Posts

Showing posts from December, 2021

ஆலய தரிசனம் - 2/3

Image
குத்தாலம் அருகில் உள்ள பாடல் பெற்றத் திருத்தலங்கள் சிலவற்றைக் காண்பது என முடிவாயிற்று. அதில் முதலில் பார்த்தது குத்தாலம் சொன்னவாறரிவார் திருத்தலம்தான்.  : ஆலயப் புனரமைப்பு பணிகள் நடை பெற்றுக் கொண்டிருக்கின்றன. சன்னதியின் கல்வெட்டு எழுத்துக்களில் இறைவன் பெயரான `சொன்னவாறரிவார்` (உக்தவாகீஸ்வரர்) என்பதை கண்டுகொள்ள முடிந்தது.  ஜெயங்கொண்ட சோழ வள நாட்டைக் கண்டு கொண்டேன் குலோத்துங்க சோழ வள நாட்டையும் கண்டு கொண்டேன் தஞ்சாவூர் குறிப்பிடப்பட்டு உள்ளது மணவாளப் பட்டன் எழுத்து / நாராயணப் பட்டன் எழுத்து இறைவன் பெயரான சொன்னவாறரிவார் அதிகாலையில் ஆலயம் திறக்கப் பட்டவுடன், இறைவன் அருளால் அடியேனுக்கு நல்ல தரிசனம் கிட்டியது. அந்தத் திருப்தியுடன் அங்கு இருந்து திருவேள்விக்குடிக்கு சென்றேன். திருவேள்விக்குடி:  குத்தாலத்தில் இருந்து சுமார் 3 கிமீ தொலைவில் உள்ளது திருவேள்விக்குடி.  திருக்குளம் ஆடல் வல்லானது காலை ஆரேனும் அழிக்கவும் இயலுமோ? ராஜராஜ தேவர் பெயரைக் கண்டுகொண்டதில் அற்ப மகிழ்ச்சி ஆளே இல்லாத பிரகாரத்தில் அப்பனும் அடியேனும்.. அம்மன் சன்னதி சுவற்றிலும் ராஜராஜர் பெயர் உள்ளன (எழுத்துக் கூட்டி அதை மட்டுமே ப

ஆலய தரிசனம்-1/3

Image
 அவ்வப்போது பாடல் பெற்றத் திருத் தலங்களுக்கு செல்வது அடியேனின் வழக்கம். சமீபத்தில் அவ்வாறு சென்ற போது, முதலில் தரிசித்த தலம் திருவிடை மருதூர். அதன் சில புகைப்படங்கள் கீழே: திருவிடைமருதூர் : கும்பகோணத்தில் இருந்து மயிலாடுதுறை செல்லும் வழியில் உள்ள திருக்கோயில். மராட்டிய அரச குடும்பத்து பெண்மணி ஒருவர் தான் மணக்க விரும்பியவரை மணக்க அருள் புரிந்தமைக்காக இத்தலத்து ஈசருக்கு ஒரு லட்சம் விளக்குகள் ஏற்றி வழிபட்டு, விளக்குடன் நிற்கும் தனது உருவத்தை பித்தளையில் செய்து வைத்து இந்த செய்தியையும் எழுதி வைத்து உள்ளார். பட்டினத்தார் துறவியாக வாழ்ந்து வந்தது இத்தலத்தில்தான். அதன் பின்னர் அங்கிருந்து அதே வழித்தடத்தில் செல்லும் பேருந்தில் சென்று திருவாலங்காடு பேருந்து நிறுத்தத்தில் இறங்கினேன்.  திருவாலங்காடு ( நாகை மாவட்டம்) :  திருவாலங்காடு என்ற பெயரில் திருத்தணி அருகே ஒரு சிவ ஆலயமுண்டு என்பதால் குழப்பம் ஏற்படாமல் இருக்க மாவட்டத்தையும் குறிப்பிட வேண்டி உள்ளது.  இந்த ஆலயம் மூன்றாம் குலோத்துங்க சோழர் காலத்தில் புகழ் பெற்று விளங்கி இருக்க வேண்டும். இந்த ஆலய ஈசரின் திருவடிகளைத் தம் தலை மீது தாங்கியவாறு குலோ