வானம் வழங்குமெனில்..!!
சில பேச்சாளர்களுக்கு, பலரையும் வசீகரிக்கும் சக்தி உண்டு, அவர்களால் தங்களதுப் பேச்சின் மூலம் பல சமுதாய மாற்றத்தை உண்டு செய்ய முடியும். சிலருக்கு பேசியே பலரை ஏமாற்றும் திறமை உண்டு. மனிதர்கள் சூழ்நிலை மற்றும் தேவைக்கு ஏற்பத் தங்கள் குணங்களை மாற்றிக் கொள்ளும் தன்மைக் கொண்டவர்கள். ஒருவரின் பேச்சை வைத்து நல்லவர், தீயவர் என முடிவெடுப்பது கடினம். ஒரு சமயம், பக்கத்து வயலைச் சேர்ந்த ஒரு பெரியவருடன் சேர்ந்து மாவட்ட விவசாயிகள் குறைதீர் நாள் கூட்ட்த்திற்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சென்றிருந்தோம். அங்கு எங்களது வயலுக்கு நீர்ப் பாசனம் தரும் ஏரியின் மதகு புதுப்பிக்கும் பணியை விரைவாக முடிக்க வேண்டி, கோரிக்கை மனு ஒன்றைத் தருவதாக ஏற்பாடு. அந்தப் பணியை குத்தகை எடுத்தவர் ஒரு விவசாயி. பல சங்கத்துப் பிரதிநிதிகளும் பலக் குறைகளை ஆட்சியரிடம் முன் வைத்தார்கள். ஆட்சியரும் கவனமாகக் கேட்டுக் கொண்டு, நிவாரணங்களை கூறிக் கொண்டிருந்தார். எங்களது ஏரியின் மதகுப் புதுப்பிக்கும் பணியைக் குத்தகை எடுத்திருந்த குத்தகைதாரரும், ஒருப் பிரதிநிதியாக விவசாயிகளின் பல்வேறு இன்னல்களைப் பற்ற...