நேதாஜி யாரெனில் 2 /2.

சிப்பாய் கலகம் என அழைக்கப் பட்ட முதல் சுதந்திரப் போர் (1857) நமது இந்தியப் படை வீரர்கள் 1857 ல் ஆங்கிலேயர்களை எதிர்த்து கிளர்ச்சி செய்தார்கள். அது கடைசியில் ஒடுக்கப்பட்டு, தோல்வியில் முடிந்தது. தோல்விக்கான காரணங்கள் 1. சரியான தலைவன் இல்லாமை, அதனால் முறையான திட்டமிடல் இல்லை. பகதூர் ஷா தயக்கத்துடனே தலைமையை ஒப்புக் கொண்டார். 2. ஆயுதங்கள் இல்லை, ஆங்கிலேயரிடமிருந்து கைப்பற்றிய ஆயுதங்களேப் பயன்படுத்தப் பட்டன. 3. தகவல் தொடர்பு இல்லை, எனவே சப்பாத்தி மூலம் ரகசியமாக செய்தி அனுப்பப்பட்டன. ஆங்கிலேயர்கள் தந்தி மற்றும் ரயில் அகியவற்றைப் பயன்படுத்தி கிளர்ச்சியாளர்களின் திட்டங்களை எளிதில் முறியடித்தார்கள். 4. இந்தியர் என்கிற எண்ணம் உருவாகி இருக்க வில்லை. இது போன்ற பின்னடைவுகள் இல்லாமல் இருந்திருந்தால், நாம் 1857 லேயே ஆங்கிலேயர்களை விரட்டியிருக்க முடியும். INA war Trial & Royal Indian Navy Mutiny (February 1946) : நேதாஜி இந்த எல்லாக் குறைகளையும் களைந்து இந்திய தேசிய ராணுவத்தை கட்டமைத்து இருந்தார். இந்த ராணுவம், வட கிழக்குப்...