நீதிமன்றத்தில் நாமே வாதாடுவதற்கு..1/2
சில வழக்குகளுக்காக நீதி மன்றத்தில் கடந்த 10 வருடங்களாக அலைய நேரிட்டது. படிக்காத எதிரிகள் கூட நியாயமாக இருந்த நம்மிடம், சவால் விட்டுப் பணத்தைப் பறித்துக் கொண்டு ஏமாற்றினார்கள். இது எப்படி நடக்கிறது? நமது நாட்டில் சட்டம் சரியில்லை என்று நினைத்துக் கொண்டோம். ஆனால் அது உண்மையில்லை, வழக்குரைஞர்கள்தாம் நம்மை அலைக்கழிக்கிறார்கள் என தாமதமாகவேப் புரிந்தது. வழக்குரைஞர்களின் சூழ்ச்சிகள் : இவர்கள் நவீன நாட்டாமைகள். 95%வழக்குரைஞர்கள் எதிர் தரப்புக்கு சாதகமாக செயல்படுவதற்கு, ரகசியமாக உடன்படுகிறார்கள். அதிக வாய்தா வாங்கினால் அதிக பீஸ் கிடைக்கும். தன் தரப்புவாதி தோல்வியுற்றால் அப்பீல் கேஸ் போனசாக கிடைக்கும் என்கிற போது நியாயமாக எப்படி இருப்பார்கள்?. அவனையெல்லாம் வெட்டிப் போட்டுவிட்டு என்னிடம் வா, உன் சொத்து மொத்தமும் நான் பார்(பறி)த்துக் கொள்கிறேன் என்று வெறியைத் தூண்டி, சாதாரண சிவில் கேஸை, கிரிமினல் கேஸாக்கி அதைப் பீஸாக்கி பணம் பார்த்து விடுவார்கள். நம் தரப்பில் உள்ள, சரியான சாட்சியை, ஆவணத்தை எக்காரணம் கொண்டும் வாதுரையில் எழுதவே மாட்டார்கள். மாறாக, நாம் எழுதச் சொன...
Comments
Post a Comment