ஒரு நாகரிக படைப்புத் திருட்டு!
நண்பர் ஒருவர் மின்னஞ்சல் செய்திருந்த வரிகள். ! களவாணிப் படம் பார்த்து ஏற்கனவே எனது கிராமம் பற்றிய ஏக்கத்தில் இருந்த, என்னை நிறைய விசயங்களை இழப்பதாக எண்ண வைத்து விட்ட வரிகள். வயல்வெளி பார்த்து வறட்டி தட்டி ஓணாண் பிடித்து ஓடையில் குளித்து எதிர்வீட்டில் விளையாடி எப்படியோ படித்த நான் ஏறிவந்தேன் நகரத்துக்கு ! சிறு அறையில் குறுகிப் படுத்து சில மாதம் போர்தொடுத்து வாங்கிவிட்ட வேலையோடு வாழுகிறேன் கணிப்பொறியோடு ! சிறிதாய்த் தூங்கி கனவு தொலைத்து காலை உணவு மறந்து நெரிசலில் சிக்கி கடமை அழைக்க காற்றோடு செல்கிறேன் காசு பார்க்க ! மனசு தொட்டு வாழும் வாழ்க்கை மாறிப் போகுமோ ? மௌசு தொட்டு வாழும் வாழ்க்கை பழகிப் போகுமோ ? வால்பேப்பர் மாற்றியே வாழ்க்கை தொலைந்து போகுமோ ? சொந்த பந...