Posts

மனம்கவர் மணாலி – 2

Image
கோவிலின் உள்ளே...: இங்கிருந்துத் தெரியும் மலைச் சிகரத்திற்க்குப் பின்னால் இருந்து சீனா ஆரம்பம் என்றார்கள். ஒரு தேநீர்க் கடையின் அறிவிப்புப் பலகை :  நெடுஞ்சாலையோரம் வெயிலின் வருகைக்காக உறைந்திருக்கும் ஓடை :    பியாஸ் நதியின் பிரவாகம் :   பனிப் பாறையின் கீழே ஆரம்பமாகும் மலையோடை : மலையுச்சியில் ஒருக் காட்சி.     பள்ளிக் குறிப்பேடுகளின் ( Note books) அட்டைப் படங்களில்  இது போன்ற படங்களைப் முன்பு ஒரு காலத்தில் பார்த்ததாக நினைவு. செங்குத்தாக விழும் நீ...ண்ட அருவி : நைனா தேவி ஆலயம் :     சிவனாருக்கு நேர்ந்த அவமானம் தாங்காமல் பார்வதி தேவி யாகத்தில் குதித்து தன்னை மாய்த்துக் கொண்டதாகவும், அவரைச் சுமந்து கொண்டு சிவனார் உக்கிரத்தாண்டவம் ஆடியதாகவும், அந்த உக்கிரம் காரணமாக உலகம் அழிந்துபட நேரிடலாம் என்று எண்ணிய மஹா விஷ்ணு தனது சங்கு சக்கரத்தை ஏவி, பார்வதி தேவியின் உடலை 51 பகுதியாக வெட்டியதாகவும், அந்தப் பாகங்கள் பாரதம் முழு...

மனம்கவர் மணாலி - 1

Image
  தமிழகத்தில் வசிப்பவர்கள் ஊட்டி  செல்வதுப் போல வட இந்தியாவில் வசிப்பவர்கள் கோடைக் காலங்களில் எளிதில் மணாலி அல்லது சிம்லா சென்று வர இயலும். நாங்கள் 6 பேர் குழுவாக சென்றிருந்தோம். மூன்றே நாட்கள்தான் என்றாலும் மறக்க முடியாத அனுபவமாக அமைந்தது. மலைப்பாதையில் பயணித்து...., பின்னர்..., மலைக்கு மேலே.., மலைக்கு மேலே..., இன்னும் மேலே.. சென்றால் ‘குல்லு’வைத் தாண்டி மணாலியை அடையலாம். செல்லும் வழியெங்கும் ஆப்பிள் மரங்களையும் விளைந்துத் தொங்கும் காய்களையும் காணலாம்.  மணாலி செல்லும் வழியில் சில மைல்களுக்கு முன்பாகவே பிரியும் மலைப் பாதை நம்மை மணிக்கரன் இட்டுச் செல்கிறது.                     மணிக்கரன் `நீர்வீழ்ச்சி :          சீக்கியர்களின் புனிதத் தலம் இது. நீர் வீழ்ச்சி என்று அழைப்பதுப் பொருத்தமில்லை. இங்கு வெந்நீர் ஊற்று அமைந்துள்ளது. இந்தியாவில் வெந்நீர் ஊற்று இருப்பதாகக் கேள்விப்படாத எங்களுக்கு ஆச்சர்யமான விசயமாக இருந்தது. அதுவும் இம...

சமீபத்திய மகிழ்ச்சியூட்டும் செய்திகள் சில...

Image
  பிரதமர் அவர்களின் கடந்த வார அறிக்கைகள் சில படிக்கும் போதே, அடடா.., இப்படி நடந்தால் பரவாயில்லையே, நன்றாக இருக்குமே எனத் தோன்ற வைத்தன. அவற்றுள்  ஒன்று,   Right to Reject Provision in Elections           திரு . மன்மோகன் சிங் ஐயா அவர்கள் தனது அரசாங்கம்,  தேர்தல் சீர்திருத்தங்கள் தொடர்பான பல்வேறு கோரிக்கைகளை தீவிரமாகப் பரிசீலித்து வருவதாகத் தனது கடிதம் ஒன்றில் தெரிவித்து இருக்கிறார். அவற்றில் ஒன்று 'RIGHT TO REJECT'. அதாவது தேர்தலில் நமதுத் தொகுதியில் போட்டியிடும் எந்த வேட்பாளரும் பொருத்தமில்லாதவராகத் தோன்றினால் நாம் வாக்குச் சீட்டிலேயே நமது விருப்பமின்மையைப்    பதிவு செய்வதன் மூலம் அவர்களை புறக்கணிக்கலாம். அதே சமயத்தில் தேர்தலை புறக்கணித்ததாகவோ, அல்லது ஒரு தவறான நபரைத் தேர்ந்தெடுத்து விட்டதாகவோ நாம் வருந்த வேண்டியது இல்லை. ஒருவேளை  அதிகப் படியான வாக்குகள் " யாரையும் தேர்வு செய்ய விருப்பமில்லை- None of the above" என்று பதிவாகும்  பட்சத்தில்  அந்தத் தேர்தலை ரத்து செய்து விட்டு சில மாதங்களுக்குப் பிற...

இப்படியும் இருக்குது இந்தியா..

Image
                 slum dog millionaire படம் பார்த்து விட்டு, அதிகக் கோபப்பட்டவர்களில் அடியேனும் ஒருவன். "இவ்வளவுக் கேவலமாக இந்தியா இல்லை.  இது எல்லாம் பழையக் கதை இவர்களுக்கு நமது நாட்டைக் கேவலமாகச் சித்தரிப்பதைத் தவிர வேறு வேலை கிடையாது", என்று. ஆனால் சில இடங்களில்இந்தியா மோசமான நிலையில்தான் இருக்கிறது. முக்கியமாக வட இந்தியாவில்,  1 )  பேருந்துகளின்  மேற்கூரையில் பயணம் செய்வது இங்கு வழக்கமான விஷயம். இது தமிழ்நாட்டிலும் உண்டுதானே? என்றுக் கூறலாம்.., ஆனால் நான் பார்த்த வரையில் பத்து வருடங்களுக்கு முன்பு இருந்த நிலை இப்போது இல்லை. சிற்றுந்துகளும்,  ஷேர் ஆட்டோக்களும் வந்தப் பிறகு கூரையில் பயணம் செய்வது இல்லை. ( சில்லறை மீதம் ஐம்பது பைசாவை எக்காரணம்  கொண்டும்  தர மாட்டார்கள் தவிர சேவை..??  பரவாயில்லை.) ஆனால் இங்கு மேற்கூரை அமரக் கூட இடமில்லாமல் நிறைந்து விடுகிறது. மேலும் மேற்கூரையில் அமர்ந்து பயணம் செய்தால் பயணச்சீட்டுக் கட்டணம் சிறிது குறைவு என்பதும் ஒரு விஷயம். 2 ) தில்லியி...

எங்க ஊரு பாளையம்

Image
           தமிழ்நாட்டுல ஏகப்பட்டப் பாளையங்கள் இருக்கு. பாளையமுன்னு சொன்ன வுடனே தெரிஞ்சிக்கற மாதிரி எங்க ஊருப் பெத்தநாயக்கன் பாளையம், புத்திரக் கவுண்டன் பாளையம், கோபிசெட்டிப் பாளையம்  மாதிரிப் பெரிய பாளையம் எல்லாம் இல்லை.      சிங்கம் மாதிரி சிங்கிளா (தனித்தன்மயோடப்) பாளையம். இப்பத்தைக்கு "வெறும்" பாளையமுன்னு வச்சுக்கிடுவோம்.  ஊரை  விட்டு வெளிய வந்து மொத்தமா ஒன்பது வருசமாச்சு. எனக்கு சொந்த ஊரிலேயே  வேலை கிடைக்கனும்கிரதுக்காக, எங்க ஊரப் பக்கம் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை கட்டறதுக்கேல்லாம் எங்க ஊரு அரசியல்வாதிகளுக்கு நேரம் இல்லை. அவருக்கெல்லாம் பல சோலி இருக்குன்னு உங்க எல்லாருக்குமேத் தெரியும்.                எங்க ஊரும் ஒரு முன்னாள் கிராமம். (Ex Village ). கிராமத்தோட எல்லா அடையாளங்களையும் கொஞ்சம் வேகமாத் தொலைச்சுக்கிட்டு வர்ற ஊரு. எங்கா ஊருப் பெரிசுகளுக்கு எல்லாம் பேரே விசித்திரமா இருக்கும்.புளுவன், காக்காயன், புட்டன், மண்ணுத்தின்னி, வைக்கக் கட்டி,காசிகரயான், குண்ட...

டி வி- ரிமோட்டைத் தெருவில் எறிந்த வேந்தே...!!

Image
            ரெம்ப நாளா எந்தப் பதிவுமே எழுதாததால இந்த ஒரு மொக்கை நகைச்சுவையை உங்களிடம் பகிர்ந்துக்கலாமின்னு...           நாங்க ஒரு ஏழெட்டுப் பேரு ( ஒரு குரூப்பாத்தான் திரியறது !! ) சேர்ந்து சொந்தக் கையாள சமச்சுச் சாப்பிட்டுக்கிட்டு வாரோம். ஒவ்வொரு ஆளும் ஒவ்வொரு தினுசாக் காமெடிப் பண்ணுவாய்ங்க!  ரசம் வச்சு முடிச்சுட்டு,  சாப்பிடும் போதுதான் யோசிச்சிப் பார்த்து சொல்லுவாங்க "அய்யய்யோ...!!  தக்காளியும் மிளகு சீரகமும் (மட்டும்..?) போட மறந்துட்டேன்.... ரசம் எப்புடி இருக்கு??""ன்னு சர்டிபிகட்டு வேற கேப்பாய்ங்க . என்னத்தச் சொல்ல... காலா காலத்துல கலியாணம் பண்ணி இருந்தா இந்த மாதிரி கஷ்டம் எல்லாம் இருக்காது.  நமக்குத் தெரியுது. 33 வயசு ஆனாலும் இன்னமும் கலியாணம் பண்ணாம எங்கள மாதிரி சின்னப் பசங்களோட சுத்திக்கிட்டு இருக்கற எங்க வீட்டுப் பெருசுகளுக்குத் தெரியறதில்ல. இப்பத்தான் ஐ- போனு, ஐ பாடுன்னு வாங்கிக்கிட்டு, 'வடிவேலு'  கணக்கா "ஏ,  எல்லாரும் பாத்துக்கங்க நானும் யூத்துத்தான், நானும் யூத்துத...

அழகுராசு வகையறா ஆளுங்கப் பண்ணின "தெம்மாங்கு"- கள் சில...!

Image
எல்லாருமே பள்ளிக்கொடம் படிக்கும்போது பல தில்லுமுல்லு பண்ணியிருப்போம். ஆனாக்க சில விசயங்களக் கேட்டா நம்ம எல்லாம் சொக்கத்தங்கமின்னு சொல்லிக்கற அளவுக்கு, சிலபேரு தெல்லவாரித்தனம்  பண்ணி இருப்பாங்க.   என்னோட நண்பர் ஒருத்தர் வீட்டில் காசு வாங்குறதுக்கு செஞ்ச உத்திய சொன்னாரு.  அது என்னன்னா வீட்டிலப் படிக்காத அப்பாக்கிட்டப் போயி, கம்பியூட்டருக்கு ஆயில் ஊத்தக் காசு வேனுமுன்னுக் கேட்டு வாங்கி செலவு செஞ்சுக்கிட்டு இருந்துருக்காரு. அவரும் சரி தையல் மிசினுக்கு,  சயிக்கிளுக்கு  எல்லாம் ஊத்தறது மாதிரி கம்பியூட்டருக்கும் ஊத்துனாத் தான் ஒழுங்கா வேல செய்யும் போல இருக்குன்னு நெனச்சுக்கிட்டு,  மாசா  மாசம் கேக்கும் போதெல்லாம் தவறாம குடுத்துருக்காரு.   நம்ம கிராமத்து அப்பா, அம்மமாருங்களுக்கு எல்லாம் இந்த பெற்றோர் ஆசிரியர் சங்க மீட்டிங்  அப்படிங்கறது ஒரு கவுரவமான விஷயம். அங்கன வந்துதான் மத்த ஆளுங்கள விட தான் கொஞ்சம் விவரமான ஆளுன்னுக் காட்டரதுக்காகவே, "ஏன் ஓங்கப் பள்ளிக்கூடத்துல கராத்தே, குங்க...