Posts

Showing posts from October, 2011

சமீபத்திய மகிழ்ச்சியூட்டும் செய்திகள் சில...

Image
  பிரதமர் அவர்களின் கடந்த வார அறிக்கைகள் சில படிக்கும் போதே, அடடா.., இப்படி நடந்தால் பரவாயில்லையே, நன்றாக இருக்குமே எனத் தோன்ற வைத்தன. அவற்றுள்  ஒன்று,   Right to Reject Provision in Elections           திரு . மன்மோகன் சிங் ஐயா அவர்கள் தனது அரசாங்கம்,  தேர்தல் சீர்திருத்தங்கள் தொடர்பான பல்வேறு கோரிக்கைகளை தீவிரமாகப் பரிசீலித்து வருவதாகத் தனது கடிதம் ஒன்றில் தெரிவித்து இருக்கிறார். அவற்றில் ஒன்று 'RIGHT TO REJECT'. அதாவது தேர்தலில் நமதுத் தொகுதியில் போட்டியிடும் எந்த வேட்பாளரும் பொருத்தமில்லாதவராகத் தோன்றினால் நாம் வாக்குச் சீட்டிலேயே நமது விருப்பமின்மையைப்    பதிவு செய்வதன் மூலம் அவர்களை புறக்கணிக்கலாம். அதே சமயத்தில் தேர்தலை புறக்கணித்ததாகவோ, அல்லது ஒரு தவறான நபரைத் தேர்ந்தெடுத்து விட்டதாகவோ நாம் வருந்த வேண்டியது இல்லை. ஒருவேளை  அதிகப் படியான வாக்குகள் " யாரையும் தேர்வு செய்ய விருப்பமில்லை- None of the above" என்று பதிவாகும்  பட்சத்தில்  அந்தத் தேர்தலை ரத்து செய்து விட்டு சில மாதங்களுக்குப் பிறகு வேறு தேர்தல் நடத்த பரிந்துரைக்கலாம் என்றும் கூறப் படுகிறது. இந்தக் க

இப்படியும் இருக்குது இந்தியா..

Image
                 slum dog millionaire படம் பார்த்து விட்டு, அதிகக் கோபப்பட்டவர்களில் அடியேனும் ஒருவன். "இவ்வளவுக் கேவலமாக இந்தியா இல்லை.  இது எல்லாம் பழையக் கதை இவர்களுக்கு நமது நாட்டைக் கேவலமாகச் சித்தரிப்பதைத் தவிர வேறு வேலை கிடையாது", என்று. ஆனால் சில இடங்களில்இந்தியா மோசமான நிலையில்தான் இருக்கிறது. முக்கியமாக வட இந்தியாவில்,  1 )  பேருந்துகளின்  மேற்கூரையில் பயணம் செய்வது இங்கு வழக்கமான விஷயம். இது தமிழ்நாட்டிலும் உண்டுதானே? என்றுக் கூறலாம்.., ஆனால் நான் பார்த்த வரையில் பத்து வருடங்களுக்கு முன்பு இருந்த நிலை இப்போது இல்லை. சிற்றுந்துகளும்,  ஷேர் ஆட்டோக்களும் வந்தப் பிறகு கூரையில் பயணம் செய்வது இல்லை. ( சில்லறை மீதம் ஐம்பது பைசாவை எக்காரணம்  கொண்டும்  தர மாட்டார்கள் தவிர சேவை..??  பரவாயில்லை.) ஆனால் இங்கு மேற்கூரை அமரக் கூட இடமில்லாமல் நிறைந்து விடுகிறது. மேலும் மேற்கூரையில் அமர்ந்து பயணம் செய்தால் பயணச்சீட்டுக் கட்டணம் சிறிது குறைவு என்பதும் ஒரு விஷயம். 2 ) தில்லியின் புறநகர்ப் பகுதிகளில்  காலை நேர மின்சார ரயில் களில்   பயணிப்பவர்களை நீங்கள் பார்க்க வேண்டும். இரண்டுப்