Posts

ஆம் ஆத்மிக் கட்சி (AAM AADMI PARTY)

Image
ஆம் ஆத்மிக் கட்சி (AAM AADMI PARTY)   டெல்லித் தேர்தலுக்கு முன்பு எழுத வேண்டும் எனத் திட்டமிட்டப் பதிவு இது. ஆனால் AAP- ஆம் ஆத்மி கட்சி செல்வாக்கான வெற்றியைத் தனது முதல் தேர்தலிலேயேப் பெற்று விட்டப் பிறகுதான் எழுதுவதற்கு நேரம் அமைந்தது. புகழ் பாடும் கட்டுரை எனக் கொண்டாலும் நல்லதுதான்.   நல்லது செய்ய வேண்டும் என யார் வந்தாலும் அவர்களை நாம் ஆதரிக்க வேண்டும். இந்திய வருவாய் பணியில், கவுரவம் மிக்க ஒருப் பொறுப்பில் இருந்த ஒருவர் தனது பதவியத் துறந்து விட்டு, இந்தியாவிற்கு நல்லது செய்தேத் தீருவேன் அன்றுக் கங்கணம் கட்டிக் கொண்டு களத்தில் குதித்து இருக்கிறார். இவர் சினிமா நடிகர் அல்ல. பெரிய அரசியல் குடும்பத்தின் செல்ல வாரிசும் அல்ல.       முதல் தேர்தலிலேயே 28 இடங்களைக் கைப்பற்றுவது என்பது சாதாரணமானது அல்ல. அதுவும் தலைநகரில், பெரும் புள்ளிகளை எதிர்த்து. இந்த 28 இடங்கள் வென்றதால், அவரைத் தங்களது ஆட்சிக்கு ஆதரவளிக்க வைக்க பெரியக் கட்சிகளில் இருந்து எத்தனைக் கோடிக்குப் பேரம் (குதிரைப் பேரம்) பேசப் படும் என்கிற சங்கதிகள் எல்லாம் நமக்கு பரிச்சயமானவை...

மயில் போல வேணும் பொண்ணு...

Image
      “உங்கப் பங்காளிக்கு ‘ஆனந்தி’ய நிச்சயம் பண்ணிரலாமுன்னு இருக்கோம், நீ என்ன நினைக்கிற மாப்பிள்ளை?” என்று கேட்டு(கேட்க வைத்து)ப் போனது ஒரு ‘ஆசை’.....     கணவன் குடிகாரன், பிரிந்துவிட்டேன்.., மரணம் பற்றி யோசிக்கிறேன், மனமிருந்தால் சொல்லு இல்லையெனில் உன் மிஞ்சிய வாழ்வில் என்னை மன்னித்து விடு என்று திகில் கிளப்பியது ஒரு ‘மனசு’....     ஆலய வாயிலில் வீடென்று அம்மைக்குப் பிடித்துவிட, பொம்மை ஒன்றைத் தந்துவிட்டுப் புன்னகைத்தது ஒரு ‘மனசு’...      வேறு தேசம் எனிலும், நானும் பச்சை (பச்சைக் குத்திய)த் தமிழச்சி, மணம் புரிவோமா? என்று, அம்மாவைக் கூட்டிக் கொண்டு அகம் தேடி வந்து அச்சமூட்டியது ஒரு மனசு...      சூதாடிக் கணவன் தந்தக் குழந்தையுடன் நான், வேறு மொழியாய் இருந்தாலும் என்ன, மாதாஜி சொன்னதால்தான் செய்கிறேன் என்று, தேனீர்க் கோப்பையை சட்டென்று வைத்து விட்டு, பதட்டத்தோடுப் பட்டென்றுப் பறந்தோடியது மற்றொரு ‘மனசு’....     தோளில் தொங்கும் துப்பாட்டாவை விருட்டெனத் தலையில் அணிந்து, நானும் பாரம்பரியம் பின்பற்...

போர்த் தொழில் பழகு (Porth thozhil pazhagu) (புத்தக விமர்சனம்) :

Image
    திரு வெ. இறையன்பு இ.ஆ.ப அவர்களின் “போர்த் தொழில் பழகு” புதியத்தலைமுறையில் தொடராக வந்த போதே சில அத்தியாயங்கள் படித்ததுண்டு. அவர் ஒரு மிகச் சிறந்த எழுத்தாளர் என்பது, அவரது சிந்தனைகளைப் படித்தவர்களுக்குத் தெரிந்திருக்கும். அந்த எதிர்பார்ப்பை சற்றும் ஏமாற்றவில்லை இந்தப் புத்தகம். நான் அவரது எழுத்துக்களின் தீவிரமான அபிமானி. அவரது எழுத்தை விமர்சனம் செய்யும் அளவுக்கு நான் பெரியவனா..? என்பதே எனக்கு அச்சம். இருப்பினும் முயற்சித்திருக்கிறேன். நிறைய விடயங்கள் எழுதி இருக்கிறார். சூழ்ச்சிகளும் வஞ்சனைகளும் நிறைந்த இன்றைய உலகில் நம்மை நாம் தற்காத்துக் கொள்ள வேண்டும் எனில், போர்த் தொழில் பழகுதல் அவசியம் என்கிற முன்னுரையே முத்தாய்ப்பு. உத்திசாலி ( stratagist) என்ற வார்த்தையே நமக்குப் புதியதாக இருக்கிறது. தனக்கு பணியில் இன்னல் தந்த நபர்கள், தாம் அதனை முறையாக எதிர் கொண்ட விதங்கள் போன்றவற்றையும் எழுதி இருந்தார். அலெஃஸாண்டரைப் போரஸ் எதிர் கொண்ட விதம்.., வெறும் வரலாறாகப் படிக்கும் போது, ஒருப் பெரிய விசயமாகப் படுவதில்லை. ஆனால், அதனை சம்பவங்களின் தொகுப்பாக விவரிக்கும் போது, நமது மூ...

வானம் வழங்குமெனில்..!!

  சில பேச்சாளர்களுக்கு, பலரையும் வசீகரிக்கும் சக்தி உண்டு, அவர்களால் தங்களதுப் பேச்சின் மூலம் பல சமுதாய மாற்றத்தை உண்டு செய்ய முடியும். சிலருக்கு பேசியே பலரை ஏமாற்றும் திறமை உண்டு. மனிதர்கள் சூழ்நிலை மற்றும் தேவைக்கு ஏற்பத் தங்கள் குணங்களை மாற்றிக் கொள்ளும் தன்மைக் கொண்டவர்கள்.  ஒருவரின் பேச்சை வைத்து நல்லவர், தீயவர் என முடிவெடுப்பது கடினம்.    ஒரு சமயம், பக்கத்து வயலைச் சேர்ந்த ஒரு பெரியவருடன் சேர்ந்து மாவட்ட விவசாயிகள் குறைதீர் நாள் கூட்ட்த்திற்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சென்றிருந்தோம். அங்கு எங்களது வயலுக்கு நீர்ப் பாசனம் தரும் ஏரியின் மதகு புதுப்பிக்கும் பணியை விரைவாக முடிக்க வேண்டி, கோரிக்கை மனு ஒன்றைத் தருவதாக ஏற்பாடு. அந்தப் பணியை குத்தகை எடுத்தவர் ஒரு விவசாயி. பல சங்கத்துப் பிரதிநிதிகளும் பலக் குறைகளை ஆட்சியரிடம் முன் வைத்தார்கள். ஆட்சியரும் கவனமாகக் கேட்டுக் கொண்டு, நிவாரணங்களை கூறிக் கொண்டிருந்தார்.   எங்களது ஏரியின் மதகுப் புதுப்பிக்கும் பணியைக் குத்தகை எடுத்திருந்த குத்தகைதாரரும், ஒருப் பிரதிநிதியாக விவசாயிகளின் பல்வேறு இன்னல்களைப் பற்ற...

சமூக மாற்றங்கள் .....

      தலைமுறை மாற்றம் (இடைவெளி என்றும் கூறுவதுண்டு) என்பது, ஒரு தலைமுறையில் வாழ்ந்த மக்களுக்கும், அவர்களுக்குப் பின்வருகிற (ஒரு 20-30 வயது இளைய) மக்களுக்கும் உள்ளப் பழக்க வழக்க மாறுபாடுகளைக் குறிக்கும். தற்போதைய சூழ்நிலையில் இந்த கால இடைவெளியின் அளவுக் குறைந்து விட்டது. 5 லிருந்து 10 ஆண்டுகள் இளையவரிடமே இந்த தலைமுறை மாற்றத்தைக் காண முடிகிறது. 1.        எங்களது கிராமங்களில், 15 ஆண்டுகளுக்கு முன்பு வரை, அருகிலுள்ள நகரத்திற்கு செல்ல, காலை 7.45 ற்கு வரும் தனியார் பேருந்தைத் தவற விட்டால், அடுத்து எத்தனைப் பேருந்துகள் வந்தாலும், நாம் படியை விட்டு மேலே ஏற இடம் இருக்காது (ஒருவேளைப் பேருந்தை பயணிகளுக்காக நிறுத்தினால்). ஆனால் சிற்றுந்து ( mini bus)   வந்தப் பின், அந்தப் பிரச்சினை குறைந்தது. யாரும் பேருந்தின் கூரை மீது ஏறுவது இல்லை என்றானது. அந்த நிலை இன்னும் முன்னேறி.., தற்போது பொதுப் போக்குவரத்தையேப் பெரும்பாலானோர் பயன்படுத்துவதில்லை என்றாகி விட்டது. 2.        ஒருவர் வீட்டில் தொலைப்பேசி வைத்திருக்க...

நகைச்சுவை..

எனது ஆசிரியர் ஒருவர் சொன்ன நகைச்சுவை ஒன்று. ஒரு ஊரில் சில கொக்குகளும், குளம் ஒன்றில் பல நண்டுகளும் இருந்தனவாம். நண்டுகளுக்கு இந்தக் கொக்குகளிடம் இருந்து எப்படி தப்பிப்பது என்றேக் கவலையாம். கொக்குகளுக்கு, கொழு கொழுன்னு இருக்கிற, அத்தனை நண்டுகளையும் ஆசை தீர சாப்பிட வேண்டும் என்று எண்ணமாம்.   அதனால் ஒரு சதித் திட்டம் தீட்டியக் கொக்குகள், நண்டுகள் தலைவருக்கு ஒரு தூதுவரை அனுப்பி, நாம் இரு தரப்பும் நண்பர்களாகி விடலாம் நமக்குள் பகை வேண்டாம் என்று சொல்லி அனுப்பினவாம். அதற்கு நண்டுகளும் ஒத்துக் கொண்டனவாம். ஆனால் உள்ளுக்குள் பேசி, அந்த ஒரே நாளில் அத்தனை நண்டுகளையும் தின்று தீர்த்து விட வேண்டும் என்று ரகசியத் திட்டம் போட்டிருந்தனவாம்.   ஒரு நல்ல நாள் குறித்து அந்த நாளில் மேள, தாளங்களுடன் நண்பர்களாகி விடுவது என்று கொக்குகள் எல்லாம் கிளம்பி போச்சுங்களாம். ஆனால், கதையில் முக்கியத் திருப்பமா, அந்தக் கொக்குங்களோட சதித் திட்டம் நண்டுகளுக்குத் தெரிஞ்சுருச்சாம்.   அங்க இருந்த எல்லா நண்டுகளும் வேறு ஒரு இடத்துக்குக் கிளம்பிப் போயிடுச்சிங்களாம். கொக்குங்களுக்கு ஒரே ஏமாற்றமா இருந...

சாதியம்.

   கிராமங்களில் சாதிப் பாகுபாடு அதிகம் உண்டு. நான் பார்த்த, கேள்விப்பட்ட சில சம்பவங்கள் என்னை மிகவும் வருத்தப் பட வைத்தன. அவற்றுள் ஒன்று, காதல் தோல்வியால் ஏற்பட்ட நண்பர் ஒருவரின் தற்கொலை. எனக்கு 3 வயது மூத்தவர் அவர். அவர் “அண்ணன்” பள்ளியில் மேனிலை கல்விப் படிக்கும் போதேக் காதலித்தார் (சுமார் பதினைந்து ஆண்டுகள் முன்பு). சிறு வயது என்பதால் விபரீதம் புரியவில்லை. மிகத் தீவிரமானக் காதல். சற்று உணர்ச்சி வசப் படும் குணம். தனது வலது கரத்தின், மேல் பகுதியில் (அரைக் கை சட்டையின் மறைவில்) ஒரு தாலிக் கயிறினைக் கட்டி வைத்திருப்பார். தனது காதலிக்காக அதனைப் பத்திரமாக பாதுகாத்து வந்தார். அந்தத் தாலி முடிச்சு இளகும் போதெல்லாம் அதனை இறுக்கி விட வேண்டும் எனில் என்னைத் தேடி வருவார். அவரது காதலியின்   பெயரைக் குறிப்பிடும் போதெல்லாம் மனைவி என்றேக் கூறுவார். இருவருமே தாழ்த்தப் பட்டவர்களாகக் “ கருதப்படும்” வகுப்பினைச் சேர்ந்தவர்கள்தான். ஆனால் கொடுமை என்னவென்றால், அதில் ஒன்று சற்று உயர்ந்த “தாழ்ந்த சாதி”யாம், மற்றொன்று; அவர்களுக்குக் கீழான தாழ்ந்த சாதியாம். மேலோட்டமாகப் பார்த்தால் தெரிய ...