Posts

Showing posts from October, 2010

டி வி- ரிமோட்டைத் தெருவில் எறிந்த வேந்தே...!!

Image
            ரெம்ப நாளா எந்தப் பதிவுமே எழுதாததால இந்த ஒரு மொக்கை நகைச்சுவையை உங்களிடம் பகிர்ந்துக்கலாமின்னு...           நாங்க ஒரு ஏழெட்டுப் பேரு ( ஒரு குரூப்பாத்தான் திரியறது !! ) சேர்ந்து சொந்தக் கையாள சமச்சுச் சாப்பிட்டுக்கிட்டு வாரோம். ஒவ்வொரு ஆளும் ஒவ்வொரு தினுசாக் காமெடிப் பண்ணுவாய்ங்க!  ரசம் வச்சு முடிச்சுட்டு,  சாப்பிடும் போதுதான் யோசிச்சிப் பார்த்து சொல்லுவாங்க "அய்யய்யோ...!!  தக்காளியும் மிளகு சீரகமும் (மட்டும்..?) போட மறந்துட்டேன்.... ரசம் எப்புடி இருக்கு??""ன்னு சர்டிபிகட்டு வேற கேப்பாய்ங்க . என்னத்தச் சொல்ல... காலா காலத்துல கலியாணம் பண்ணி இருந்தா இந்த மாதிரி கஷ்டம் எல்லாம் இருக்காது.  நமக்குத் தெரியுது. 33 வயசு ஆனாலும் இன்னமும் கலியாணம் பண்ணாம எங்கள மாதிரி சின்னப் பசங்களோட சுத்திக்கிட்டு இருக்கற எங்க வீட்டுப் பெருசுகளுக்குத் தெரியறதில்ல. இப்பத்தான் ஐ- போனு, ஐ பாடுன்னு வாங்கிக்கிட்டு, 'வடிவேலு'  கணக்கா "ஏ,  எல்லாரும் பாத்துக்கங்க நானும் யூத்துத்தான், நானும் யூத்துத்தான்னு" சொல்லிக்கிட்டு அலையுதுக.             இதுல ஒரு நண்பருக்கு நம்மள