Posts

Showing posts from July, 2010

ஒரு நாகரிக படைப்புத் திருட்டு!

        நண்பர் ஒருவர் மின்னஞ்சல் செய்திருந்த வரிகள். !  களவாணிப் படம் பார்த்து ஏற்கனவே எனது கிராமம் பற்றிய ஏக்கத்தில் இருந்த, என்னை நிறைய விசயங்களை இழப்பதாக எண்ண வைத்து விட்ட வரிகள். வயல்வெளி   பார்த்து வறட்டி   தட்டி ஓணாண்   பிடித்து ஓடையில்   குளித்து எதிர்வீட்டில்   விளையாடி எப்படியோ   படித்த   நான் ஏறிவந்தேன்   நகரத்துக்கு  ! சிறு   அறையில்   குறுகிப்   படுத்து சில   மாதம்   போர்தொடுத்து வாங்கிவிட்ட   வேலையோடு வாழுகிறேன்   கணிப்பொறியோடு  ! சிறிதாய்த்   தூங்கி கனவு   தொலைத்து காலை   உணவு   மறந்து நெரிசலில்   சிக்கி கடமை   அழைக்க காற்றோடு   செல்கிறேன் காசு   பார்க்க  ! மனசு   தொட்டு வாழும்   வாழ்க்கை மாறிப்   போகுமோ   ? மௌசு   தொட்டு வாழும்   வாழ்க்கை பழகிப்   போகுமோ   ? வால்பேப்பர்   மாற்றியே வாழ்க்கை தொலைந்து   போகுமோ   ? சொந்த   பந்த உறவுகளெல்லாம் ஷிப்   பைலாய் சுருங்கிப்   போகுமோ ? வாழ்க்கை   தொலைந்து   போகுமோ மொத்தமும் ! புரியாது புலம்புகிறேன்   நித்தமும் ! தாய்   மடியில்   தலைவைத்து நிலவு   முகம்   நான்   ரசித்து கதைகள்   பேசி கவல

அசடு வழியரதுன்னா எப்புடி?!

Image
           நம்மள யாராச்சும் வெளிநாட்டுக்காரங்க பாத்தாங்கன்னா, மொதல்ல தெரிஞ்சுக்கனும்ன்னு கேக்குறது இந்தியாவுல நீ எந்த பக்கம்ங்கறது தான்.  அவிங்களுக்கிட்டப் போயி நானு பெரும்புலியூர் பக்கத்துல....,  கூப்புடு தூரத்துல இருக்க கோதண்டராம புரமுன்னு  சொல்லிப் புரிய வைக்கறதுக்குள்ள இந்திய மேப்பையே முழுசா வரயற மாதிரி ஆயிப்போவும்!!!.   அதுக்குப் பயந்துக்கிட்டு நான் சவுத் இந்தியா ன்னு சொல்லுறது புத்திசாலித்தனமா! சவுத் இந்தியங்கறது ஒன்னோடக் கலரப் பாத்தாலே எங்களுக்குத் தெரியுமுடி. நீ சவுத் இந்தியாவுல எங்கிட்டு ன்னுவாங்க!  நான் சென்னைன்னு பொத்தாம் பொதுவாச் சொல்லி சமாளிச்சர்றது வழக்கம். சில சமயம் சென்னைய எங்க இருக்குன்னுத் தெரிஞ்ச சில பயபுள்ளைக,  விடாம "ஓ... சென்னை எனக்குத் தெரியும். நீ சென்னை தானா!? நான் ஒரு பதினஞ்சு வருசத்துக்கு முந்தி அங்க வந்துருக்கேன் நீ சென்னையே தானா? இல்லப் பக்கமா"ன்னு கேப்பாங்க!?   இல்ல சாமி!!  நான் சென்னையில இருந்து ஒரு ஆறு மணி நேரம் போனாக்கத்தான் எங்க ஊருக்குப் போவ முடியுமின்னு சொல்லியாவனும். அதக் கேட்ட வுடனே ..  "ஒ.. அம்புட்டுப் பெரிய நாட்டுப் புறத்தானா