அழகுராசு வகையறா ஆளுங்கப் பண்ணின "தெம்மாங்கு"- கள் சில...!

எல்லாருமே பள்ளிக்கொடம் படிக்கும்போது பல தில்லுமுல்லு பண்ணியிருப்போம். ஆனாக்க சில விசயங்களக் கேட்டா நம்ம எல்லாம் சொக்கத்தங்கமின்னு சொல்லிக்கற அளவுக்கு, சிலபேரு தெல்லவாரித்தனம் பண்ணி இருப்பாங்க. என்னோட நண்பர் ஒருத்தர் வீட்டில் காசு வாங்குறதுக்கு செஞ்ச உத்திய சொன்னாரு. அது என்னன்னா வீட்டிலப் படிக்காத அப்பாக்கிட்டப் போயி, கம்பியூட்டருக்கு ஆயில் ஊத்தக் காசு வேனுமுன்னுக் கேட்டு வாங்கி செலவு செஞ்சுக்கிட்டு இருந்துருக்காரு. அவரும் சரி தையல் மிசினுக்கு, சயிக்கிளுக்கு எல்லாம் ஊத்தறது மாதிரி கம்பியூட்டருக்கும் ஊத்துனாத் தான் ஒழுங்கா வேல செய்யும் போல இருக்குன்னு நெனச்சுக்கிட்டு, மாசா மாசம் கேக்கும் போதெல்லாம் தவறாம குடுத்துருக்காரு. நம்ம கிராமத்து அப்பா, அம்மமாருங்களுக்கு எல்லாம் இந்த பெற்றோர் ஆசிரியர் சங்க மீட்டிங் அப்படிங்கறது ஒரு கவுரவமான விஷயம். அங்கன வந்துதான் மத்த ஆளுங்கள விட தான் கொஞ்சம் விவரமான ஆளுன்னுக் காட்டரதுக்காகவே, "ஏன் ஓங்கப் பள்ளிக்கூடத்துல கராத்தே, குங்க...