Posts

நாடி ஜோதிடம் என்கிற பித்தலாட்டம்

Image
யார் மனசில யாரு என்கிற நிகழ்ச்சி விஜய் டிவியில் சில வருடங்கள் முன்பு ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தது. அதை நடத்துபவர் 21 கேள்விகள் கேட்பதன் மூலம், மனதில் உள்ள பிரபலத்தின் பெயரைச் சொல்வார். அதையே நூற்றுக்கும் மேற்பட்ட கேள்விகள் கேட்டு, நமது பெயர் மற்றும் தாய்தந்தை பெயரைக் கூறிவிட்டால் அதுதான் நாடி ஜோதிடம். பெரியதாக ஏதாவது ஒரு சித்தர் படம் பிரேம் போட்டு வைத்திருப்பார்கள். ஓலைச்சுவடிகளில் ஒன்றுமேக் கிடையாது. நம் வாயிலிருந்தே பல குறிப்புகளைப் பெற்று, நமக்கே பெயர்களைக் கண்டு பிடித்து விட்டதாக அல்வா கொடுப்பதுதான் திறமை. நமது வாயிலிருந்தேப் பெயர்கள் கணிக்கப் பட்டன என்பது தெரியாமல், நாம் அடடே, நம்மைப் பற்றிக் கூட ஓலையில் எழுதி இருக்கிறார்களே எனப் பரவசமடைந்து விடுகிறோம். காதில் சுற்றி உள்ளப் பூ, வெளியே வந்த பிறகுதான் உரைக்கிறது. பின்வருமான கேள்விகள் 70, 80 முறை கேட்கப்படும். 1. நான்கெழுத்துப் பெயரா? 2. முருகன் அல்லது பெருமாள் பெயரா? 3. அம்மன் பெயரா? 4. நீங்கள் கடைசி பிள்ளையா? 5. துணைக்காலில் பெயர் முடியுமா? 6. வடமொழி எழுத்து வருமா? 7. இரண்டாகப் பிரிக்க முடியுமா? 8. கடைசி எழுத்து ன்...

நீதிமன்றத்தில் நாமே வாதாடுவதற்கு..1/2

Image
  சில வழக்குகளுக்காக நீதி மன்றத்தில் கடந்த 10 வருடங்களாக அலைய நேரிட்டது. படிக்காத எதிரிகள் கூட நியாயமாக இருந்த நம்மிடம், சவால் விட்டுப் பணத்தைப் பறித்துக் கொண்டு ஏமாற்றினார்கள். இது எப்படி நடக்கிறது? நமது நாட்டில் சட்டம் சரியில்லை என்று நினைத்துக் கொண்டோம். ஆனால் அது உண்மையில்லை, வழக்குரைஞர்கள்தாம் நம்மை அலைக்கழிக்கிறார்கள் என தாமதமாகவேப் புரிந்தது. வழக்குரைஞர்களின் சூழ்ச்சிகள் : இவர்கள் நவீன நாட்டாமைகள். 95%வழக்குரைஞர்கள் எதிர் தரப்புக்கு சாதகமாக செயல்படுவதற்கு, ரகசியமாக உடன்படுகிறார்கள்.   அதிக வாய்தா வாங்கினால் அதிக பீஸ் கிடைக்கும். தன் தரப்புவாதி தோல்வியுற்றால் அப்பீல் கேஸ் போனசாக கிடைக்கும் என்கிற போது நியாயமாக எப்படி இருப்பார்கள்?. அவனையெல்லாம் வெட்டிப் போட்டுவிட்டு என்னிடம் வா, உன் சொத்து மொத்தமும் நான் பார்(பறி)த்துக் கொள்கிறேன் என்று வெறியைத் தூண்டி, சாதாரண சிவில் கேஸை, கிரிமினல் கேஸாக்கி அதைப் பீஸாக்கி பணம் பார்த்து விடுவார்கள். நம் தரப்பில் உள்ள, சரியான சாட்சியை, ஆவணத்தை எக்காரணம் கொண்டும் வாதுரையில் எழுதவே மாட்டார்கள். மாறாக, நாம் எழுதச் சொன...

புதுசாக் கட்டிக்கிட்ட சோடி நாங்கங்க

Image
புதுசா சேர்ந்த சோடிக் குருவிகள் வீடு கட்ட முடிவு செய்தன. இரண்டு வார பரிசீலனைக்குப் பிறகு முற்றிலும் பாதுகாப்பான இடம் தேர்வு செய்யப்பட்டது. அடிக்கல் நாட்டுவிழா நடந்தேறியது. ஆண்குருவி பிறவியிலேயே Engineer. அவ்வப்போது பெண்குருவியின் ஆலோசனைகள் வழங்கப்பட்டன மூன்று நாள் அயராத உழைப்பில் சிறப்பாக ஒரு அழகிய இல்லம் தயாரனது கிழக்குவாசல் வீடு Luxury resident suitable for all weather is ready to House warming ceremony. விருந்தினர்க்கு வாசல் நின்று வரவேற்பு..

பவளக்காளை

Image
        டிராக்டருக பிரபலமானத்துக்கப்பறம் கிராமங்கள்ல எருதுமாடுங்க இல்லாமப் போயிடுச்சி. காய்ச்சல் நாட்கள்ல பசு மாட்டுக்கே தீனி (பசும்புல்) கிடைக்கிறது இல்ல. மாடுகளுக்கு தண்ணீர் கிடைக்கிறதும் சில நேரங்கள்ல பத்தாம போகுது. பல வருசத்துக்கு முந்தி பெரியப்பாரு ஒரு சோடி எருது (உழவு மாடு) வச்சிருந்தாரு. ஏழெட்டு உருப்படி ஆடும், 3 பசுமாடும் கூட வளர்த்தாக. அவுகளோடப் பிள்ளைக வீட்டுல இருக்கும் போது அதுல ஒரு சீவனக் கூட யாரும் வந்து விலை கேட்டுட முடியாது. அழுது  ஆர்ப்பாட்டம் பண்ணிரும் புள்ளைங்க. அதனால மாட்டை விற்கனும்னா வியாபாரிகள்லாம், பள்ளிக்கூடம் நடக்கிற சமயம் மட்டும்தான் வரமுடியும். அந்த சோடி எருதுல ஒருத்தன் பேரு விருவி மாடு. (Thanks to Google images) இன்னொருத்தன் பேரு பவளக்காளை. இரண்டு பேருக்கும் பெயரிலேயே வித்தியாசம் இருக்குல்ல? உழவு மாடுதான்னாலும் பயபுள்ள சல்லிக்கட்டு மாடு மாதிரி. சண்டியரு. அவருக்கு குணம் தோதுபடல்லைனா ஒருத்தரும் பக்கத்துல நெருங்க முடியாது. தீவனம் கூட வைக்கறதுக்கு நெருங்க முடியாது. பக்கத்து காட்டுக்காரகளோட மாடுங்க மேய்ச்சலுக்கு வரும...

நேதாஜி யாரெனில் 2 /2.

Image
சிப்பாய் கலகம் என அழைக்கப் பட்ட முதல் சுதந்திரப் போர் (1857)         நமது இந்தியப் படை வீரர்கள் 1857 ல் ஆங்கிலேயர்களை எதிர்த்து கிளர்ச்சி செய்தார்கள். அது கடைசியில் ஒடுக்கப்பட்டு, தோல்வியில் முடிந்தது. தோல்விக்கான காரணங்கள் 1. சரியான தலைவன் இல்லாமை, அதனால் முறையான திட்டமிடல் இல்லை. பகதூர் ஷா தயக்கத்துடனே தலைமையை ஒப்புக் கொண்டார். 2. ஆயுதங்கள் இல்லை, ஆங்கிலேயரிடமிருந்து கைப்பற்றிய ஆயுதங்களேப் பயன்படுத்தப் பட்டன. 3. தகவல் தொடர்பு இல்லை, எனவே சப்பாத்தி மூலம் ரகசியமாக செய்தி அனுப்பப்பட்டன. ஆங்கிலேயர்கள் தந்தி மற்றும் ரயில் அகியவற்றைப் பயன்படுத்தி கிளர்ச்சியாளர்களின் திட்டங்களை எளிதில் முறியடித்தார்கள். 4. இந்தியர் என்கிற எண்ணம் உருவாகி இருக்க வில்லை. இது போன்ற பின்னடைவுகள் இல்லாமல் இருந்திருந்தால், நாம் 1857 லேயே ஆங்கிலேயர்களை விரட்டியிருக்க முடியும். INA war Trial & Royal Indian Navy Mutiny (February 1946) :         நேதாஜி இந்த எல்லாக் குறைகளையும் களைந்து இந்திய தேசிய ராணுவத்தை கட்டமைத்து இருந்தார். இந்த ராணுவம், வட கிழக்குப்...

நேதாஜி யாரெனில் - 1 / 2

Image
நேதாஜி யாரெனில்            நேதாஜியைப் பற்றித் தெரியாதா என்ன? நேதாஜி ஒரு சுதந்திரப் போராட்ட வீரர். காந்திஜியின் கொள்கைகளோடு முரண்பாடு கொண்டவர். முத்துராமலிங்கத் தேவருடன் நட்பு கொண்டவர். INA வை உருவாக்கப் பெரிதும் தெற்காசியாவில் வாழ்ந்தத் தமிழர்களே உதவியதால், “மறுபிறவி என்று ஒன்று இருந்தால், நான் தமிழனாகப் பிறக்க விரும்புகிறேன்” என்று தெரிவித்தவர். இவ்வாறாகவெல்லாம் நமக்கு தெரிந்தவர் நேதாஜி.             ஆனால் நமக்கு சுதந்திரம் பெற்றுத் தந்தது யார், எந்த வழியில் என்றால், அது நிச்சயமாக நேதாஜிதான், ஆயுதப் போராட்ட வழியில்தான். அஹிம்சையைப் பார்த்து அச்சம் கொள்பவர்கள் ஆங்கிலேயர்கள் அல்ல. மாறாக, ஒரு வெள்ளை அதிகாரி சொன்ன வாசகம் என்னவென்றால் “ இந்தியாவில், பிரிட்டீஷாருக்கு இருக்கும் ஒரு பெரிய போலீஸ்காரர் காந்தி, மக்கள் எழுச்சியால் நிலைமைக் கட்டுக்கடங்காமல் போகும்போதெல்லாம் அதைக் காந்தியைக் கொண்டே, ப்ரிட்டிஷ்காரர்கள் அடக்கினர்” என்றார். இந்தியாவில் ராபர்ட் கிளைவ் கால் வைக்கும் சமயத்தில், வெள்ளையர்கள், அமெரிக்காவிலிருந்து தோல்வி கண்...

கோசெங்கோட் சோழர்

Image
கோச்செங்கண்ண சோழன்          திருவானைக்காவல் ஜம்புகேஷ்வரர் ஆலயத்தை கட்டிய மன்னர் செங்கண்ண சோழன். 63 நாயன்மார்களுள் ஒருவர். சிவகணமான இவர், முற்பிறவியில் சிலந்தியாக இருந்து, தான் வலை பின்னிப் பாதுகாத்துக் கொண்டிருந்த சிவலிங்கத்தை நீரால் தினமும் அபிஷேகம் செய்து வலையை அழித்த யானையைத் துதிக்கையினுள் புகுந்து கொன்றார். பின்னர் மறுபிறவியில் மன்னனாகப் பிறந்து சங்க காலச் சோழர் ஆனார். முற்பிறவியைப் பற்றி உணர்ந்து அதனாலேயே, திருவானைக்காவல் ஆலயத்தினுள் மூலவரை குட்டி யானை கூட நெருங்க முடியாதவாறு ஆலயம் எழுப்பி இருக்கிறார்.          இவர், தான் எதிர் கொண்ட போர்களில் தோல்வியே காணாதவர். கணைக்கால் இரும்பொறை என்னும் சேர மன்னருடன், கழுமலம் போரில் வெற்றி பெற்று அவரை சிறையில் அடைத்தார். அதன் பின்னர் புலவர் பொய்கையார் மூலம் இரும்பொறைத் தமிழை போற்றுபவர் என்பதை அறிந்து, அவரை விடுவிக்க சிறைச்சாலை சென்ற போது, சேரமான் கணைக்கால் இரும்பொறை தன்னை அலட்சியம் செய்த சோழ நாட்டுக் காவலர்கள் தந்த நீரை அருந்த மறுத்து, புறநானூற்று செய்யுள் ஒன்றை எழுதி வைத்து விட்டு உ...