Posts

Showing posts from November, 2013

மயில் போல வேணும் பொண்ணு...

Image
      “உங்கப் பங்காளிக்கு ‘ஆனந்தி’ய நிச்சயம் பண்ணிரலாமுன்னு இருக்கோம், நீ என்ன நினைக்கிற மாப்பிள்ளை?” என்று கேட்டு(கேட்க வைத்து)ப் போனது ஒரு ‘ஆசை’.....     கணவன் குடிகாரன், பிரிந்துவிட்டேன்.., மரணம் பற்றி யோசிக்கிறேன், மனமிருந்தால் சொல்லு இல்லையெனில் உன் மிஞ்சிய வாழ்வில் என்னை மன்னித்து விடு என்று திகில் கிளப்பியது ஒரு ‘மனசு’....     ஆலய வாயிலில் வீடென்று அம்மைக்குப் பிடித்துவிட, பொம்மை ஒன்றைத் தந்துவிட்டுப் புன்னகைத்தது ஒரு ‘மனசு’...      வேறு தேசம் எனிலும், நானும் பச்சை (பச்சைக் குத்திய)த் தமிழச்சி, மணம் புரிவோமா? என்று, அம்மாவைக் கூட்டிக் கொண்டு அகம் தேடி வந்து அச்சமூட்டியது ஒரு மனசு...      சூதாடிக் கணவன் தந்தக் குழந்தையுடன் நான், வேறு மொழியாய் இருந்தாலும் என்ன, மாதாஜி சொன்னதால்தான் செய்கிறேன் என்று, தேனீர்க் கோப்பையை சட்டென்று வைத்து விட்டு, பதட்டத்தோடுப் பட்டென்றுப் பறந்தோடியது மற்றொரு ‘மனசு’....     தோளில் தொங்கும் துப்பாட்டாவை விருட்டெனத் தலையில் அணிந்து, நானும் பாரம்பரியம் பின்பற்றுபவள் என்னைப் பிடிக்குமா?! என்றது இன்னொருக் குட்டி மனசு....     வார இ

போர்த் தொழில் பழகு (Porth thozhil pazhagu) (புத்தக விமர்சனம்) :

Image
    திரு வெ. இறையன்பு இ.ஆ.ப அவர்களின் “போர்த் தொழில் பழகு” புதியத்தலைமுறையில் தொடராக வந்த போதே சில அத்தியாயங்கள் படித்ததுண்டு. அவர் ஒரு மிகச் சிறந்த எழுத்தாளர் என்பது, அவரது சிந்தனைகளைப் படித்தவர்களுக்குத் தெரிந்திருக்கும். அந்த எதிர்பார்ப்பை சற்றும் ஏமாற்றவில்லை இந்தப் புத்தகம். நான் அவரது எழுத்துக்களின் தீவிரமான அபிமானி. அவரது எழுத்தை விமர்சனம் செய்யும் அளவுக்கு நான் பெரியவனா..? என்பதே எனக்கு அச்சம். இருப்பினும் முயற்சித்திருக்கிறேன். நிறைய விடயங்கள் எழுதி இருக்கிறார். சூழ்ச்சிகளும் வஞ்சனைகளும் நிறைந்த இன்றைய உலகில் நம்மை நாம் தற்காத்துக் கொள்ள வேண்டும் எனில், போர்த் தொழில் பழகுதல் அவசியம் என்கிற முன்னுரையே முத்தாய்ப்பு. உத்திசாலி ( stratagist) என்ற வார்த்தையே நமக்குப் புதியதாக இருக்கிறது. தனக்கு பணியில் இன்னல் தந்த நபர்கள், தாம் அதனை முறையாக எதிர் கொண்ட விதங்கள் போன்றவற்றையும் எழுதி இருந்தார். அலெஃஸாண்டரைப் போரஸ் எதிர் கொண்ட விதம்.., வெறும் வரலாறாகப் படிக்கும் போது, ஒருப் பெரிய விசயமாகப் படுவதில்லை. ஆனால், அதனை சம்பவங்களின் தொகுப்பாக விவரிக்கும் போது, நமது மூதாதையர்கள