Posts

Showing posts with the label honest

நாணயம் ஆனவர்கள்

Image
Tநாணயமானவர்கள்.      நண்பர் ஒருவர், தன்னிடம் Debit card  இல்லை என்றும், விமானப் பயணச் சிட்டு ஒன்றை முன்பதிவு செய்து தருமாறும் வேண்டினார். 10000 ரூ டிக்கட் பதிவு செய்து தந்த பிறகு பயணம் செய்தார். பணம் கேட்க வேண்டாம் அவரே தருவார் என்று காத்திருந்தோம், கேட்பது நாகரிகம் அல்ல என்பதால். சில மாதங்கள் கழித்து வேறு வழியில்லாமல் கேட்ட போது அவர் சொன்ன பதில் “நான் அப்போதே கொடுத்து விட்டேனே”…!!!.      உறவினர் ஒருவர்….. நமக்கு ஆபத்து என்றால், வேடிக்கை பார்ப்பவர். தனக்கு ஆபத்து என்றால், நாம் ஓடோடி சென்று உதவ வில்லை என்பார். நிறைய கடன் வாங்கி சிக்கலில் இருந்தார். நம்மால் முடிந்தது என்று, ஒரு தொகையை தந்து உதவினோம். அதை திருப்பித் தர முடியாது, தரவும் மாட்டார் என்பது நன்றாகவேத் தெரியும். சில ஆண்டுகள் கழித்து, அதைப் போல 3 மடங்கு தொகையைக் கேட்டார். உடனேத் தந்து விடுவேன் என்றார். தற்சமயம் கையில் பணம் இல்லை என்றோம். அவருக்கு அதிக கோபம் வந்து விட்டது. “நான் கேட்டு பணம் இல்லை என்று எப்படி சொல்கிறீர்கள்?” என்றார். நொந்து போனோம்.      அ...