எருது (உழவு மாடு) வச்சிருந்தாரு. ஏழெட்டு உருப்படி ஆடும், 3 பசுமாடும் கூட வளர்த்தாக. அவுகளோடப் பிள்ளைக வீட்டுல இருக்கும் போது அதுல ஒரு சீவனக் கூட யாரும் வந்து விலை கேட்டுட முடியாது. அழுது  ஆர்ப்பாட்டம் பண்ணிரும் புள்ளைங்க. அதனால மாட்டை விற்கனும்னா வியாபாரிகள்லாம், பள்ளிக்கூடம் நடக்கிற சமயம் மட்டும்தான் வரமுடியும். அந்த சோடி எருதுல ஒருத்தன் பேரு விருவி மாடு. (Thanks to Google images) இன்னொருத்தன் பேரு பவளக்காளை. இரண்டு பேருக்கும் பெயரிலேயே வித்தியாசம் இருக்குல்ல? உழவு மாடுதான்னாலும் பயபுள்ள சல்லிக்கட்டு மாடு மாதிரி. சண்டியரு. அவருக்கு குணம் தோதுபடல்லைனா ஒருத்தரும் பக்கத்துல நெருங்க முடியாது. தீவனம் கூட வைக்கறதுக்கு நெருங்க முடியாது. பக்கத்து காட்டுக்காரகளோட மாடுங்க மேய்ச்சலுக்கு வரும்போதுதான் நம்ம நாயகன் வே