தெம்மாங்குப் பாட்டு - வாழ்க்கை குறிப்புகள்
"தெம்மாங்குப் பாட்டு"ங்கறது, நம்ம அழகுராசுப் பயலுக்கு "ப்ளஸ் -டூ" படிக்கிறப்ப, கணக்கு வாத்தியார் வச்சக் காரணப் பேரு. ஏன்னா பயபுள்ள அப்பெல்லாம் எங்க மேடையப் போட்டு, மைக்க குடுத்தாலும் "நான் பாட்டு பாடுதேண்"டு கெளம்பிடுவான்... அதனால கணக்குப் பரீட்சை அடிக்கடிக் கந்தலாயிடும். அதுலக் கடுப்பாயிப் போன பாலு வாத்தியார் சூட்டின நாமகரணம்தான் "தெம்மாங்குப் பாட்டு". அப்புடி மெர்சலாப் போய்கிட்டு இருந்த பயலோட, வரலாற்றில ஒரு கருப்பு நாளா ஒரு நாள் வந்திச்சு. என்னன்னா, பத்து வருஷம் முன்னாடி ஒரு நா, LIC சம்பந்தமா ஒரு பேச்சுப் போட்டின்னு பயல கூட்டிட்டுப் போயிடான்ய்ங்க. அவனுக்கு இன்னைய வரைக்கும் LIC- ன்னா என்னான்னு தெரியாது. அப்ப இருந்த ஆர்வக் கோளாறுல, பயலும் ஒண்ணுமே தெரியாட்டியும், சமாளிப்போமுன்னு கெளம்பிப் போயிட்டான். அங்கப் பாத்தா ஒரு அறுபது பேரு குறுக்கும் நெடுக்குமா நடந்துக்கிட்டு அவிங்களா பேசிக்கிட்டுத் திரியிராய்ங்க(பயிற்சியாம்). அடடா இத்தனைப் பேர எப்புடிடா சமாளிக்கறதுன்னு மனசுக்குள்ள டரியல் ஆயிட்டாலும் பய...