Posts

Showing posts with the label joker

நாகரீகக் கோமாளி.

Image
நாகரீக கோமாளி    ஜோக்கர் என்னும் பெயரில் ஒரு நல்ல திரைப்படம் வந்தது. நேர்மையாக அரசாங்கம் நடக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் கோமாளிகள் என்பதாக காண்பித்திருந்த நல்ல ப(பா)டம் அது.            - சமீபத்தில் ஒரு சார்பதிவாளர் அலுவலகத்தில் வில்லங்க சான்றிதழ் வேண்டி விண்ணப்பம் செய்தோம். விண்ணப்பக் கட்டணம் 300 ரூ தாண்டாது. ஆனால், 760 ரூ வாங்கினார்கள். அதற்கு, ஒரு 3 செ மீ துண்டு காகிதத்தில் கையால் எழுதி பதிவெண் கொடுக்கிறார்கள்.             - குடி நீர் இணைப்பு வேண்டி, நகராட்சியில் மனு செய்த போதும் இதே நிலை. 3500 ரூ மட்டுமே வைப்புத்தொகை. 2000 ரூ சாலையை மீண்டும் செப்பனிடுவதற்கு என மொத்தம் 5500 ரூ மட்டுமேப் பெற வேண்டும். ஆனால், ரசீது தராமல் 12000 ரூ பெற்றுக் கொண்டும் கூட, குழாய் பதித்தப் பிறகு சாலையை தார் ஊற்றி மூட வில்லை. மண்ணை மட்டும் தள்ளி விட்டு சென்று விட்டார்கள்.             -  நண்பர்களாக இருந்தவர்கள், அரசாங்க வேலையில் சேர...