Posts

Showing posts from April, 2019

நீதித்துறை சீர்திருத்தம்

Image
இந்திய நீதிமன்றங்களுக்கு 3 மாத கோடை விடுமுறை. இந்த வழக்கம் வெள்ளை துரைமார்களுக்கு வெயில் ஒத்துக் கொள்ளாது என்பதால் ஏற்படுத்தப்பட்டது. இந்திய துரைமார்கள் அதை அப்படியே பின்பற்றுகிறார்கள். இவர்கள்தான் நீதியை நாட்டில் நிலைநாட்டுகிறார்களாம். கேட்டால், நாங்கள் வீட்டில் இருந்தாலும் பணி ஆற்ற வேண்டும் தெரியுமா? என்பார்கள். அதையே அலுவலகத்திற்கு வந்து ஆத்தலாம் இல்லையா?. இவ்வளவு வழக்குகள் தேக்கி வைத்துக் கொண்டு, வெட்கமே இல்லாமல் இவ்வளவு நாட்கள் விடுப்பு எடுத்துக் கொள்ளலாமா?. வெள்ளைக்காரர்களின் வம்சமாக இருந்தால் தேவைப்படலாம். இந்திய வம்சாவளிகளுக்கு எதற்கு? ஒரு நாளைக்கு 150, 300 வழக்குகளை விசாரிக்கிறோம் என்பார்கள். அதில் 98% சும்மாவே வாய்தாவை மாற்றி வைப்பதாக இருக்கும். நாம் வழக்குப் பட்டியலைப் பார்த்து விட்டு, அய்யோ பாவம் 'நிதி'பதி கடுமையாக உழைக்கிறார் என்று நினைப்போம். ஒரு நிதிபதி "வீட்டில் அமர்ந்து வழக்கு கோப்புகளைப் படிக்கிறோம், தீர்ப்புகளை வீட்டில் அமர்ந்துதான் வடிக்கிறோம் எங்களுக்கு நேரமே போதவில்லை" என்று எழுதி இருந்தார். படித்தால் சிரிப்பு வந்தது. பாராளுமன்றத்தில