இப்படியும் இருக்குது இந்தியா – 2
கு(மு)டியாட்சி : நமது ஜனநாயக அமைப்பு மெல்ல மெல்ல அரசியல்வாதிகளால் ஒரு மன்னராட்சி முறையைப் போன்று மாற்றப்பட்டு விட்டது. நம்மால் பதவியில் இருக்கும் எந்த ஒரு அரசியல்வாதியையும் (வார்டு கவுன்சிலர் தொடங்கி), அரசு அதிகாரியைக் கூட ஒரு தவறுக்காகத் தட்டிக் கேட்டுவிட முடியாது. ஆள்பலம், அதிகார பலம், பண பலம் பாயும். வாரிசு அரசியல் முறை : ஒரு பிரபல அரசியல்வாதியின் மகன் என்றால் பெரும்பாலும் அவர் அரசியல்வாதியாகவே இருப்பார். அல்லது அரசியல்வாதியாகக் கொண்டுவரப்படுவார் (இந்தியா முழுவதிலும்) மன்னராட்சியில்தான் இளவரசு முறை இருந்தது. அந்த இளவரசரும் கூட, போர்க்கலைகள் அனைத்திலும் வல்லவராக இருந்தாக வேண்டும், மேலும் நல்ல நிர்வாகியாகவும் இருந்தாக வேண்டும். இல்லையென்றால் அவர் வீழ்த்தப்பட்டு மற்றொருவர் ஆட்சியைப் பிடித்துக் கொள்வார். துரதிருஸ்டவசமாக நமது ஜனநாயக முறைப்படி உருவாக்கப் படும் வாரிசு அரசியல்வாதிகளில் பலரும் வாரப் பத்திரிக்கையில் நகைச்சுவைத் துணுக்கு எழுதப் பயன்படும் நாயகர்களாகவே உள...