சமீபத்திய மகிழ்ச்சியூட்டும் செய்திகள் சில...

பிரதமர் அவர்களின் கடந்த வார அறிக்கைகள் சில படிக்கும் போதே, அடடா.., இப்படி நடந்தால் பரவாயில்லையே, நன்றாக இருக்குமே எனத் தோன்ற வைத்தன. அவற்றுள் ஒன்று, Right to Reject Provision in Elections திரு . மன்மோகன் சிங் ஐயா அவர்கள் தனது அரசாங்கம், தேர்தல் சீர்திருத்தங்கள் தொடர்பான பல்வேறு கோரிக்கைகளை தீவிரமாகப் பரிசீலித்து வருவதாகத் தனது கடிதம் ஒன்றில் தெரிவித்து இருக்கிறார். அவற்றில் ஒன்று 'RIGHT TO REJECT'. அதாவது தேர்தலில் நமதுத் தொகுதியில் போட்டியிடும் எந்த வேட்பாளரும் பொருத்தமில்லாதவராகத் தோன்றினால் நாம் வாக்குச் சீட்டிலேயே நமது விருப்பமின்மையைப் பதிவு செய்வதன் மூலம் அவர்களை புறக்கணிக்கலாம். அதே சமயத்தில் தேர்தலை புறக்கணித்ததாகவோ, அல்லது ஒரு தவறான நபரைத் தேர்ந்தெடுத்து விட்டதாகவோ நாம் வருந்த வேண்டியது இல்லை. ஒருவேளை அதிகப் படியான வாக்குகள் " யாரையும் தேர்வு செய்ய விருப்பமில்லை- None of the above" என்று பதிவாகும் பட்சத்தில் அந்தத் தேர்தலை ரத்து செய்து விட்டு சில மாதங்களுக்குப் பிற...