மாமன்னன் முதலாம் ராசேந்திரச் சோழன்

இந்தியாவை ஆண்ட மன்னர்களில், தமிழ் மன்னர்களுக்குத் தனிப் பெருமை உண்டு. இந்தியாவைத் தாண்டிய நாடுகளையும் வென்றுத் தங்களது செங்கோலின் கீழ் கொண்டு வந்தவர்கள். அதிலும் ராசேந்திரச் சோழன் பராக்கிரமம் அதிகம் மிக்கவர் என்று அறிய முடிகிறது. அவரது கப்பற்படை வலிமை மிக்கதாக விளங்கி இருக்கிறது. அதனைக் கொண்டு பல தீவுகளையும், இலங்கை முழுவதையும் வென்ற அவர் கங்கைச் சமவெளி வரை தனது தீரத்தை நிலை நிறுத்தி இருக்கிறார். இம்மன்னரது தளபதியாக இருந்த அரையன் ராஜாதிராஜன் என்பவரதுப் பெயரைக் கேட்ட மாத்திரத்தில் பல மன்னர்களது உறக்கம் கெடும் எனப் படித்தது உண்டு. அவரைப் பற்றி திரு அகிலன் அவர்களால் எழுதப்பட்ட “வேங்கையின் மைந்தன்” நாவல் சாகித்திய அகாதெமியின் விருது வழங்கப்பட்டு கவுரவிக்கப் பட்டிருக்கிறது. வேங்கை எனக் குறிப்பிடப்படுபவர் மாமன்னன் ராஜராஜ சோழன். ராசேந்திரச் சோழன் கங்கை வரைப் படை எடுத்த சம காலத்தில், வட இந்தியாவை ஆக்கிரமித்த முகலாய மன்னனும் (முகம்மது கோரி?), ராசேந்திரச் சோழனும் போர்க்களத்தில் சந்தித்திருந்தால்,...