நேதாஜி யாரெனில் 2 /2.



சிப்பாய் கலகம் என அழைக்கப் பட்ட முதல் சுதந்திரப் போர் (1857)

        நமது இந்தியப் படை வீரர்கள் 1857 ல் ஆங்கிலேயர்களை எதிர்த்து கிளர்ச்சி செய்தார்கள். அது கடைசியில் ஒடுக்கப்பட்டு, தோல்வியில் முடிந்தது. தோல்விக்கான காரணங்கள்

1. சரியான தலைவன் இல்லாமை, அதனால் முறையான திட்டமிடல் இல்லை. பகதூர் ஷா தயக்கத்துடனே தலைமையை ஒப்புக் கொண்டார்.
2. ஆயுதங்கள் இல்லை, ஆங்கிலேயரிடமிருந்து கைப்பற்றிய ஆயுதங்களேப் பயன்படுத்தப் பட்டன.
3. தகவல் தொடர்பு இல்லை, எனவே சப்பாத்தி மூலம் ரகசியமாக செய்தி அனுப்பப்பட்டன. ஆங்கிலேயர்கள் தந்தி மற்றும் ரயில் அகியவற்றைப் பயன்படுத்தி கிளர்ச்சியாளர்களின் திட்டங்களை எளிதில் முறியடித்தார்கள்.
4. இந்தியர் என்கிற எண்ணம் உருவாகி இருக்க வில்லை.

இது போன்ற பின்னடைவுகள் இல்லாமல் இருந்திருந்தால், நாம் 1857 லேயே ஆங்கிலேயர்களை விரட்டியிருக்க முடியும்.


INA war Trial & Royal Indian Navy Mutiny (February 1946) :

        நேதாஜி இந்த எல்லாக் குறைகளையும் களைந்து இந்திய தேசிய ராணுவத்தை கட்டமைத்து இருந்தார். இந்த ராணுவம், வட கிழக்குப் பகுதி வழியில் இந்தியாவுக்குள் நுழையும் போது, மக்கள் அனைவரும் கிளர்ந்து எழுவார்கள், அதனால் பெரும் போராட்டம் ஏற்பட்டு, வெள்ளையர்கள் விரட்டப் படுவார்கள் என்று எண்ணினார். அவர் திட்டம் ஆரம்பத்தில் வெற்றியைத் தந்தாலும், அணுகுண்டினால் ஜப்பான் சரணடைந்ததும் அடியற்ற மரம் போல  INA  வீழ்ந்தது.



 நேதாஜி வான் விபத்தில் இறந்ததாக ஜோடிக்கப் பட்டு, தப்ப வைக்கப் பட்டார். இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர்  INA  வின் தளபதிகள் 3 பேர் கைது செய்யப் பட்டு செங்கோட்டையில் விசாரணை நடை பெற்றது. ஒருவர் சீக்கியர், ஒருவர் இசுலாமியர், மற்றவர் இந்து.

இந்த விசாரணையின் போது தான், நேதாஜி பெரிதும் எதிர்பார்த்திருந்த மிகப்பெரும் கிளர்ச்சி மக்களிடையே உண்டாகி INA ன் புகழ் எங்கும் பரவியது. இதனால் ஆங்கில இந்தியக் கப்பல் படையில் இருந்த வீரர்கள் அனைவரும் திரண்டு கிளர்ச்சி செய்தனர். பம்பாய், கராச்சி, விசாகப்பட்டணம் அகிய இடங்களில் கப்பல்களில் முவர்ணக் கொடி, செங்கொடி, முஸ்லீம் லீக் கொடி அகியவை ஒரு சேர ஏற்றப் பட்டன. இந்தக் கிளர்ச்சியை வழக்கம் போல் இந்தியத் தலைவர்கள் படேல் மற்றும் காந்திஜி ஆகியோரை கொண்டு அறிவுரைக் கூறச் செய்து முடிவுக்குக் கொண்டு வந்தனர் வெள்ளையர்.

 
       

    ஆனால், தலைவர் நேதாஜி மரணம் அடைந்த செய்தி பொய் என்பதை ஊகித்த வெள்ளையர், அவர் ரஷ்யா உதவியுடன் சில காலம் கழித்து மீண்டும் போர் தொடுக்கக் கூடும் என்று எண்ணினர். 1857 ல் கிளர்ச்சியை அடக்கியதைப் போல தம்மால் இப்போது கிளர்ச்சியை அடக்கிவிட முடியாது என்பதை உணர்ந்தனர். தாம் அமெரிக்காவில் மூக்குடைந்து வந்தது போல இங்கும் நேர்ந்து விடும் அபாயம் இருந்ததை உணர்ந்தே பெருந்தன்மையாக சுதந்திரம் வழங்குவதைப் போல தந்து விட்டு சென்றனர். போகும் போது பிரித்தாளும் சூழ்ச்சியை செய்து பல லட்சம் மக்கள் பிரிவினையால் செயற்கையான வன்முறை ஏற்படுத்தப் பட்டு சாகும்படி செய்து சென்றனர்.

பிரதமர் அட்லீ-யின் கூற்று :

1950 ல் இந்தியா வந்திருந்த இங்கிலாந்து பிரதமர் அட்லீ இடம், காந்தியடிகளின் போராட்ட தாக்கம் உங்களை எந்தளவு இந்தியாவை விடுவிக்கச் செய்தது? என்று கேட்கப் பட்ட போது, அவர் “ மி..க..வு..ம் குறைவு” என்று குறிப்பிட்டார்.

ரெங்கோஜி கோவில் :



விமான விபத்தில் இறந்ததாக சொல்லப் பட்ட நெதாஜி அவர்களுக்காக ஜப்பானில் ஒரு கோவில் எழுப்பப் பட்டு இருக்கிரது. அனால் இங்கு இருக்கும் சாம்பல் போரில் இறந்து போன ஒரு ஜப்பானிய படை வீரருடையது.

நேதாஜியின் திருமணம்:

          நேதாஜி ஒரு ஆஸ்திரியப் பெண்ணைத் திருமணம் செய்து கொண்டு, மகள் ஒருவர் பிறந்தார் என்பது உண்மையில்லை.  எந்தவித D N A சோதணைகளும் செய்யப் படாமல் எப்படி ஒரு தலைவருக்கு களங்கம் கற்பிக்க முடியும்?

கும்னாமி பாபா (பெயரில்லா சாமி) :


     
         எம்மைப் போன்ற நேதாஜி-ன் அடிப்பொடிகள் நம்புவது யாதெனில், காங்கிரசு நேரு அமைச்சரவையில் இடம் பெற்றிருந்த ஷா நவாசு, மற்றும் இந்திரா காந்தி காலத்திய கோஸ்லா கமிஷன் ஆகியவை தங்களது எஜமானர்கள் சொன்னதை அட்சரம் பிசகாமல் திருப்பிச் சொன்னார்கள். நேதாஜி விமான விபத்தில் இறந்தது உண்மை என்று. தாய்வான் அரசாங்கம் தங்கள் நாட்டிற்குள் அது போன்ற விபத்து நடக்கவே இல்லை என்று கூறி விட்டது. ஆனால் பின்னால் வந்த முகர்ஜி கமிஷன், உத்திர பிரதேச மாநிலத்தின் பரிதாபாத்தில் 16 செப்டம்பர் 1985 வரை வாழ்ந்து இறந்து போன கும்னாமி பாபா என்பவரே மாற்றுறுவில் மறைந்து வாழ்ந்து வந்த நேதாஜியாக இருக்கக் கூடும் என்றுத் தெரிவித்தது. ஆனால்  அரசாங்கம் இந்த அறிக்கையை ஏற்றுக் கொள்ள வில்லை. தற்போது சஹாய் கமிஷன் விசாரணை நடை பெறுகிறது. உண்மையை எவ்வளவு நாளைக்கு மறைப்பீர்கள்?

Comments

Popular posts from this blog

நீதிமன்றத்தில் நாமே வாதாட - 2/2

நீதிமன்றத்தில் நாமே வாதாடுவதற்கு..1/2

போர்த் தொழில் பழகு (Porth thozhil pazhagu) (புத்தக விமர்சனம்) :