Posts

Showing posts from December, 2018

நாடி ஜோதிடம் என்கிற பித்தலாட்டம்

Image
யார் மனசில யாரு என்கிற நிகழ்ச்சி விஜய் டிவியில் சில வருடங்கள் முன்பு ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தது. அதை நடத்துபவர் 21 கேள்விகள் கேட்பதன் மூலம், மனதில் உள்ள பிரபலத்தின் பெயரைச் சொல்வார். அதையே நூற்றுக்கும் மேற்பட்ட கேள்விகள் கேட்டு, நமது பெயர் மற்றும் தாய்தந்தை பெயரைக் கூறிவிட்டால் அதுதான் நாடி ஜோதிடம். பெரியதாக ஏதாவது ஒரு சித்தர் படம் பிரேம் போட்டு வைத்திருப்பார்கள். ஓலைச்சுவடிகளில் ஒன்றுமேக் கிடையாது. நம் வாயிலிருந்தே பல குறிப்புகளைப் பெற்று, நமக்கே பெயர்களைக் கண்டு பிடித்து விட்டதாக அல்வா கொடுப்பதுதான் திறமை. நமது வாயிலிருந்தேப் பெயர்கள் கணிக்கப் பட்டன என்பது தெரியாமல், நாம் அடடே, நம்மைப் பற்றிக் கூட ஓலையில் எழுதி இருக்கிறார்களே எனப் பரவசமடைந்து விடுகிறோம். காதில் சுற்றி உள்ளப் பூ, வெளியே வந்த பிறகுதான் உரைக்கிறது. பின்வருமான கேள்விகள் 70, 80 முறை கேட்கப்படும். 1. நான்கெழுத்துப் பெயரா? 2. முருகன் அல்லது பெருமாள் பெயரா? 3. அம்மன் பெயரா? 4. நீங்கள் கடைசி பிள்ளையா? 5. துணைக்காலில் பெயர் முடியுமா? 6. வடமொழி எழுத்து வருமா? 7. இரண்டாகப் பிரிக்க முடியுமா? 8. கடைசி எழுத்து ன்

நீதிமன்றத்தில் நாமே வாதாடுவதற்கு..1/2

Image
  சில வழக்குகளுக்காக நீதி மன்றத்தில் கடந்த 10 வருடங்களாக அலைய நேரிட்டது. படிக்காத எதிரிகள் கூட நியாயமாக இருந்த நம்மிடம், சவால் விட்டுப் பணத்தைப் பறித்துக் கொண்டு ஏமாற்றினார்கள். இது எப்படி நடக்கிறது? நமது நாட்டில் சட்டம் சரியில்லை என்று நினைத்துக் கொண்டோம். ஆனால் அது உண்மையில்லை, வழக்குரைஞர்கள்தாம் நம்மை அலைக்கழிக்கிறார்கள் என தாமதமாகவேப் புரிந்தது. வழக்குரைஞர்களின் சூழ்ச்சிகள் : இவர்கள் நவீன நாட்டாமைகள். 95%வழக்குரைஞர்கள் எதிர் தரப்புக்கு சாதகமாக செயல்படுவதற்கு, ரகசியமாக உடன்படுகிறார்கள்.   அதிக வாய்தா வாங்கினால் அதிக பீஸ் கிடைக்கும். தன் தரப்புவாதி தோல்வியுற்றால் அப்பீல் கேஸ் போனசாக கிடைக்கும் என்கிற போது நியாயமாக எப்படி இருப்பார்கள்?. அவனையெல்லாம் வெட்டிப் போட்டுவிட்டு என்னிடம் வா, உன் சொத்து மொத்தமும் நான் பார்(பறி)த்துக் கொள்கிறேன் என்று வெறியைத் தூண்டி, சாதாரண சிவில் கேஸை, கிரிமினல் கேஸாக்கி அதைப் பீஸாக்கி பணம் பார்த்து விடுவார்கள். நம் தரப்பில் உள்ள, சரியான சாட்சியை, ஆவணத்தை எக்காரணம் கொண்டும் வாதுரையில் எழுதவே மாட்டார்கள். மாறாக, நாம் எழுதச் சொன்னால் வழக