Posts

ஒரு நாகரிக படைப்புத் திருட்டு!

        நண்பர் ஒருவர் மின்னஞ்சல் செய்திருந்த வரிகள். !  களவாணிப் படம் பார்த்து ஏற்கனவே எனது கிராமம் பற்றிய ஏக்கத்தில் இருந்த, என்னை நிறைய விசயங்களை இழப்பதாக எண்ண வைத்து விட்ட வரிகள். வயல்வெளி   பார்த்து வறட்டி   தட்டி ஓணாண்   பிடித்து ஓடையில்   குளித்து எதிர்வீட்டில்   விளையாடி எப்படியோ   படித்த   நான் ஏறிவந்தேன்   நகரத்துக்கு  ! சிறு   அறையில்   குறுகிப்   படுத்து சில   மாதம்   போர்தொடுத்து வாங்கிவிட்ட   வேலையோடு வாழுகிறேன்   கணிப்பொறியோடு  ! சிறிதாய்த்   தூங்கி கனவு   தொலைத்து காலை   உணவு   மறந்து நெரிசலில்   சிக்கி கடமை   அழைக்க காற்றோடு   செல்கிறேன் காசு   பார்க்க  ! மனசு   தொட்டு வாழும்   வாழ்க்கை மாறிப்   போகுமோ   ? மௌசு   தொட்டு வாழும்   வாழ்க்கை பழகிப்   போகுமோ   ? வால்பேப்பர்   மாற்றியே வாழ்க்கை தொலைந்து   போகுமோ   ? சொந்த   பந...

அசடு வழியரதுன்னா எப்புடி?!

Image
           நம்மள யாராச்சும் வெளிநாட்டுக்காரங்க பாத்தாங்கன்னா, மொதல்ல தெரிஞ்சுக்கனும்ன்னு கேக்குறது இந்தியாவுல நீ எந்த பக்கம்ங்கறது தான்.  அவிங்களுக்கிட்டப் போயி நானு பெரும்புலியூர் பக்கத்துல....,  கூப்புடு தூரத்துல இருக்க கோதண்டராம புரமுன்னு  சொல்லிப் புரிய வைக்கறதுக்குள்ள இந்திய மேப்பையே முழுசா வரயற மாதிரி ஆயிப்போவும்!!!.   அதுக்குப் பயந்துக்கிட்டு நான் சவுத் இந்தியா ன்னு சொல்லுறது புத்திசாலித்தனமா! சவுத் இந்தியங்கறது ஒன்னோடக் கலரப் பாத்தாலே எங்களுக்குத் தெரியுமுடி. நீ சவுத் இந்தியாவுல எங்கிட்டு ன்னுவாங்க!  நான் சென்னைன்னு பொத்தாம் பொதுவாச் சொல்லி சமாளிச்சர்றது வழக்கம். சில சமயம் சென்னைய எங்க இருக்குன்னுத் தெரிஞ்ச சில பயபுள்ளைக,  விடாம "ஓ... சென்னை எனக்குத் தெரியும். நீ சென்னை தானா!? நான் ஒரு பதினஞ்சு வருசத்துக்கு முந்தி அங்க வந்துருக்கேன் நீ சென்னையே தானா? இல்லப் பக்கமா"ன்னு கேப்பாங்க!?   இல்ல சாமி!!  நான் சென்னையில இருந்து ஒரு ஆறு மணி நேரம் போனாக்கத்தான் எங்க ஊருக்குப் போவ முடியுமின்னு சொல்லியா...

அழகுராசு காதல் கதை -1

Image
     நம்ம அழகுராசுப் பயலுக்கு, என்னப் பாடுபட்டாச்சும் ஏதாவது ஒரு புள்ளைய காதலிச்சுக் கலியாணம் பண்ணிகிடனும்கிறது  ஒரு காலத்துல வாழ்நாள் லட்சியமா இருந்திச்சு!! ரெண்டு வீட்டுலயும்  எல்லாருமே ஒத்துக்கிட்டாக்கக் கூட இவன் ஒத்துக்கிடாம, என்னமாச்சும் காரணம் கண்டுக்கிட்டு,  வீட்ட எதுத்துதேன்  கலியாணம் பண்ணனுமின்னு ஒரே.. வீம்பாத் திரிஞ்சிக்கிருந்தான் பயபுள்ள!. தமிழ் சினிமாக்கள் நிறையப் பார்த்ததினாலையோ என்னம்மோ,  நல்லாருந்தப் பயலுக்கு இப்புடி ஒரு கிறுக்குப்  புடிச்சுக்கிருச்சி.    சின்னப் புள்ளையா இருந்தப்பவே கூடப் படிச்ச ஒரு கிறித்தவப் பொண்ணு மேல ஒரு தனிப் பிரியம் பயலுக்கு!!. ( Puppy Love?) ஆனா படிக்கறதுக்காக வேற ஊருக்கு  போனதுக்கப்புறம் அந்த பொண்ணுக்கு என்னா ஆச்சின்னு கண்டுபிடிக்கறதுக்கு அவனுக்கு தங்கர் பச்சான் அளவுக்கு வாய்ப்புக் கெடைக்கல. அழகிப் படத்தப் பாத்து ஒரு தடவ ஆத்தாமைப் பட்டுக் கிட்டதோடச் சரி!! ஆட்டோக்ராப் படமெல்லாம் கூட செயிச்சதுக்குக் காரணம் நம்ம அழகுராசு மாதிரி, "நெஞ்சம் மறப்பதில்லை" டைப்பு ஆ...

வாய் வலிக்க சிரிங்க....

இந்த குறும்படம் எனது விரிவுரையாலரால் , பல்கழைக்கழகத்தில் காண்பிக்கப் பட்டது. பணியிடத்தில் தலைகவசம் அணியாமல், (பணியாமல்) பணியாற்றும் ஒருவரால் என்ன நேர்கிறது என்று கீழுள்ள வீடியோவைப் பாருங்கள்... பழையப் பாண்டியராஜன் படங்களில் வருவதுப் போல் அதற்கு பின்னணி இசை சேர்த்திருக்கிறார்கள்... ஒலியுடன் பாருங்கள்... youtube கதை சொல்லும் நீதி :                 தயவு செய்து தமிழகத்து இரு சக்கர வாகன ஓட்டிகள் எல்லா நேரமும் தலைக் காப்பு கவசம் ( Helmet ) அணியுங்கள். நான் வசிக்கும் இந்த வளர்ந்த நாட்டில் அவ்வாறு அணியாமல் செல்லவே முடியாது!! மீறி சென்றால் டவுசரை கழட்டி (அபராதம் என்கிறப் பெயரில்) அனுப்பி விடுவார்கள். (கதைய விட நீதி ரெம்பப் பெரிசா இருக்கேப்பா.... !!! என்கிற உங்கள் ஆதங்கம் புரிகிறது.)

தெம்மாங்குப் பாட்டு - வாழ்க்கை குறிப்புகள்

"தெம்மாங்குப் பாட்டு"ங்கறது,  நம்ம அழகுராசுப் பயலுக்கு "ப்ளஸ் -டூ" படிக்கிறப்ப, கணக்கு வாத்தியார் வச்சக் காரணப் பேரு.  ஏன்னா பயபுள்ள அப்பெல்லாம் எங்க மேடையப் போட்டு, மைக்க குடுத்தாலும் "நான் பாட்டு பாடுதேண்"டு கெளம்பிடுவான்... அதனால கணக்குப் பரீட்சை அடிக்கடிக் கந்தலாயிடும்.  அதுலக் கடுப்பாயிப் போன  பாலு வாத்தியார் சூட்டின நாமகரணம்தான் "தெம்மாங்குப் பாட்டு".     அப்புடி மெர்சலாப் போய்கிட்டு இருந்த பயலோட, வரலாற்றில ஒரு கருப்பு நாளா ஒரு நாள் வந்திச்சு. என்னன்னா,  பத்து வருஷம் முன்னாடி  ஒரு நா, LIC சம்பந்தமா ஒரு பேச்சுப் போட்டின்னு பயல கூட்டிட்டுப் போயிடான்ய்ங்க.  அவனுக்கு இன்னைய வரைக்கும் LIC- ன்னா என்னான்னு தெரியாது. அப்ப இருந்த ஆர்வக் கோளாறுல, பயலும் ஒண்ணுமே தெரியாட்டியும், சமாளிப்போமுன்னு கெளம்பிப் போயிட்டான். அங்கப் பாத்தா ஒரு அறுபது பேரு குறுக்கும் நெடுக்குமா நடந்துக்கிட்டு அவிங்களா  பேசிக்கிட்டுத் திரியிராய்ங்க(பயிற்சியாம்). அடடா  இத்தனைப் பேர எப்புடிடா சமாளிக்கறதுன்னு மனசுக்குள்ள டரியல் ஆயிட்டாலும் பய...

ஒவ்வொரு தமிழனும் கட்டாயம் படிக்க வேண்டிய செய்தி

   சமீபத்தில் அமெரிக்காவின் அலாஸ்கா மாநிலத்தில் " மரியா ஸ்மித் ஜோனெஸ் " என்ற பெண்மணி இறந்து விட்டார் . ஒன்பது பிள்ளைகளுக்கு   தா யான இவர் இறக்கும் போது இவருடைய வயது 89. இவருடைய இறப்பு பலருக்கு துயரத்தை கொடுத்துள்ளது . அவருடைய இழப்பை யாராலுமே ஈடு செய்ய முடியாது என்று சொல்கிறார்கள் . பழங்குடி இனத்தை சேர்ந்த மரியா ஸ்மித் அலாஸ்காவில் வாழும் பழங்குடி மக்களின் உரிமைக்காக பல போராட்டங்களை மேற்கொண்டவர் . ஆனால் அவருடைய இறப்பு யாராலும் ஈடு செய்ய முடியாததாக பார்க்கப்படுவதற்கு காரணம் அது இல்லை . உண்மையான காரணம் , மரியா ஸ்மித் போகும் போது ஒரு மொழியையும் தன்னுடனே சேர்த்துக் கொண்டு போய் விட்டார் . ஆம் , அலாஸ்காவின் பழங்குடி மக்களின் மொழிகளில் ஒன்றான " ஏயக் " என்கின்ற மொழியை பேசத் தெரிந்த உலகின் கடைசி மனிதராக அவர் மட்டும்தன் இருந்தார் . அவர் இறந்ததன் பிறகு இன்றைக்கு உலகில் யாருக்குமே அந்த மொழியை பேசத் தெரியாது .        அவர் இறந்த தினத்தொடு உலகில் உள்ள பல மொழிகளில் ஒரு மொழி அழிந...