அழகுராசு காதல் கதை -1

நம்ம அழகுராசுப் பயலுக்கு, என்னப் பாடுபட்டாச்சும் ஏதாவது ஒரு புள்ளைய காதலிச்சுக் கலியாணம் பண்ணிகிடனும்கிறது ஒரு காலத்துல வாழ்நாள் லட்சியமா இருந்திச்சு!! ரெண்டு வீட்டுலயும் எல்லாருமே ஒத்துக்கிட்டாக்கக் கூட இவன் ஒத்துக்கிடாம, என்னமாச்சும் காரணம் கண்டுக்கிட்டு, வீட்ட எதுத்துதேன் கலியாணம் பண்ணனுமின்னு ஒரே.. வீம்பாத் திரிஞ்சிக்கிருந்தான் பயபுள்ள!. தமிழ் சினிமாக்கள் நிறையப் பார்த்ததினாலையோ என்னம்மோ, நல்லாருந்தப் பயலுக்கு இப்புடி ஒரு கிறுக்குப் புடிச்சுக்கிருச்சி. சின்னப் புள்ளையா இருந்தப்பவே கூடப் படிச்ச ஒரு கிறித்தவப் பொண்ணு மேல ஒரு தனிப் பிரியம் பயலுக்கு!!. ( Puppy Love?) ஆனா படிக்கறதுக்காக வேற ஊருக்கு போனதுக்கப்புறம் அந்த பொண்ணுக்கு என்னா ஆச்சின்னு கண்டுபிடிக்கறதுக்கு அவனுக்கு தங்கர் பச்சான் அளவுக்கு வாய்ப்புக் கெடைக்கல. அழகிப் படத்தப் பாத்து ஒரு தடவ ஆத்தாமைப் பட்டுக் கிட்டதோடச் சரி!! ஆட்டோக்ராப் படமெல்லாம் கூட செயிச்சதுக்குக் காரணம் நம்ம அழகுராசு மாதிரி, "நெஞ்சம் மறப்பதில்லை" டைப்பு ஆ...