Posts

Showing posts with the label சோழகங்கம்

சோழகங்கம் எனப்படும் பொன்னேரி.

Image
சோழ கங்கம்  எனப்படும் பொன்னேரி        தஞ்சாவூரில் இருந்து, மாமன்னர் ராஜேந்திர சோழன் தலைநகரை, கங்கை கொண்ட சோழபுரத்திற்கு மாற்றினார். படைகள் நகர்ந்து செல்லும்போது, தஞ்சையின் வயல்கள் அழிந்து போவதும், எதிரிகளின் கடற் படை தஞ்சையை எளிதில்  நெருங்க முடியும் என்பதும் காரணமாகக் கருதப் படுகிறது.          அரியலூர் பகுதியில் விவசாயம் செய்யப் படாமல், கொள்ளிடம் நதியால் மூன்று புற்மும் சூழப்பட்டு வெறுமனாக கிடந்த இந்தப் பகுதி, பெரிய தலை நகரத்திற்கு ஏற்றது என்று அவர் எண்ணியதே இதற்குக் காரணம். ஒரு புறம் மட்டும் பாதுகாப்பு இன்றி இருப்பதை கவனித்த அரசர், பாதுகாப்பு அரணாக இருக்க வேண்டும் என்பதற்காக கொள்ளிடம் நீரைத் தேக்கி வைத்து பயன்படுத்த ஏற்படுத்தியதே சோழகங்கம் ஏரி.          கப்பற் படை வலிமையின் மூலம் உலகை வென்ற அங்கிலேயர்கள், ஒரு தமிழ் மன்னன் 800 ஆண்டுகளுக்கு முன்பே தனது கப்பற் படை மூலம், தெற்கு ஆசியா முழவதும் கோலோச்சி இருக்கிறார் என்பதை அறிந்தார்கள். இதன் புகழைக் குலைப்பதர்காகவே...