மயில் போல வேணும் பொண்ணு...

“உங்கப் பங்காளிக்கு ‘ஆனந்தி’ய நிச்சயம் பண்ணிரலாமுன்னு இருக்கோம், நீ என்ன நினைக்கிற மாப்பிள்ளை?” என்று கேட்டு(கேட்க வைத்து)ப் போனது ஒரு ‘ஆசை’..... கணவன் குடிகாரன், பிரிந்துவிட்டேன்.., மரணம் பற்றி யோசிக்கிறேன், மனமிருந்தால் சொல்லு இல்லையெனில் உன் மிஞ்சிய வாழ்வில் என்னை மன்னித்து விடு என்று திகில் கிளப்பியது ஒரு ‘மனசு’.... ஆலய வாயிலில் வீடென்று அம்மைக்குப் பிடித்துவிட, பொம்மை ஒன்றைத் தந்துவிட்டுப் புன்னகைத்தது ஒரு ‘மனசு’... வேறு தேசம் எனிலும், நானும் பச்சை (பச்சைக் குத்திய)த் தமிழச்சி, மணம் புரிவோமா? என்று, அம்மாவைக் கூட்டிக் கொண்டு அகம் தேடி வந்து அச்சமூட்டியது ஒரு மனசு... சூதாடிக் கணவன் தந்தக் குழந்தையுடன் நான், வேறு மொழியாய் இருந்தாலும் என்ன, மாதாஜி சொன்னதால்தான் செய்கிறேன் என்று, தேனீர்க் கோப்பையை சட்டென்று வைத்து விட்டு, பதட்டத்தோடுப் பட்டென்றுப் பறந்தோடியது மற்றொரு ‘மனசு’.... தோளில் தொங்கும் துப்பாட்டாவை விருட்டெனத் தலையில் அணிந்து, நானும் பாரம்பரியம் பின்பற்...