ஆம் ஆத்மிக் கட்சி (AAM AADMI PARTY)
ஆம் ஆத்மிக் கட்சி (AAM AADMI PARTY) டெல்லித் தேர்தலுக்கு முன்பு எழுத வேண்டும் எனத் திட்டமிட்டப் பதிவு இது. ஆனால் AAP- ஆம் ஆத்மி கட்சி செல்வாக்கான வெற்றியைத் தனது முதல் தேர்தலிலேயேப் பெற்று விட்டப் பிறகுதான் எழுதுவதற்கு நேரம் அமைந்தது. புகழ் பாடும் கட்டுரை எனக் கொண்டாலும் நல்லதுதான். நல்லது செய்ய வேண்டும் என யார் வந்தாலும் அவர்களை நாம் ஆதரிக்க வேண்டும். இந்திய வருவாய் பணியில், கவுரவம் மிக்க ஒருப் பொறுப்பில் இருந்த ஒருவர் தனது பதவியத் துறந்து விட்டு, இந்தியாவிற்கு நல்லது செய்தேத் தீருவேன் அன்றுக் கங்கணம் கட்டிக் கொண்டு களத்தில் குதித்து இருக்கிறார். இவர் சினிமா நடிகர் அல்ல. பெரிய அரசியல் குடும்பத்தின் செல்ல வாரிசும் அல்ல. முதல் தேர்தலிலேயே 28 இடங்களைக் கைப்பற்றுவது என்பது சாதாரணமானது அல்ல. அதுவும் தலைநகரில், பெரும் புள்ளிகளை எதிர்த்து. இந்த 28 இடங்கள் வென்றதால், அவரைத் தங்களது ஆட்சிக்கு ஆதரவளிக்க வைக்க பெரியக் கட்சிகளில் இருந்து எத்தனைக் கோடிக்குப் பேரம் (குதிரைப் பேரம்) பேசப் படும் என்கிற சங்கதிகள் எல்லாம் நமக்கு பரிச்சயமானவையே...!! ஆனால் இவரைப்