ஆலய தரிசனம் - 2/3
குத்தாலம் அருகில் உள்ள பாடல் பெற்றத் திருத்தலங்கள் சிலவற்றைக் காண்பது என முடிவாயிற்று. அதில் முதலில் பார்த்தது குத்தாலம் சொன்னவாறரிவார் திருத்தலம்தான். : ஆலயப் புனரமைப்பு பணிகள் நடை பெற்றுக் கொண்டிருக்கின்றன. சன்னதியின் கல்வெட்டு எழுத்துக்களில் இறைவன் பெயரான `சொன்னவாறரிவார்` (உக்தவாகீஸ்வரர்) என்பதை கண்டுகொள்ள முடிந்தது. ஜெயங்கொண்ட சோழ வள நாட்டைக் கண்டு கொண்டேன் குலோத்துங்க சோழ வள நாட்டையும் கண்டு கொண்டேன் தஞ்சாவூர் குறிப்பிடப்பட்டு உள்ளது மணவாளப் பட்டன் எழுத்து / நாராயணப் பட்டன் எழுத்து இறைவன் பெயரான சொன்னவாறரிவார் அதிகாலையில் ஆலயம் திறக்கப் பட்டவுடன், இறைவன் அருளால் அடியேனுக்கு நல்ல தரிசனம் கிட்டியது. அந்தத் திருப்தியுடன் அங்கு இருந்து திருவேள்விக்குடிக்கு சென்றேன். திருவேள்விக்குடி: குத்தாலத்தில் இருந்து சுமார் 3 கிமீ தொலைவில் உள்ளது திருவேள்விக்குடி. திருக்குளம் ஆடல் வல்லானது காலை ஆரேனும் அழிக்கவும் இயலுமோ? ராஜராஜ தேவர் பெயரைக் கண்டுகொண்டதில் அற்ப மகிழ்ச்சி ஆளே இல்லாத பிரகாரத்தில் அப்பனும் அடியேனும்.. அம்மன் சன்னதி சுவற்றிலும் ராஜராஜர் பெயர் உள்ளன (எழுத்துக் க...