Posts

Showing posts with the label naadijothidam

நாடி ஜோதிடம் என்கிற பித்தலாட்டம்

Image
யார் மனசில யாரு என்கிற நிகழ்ச்சி விஜய் டிவியில் சில வருடங்கள் முன்பு ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தது. அதை நடத்துபவர் 21 கேள்விகள் கேட்பதன் மூலம், மனதில் உள்ள பிரபலத்தின் பெயரைச் சொல்வார். அதையே நூற்றுக்கும் மேற்பட்ட கேள்விகள் கேட்டு, நமது பெயர் மற்றும் தாய்தந்தை பெயரைக் கூறிவிட்டால் அதுதான் நாடி ஜோதிடம். பெரியதாக ஏதாவது ஒரு சித்தர் படம் பிரேம் போட்டு வைத்திருப்பார்கள். ஓலைச்சுவடிகளில் ஒன்றுமேக் கிடையாது. நம் வாயிலிருந்தே பல குறிப்புகளைப் பெற்று, நமக்கே பெயர்களைக் கண்டு பிடித்து விட்டதாக அல்வா கொடுப்பதுதான் திறமை. நமது வாயிலிருந்தேப் பெயர்கள் கணிக்கப் பட்டன என்பது தெரியாமல், நாம் அடடே, நம்மைப் பற்றிக் கூட ஓலையில் எழுதி இருக்கிறார்களே எனப் பரவசமடைந்து விடுகிறோம். காதில் சுற்றி உள்ளப் பூ, வெளியே வந்த பிறகுதான் உரைக்கிறது. பின்வருமான கேள்விகள் 70, 80 முறை கேட்கப்படும். 1. நான்கெழுத்துப் பெயரா? 2. முருகன் அல்லது பெருமாள் பெயரா? 3. அம்மன் பெயரா? 4. நீங்கள் கடைசி பிள்ளையா? 5. துணைக்காலில் பெயர் முடியுமா? 6. வடமொழி எழுத்து வருமா? 7. இரண்டாகப் பிரிக்க முடியுமா? 8. கடைசி எழுத்து ன்...