டி வி- ரிமோட்டைத் தெருவில் எறிந்த வேந்தே...!!

            ரெம்ப நாளா எந்தப் பதிவுமே எழுதாததால இந்த ஒரு மொக்கை நகைச்சுவையை உங்களிடம் பகிர்ந்துக்கலாமின்னு...

          நாங்க ஒரு ஏழெட்டுப் பேரு ( ஒரு குரூப்பாத்தான் திரியறது !! ) சேர்ந்து சொந்தக் கையாள சமச்சுச் சாப்பிட்டுக்கிட்டு வாரோம். ஒவ்வொரு ஆளும் ஒவ்வொரு தினுசாக் காமெடிப் பண்ணுவாய்ங்க!  ரசம் வச்சு முடிச்சுட்டு,  சாப்பிடும் போதுதான் யோசிச்சிப் பார்த்து சொல்லுவாங்க "அய்யய்யோ...!!  தக்காளியும் மிளகு சீரகமும் (மட்டும்..?) போட மறந்துட்டேன்.... ரசம் எப்புடி இருக்கு??""ன்னு சர்டிபிகட்டு வேற கேப்பாய்ங்க . என்னத்தச் சொல்ல... காலா காலத்துல கலியாணம் பண்ணி இருந்தா இந்த மாதிரி கஷ்டம் எல்லாம் இருக்காது.  நமக்குத் தெரியுது. 33 வயசு ஆனாலும் இன்னமும் கலியாணம் பண்ணாம எங்கள மாதிரி சின்னப் பசங்களோட சுத்திக்கிட்டு இருக்கற எங்க வீட்டுப் பெருசுகளுக்குத் தெரியறதில்ல. இப்பத்தான் ஐ- போனு, ஐ பாடுன்னு வாங்கிக்கிட்டு, 'வடிவேலு'  கணக்கா "ஏ,  எல்லாரும் பாத்துக்கங்க நானும் யூத்துத்தான், நானும் யூத்துத்தான்னு" சொல்லிக்கிட்டு அலையுதுக.



            இதுல ஒரு நண்பருக்கு நம்மள மாதிரியே ஞாபக சக்தி ரெம்ப அதிகம். சும்மா இருக்க நேரத்துல அடுத்தவங்களுக்குப் போனப் பண்ணி, ஆமா இப்ப நான் எதுக்கு ஒனக்கு கால் பண்ணினேன் அப்புடிம்பாய்ங்க!. இன்னொருப் பெருசு google ஓபன் பண்ணி அதில போயி யாஹூ மெயலைத் தேடிக்கிட்டு இருக்கும். yahoo mail- அ google engine லத் தேடிக் கண்டுபிடிக்கற ஒரே ஆளு எங்காளு மட்டும் தான். ரெம்ப நாளா லேப்டாப்பும் கையுமாவே இருந்தாய்ங்கன்னு,  நானும் பெரிய இன்ஜிநீரா இருப்பாருப் போல இருக்குன்னு நெனச்சுக்கிட்டு இருந்தேன்.

        இன்னொருப் பீசு எப்பப் பாத்தாலும் "வாரணம் ஆயிரம்", "விண்ணைத் தாண்டி வருவாயா?"  ன்னு  ரயில்ல வர்ற ரொமாண்டிக் சீனா தேடி புடிச்சுப்  பாத்துக்கிட்டு திரிஞ்ச்சிச்சு.  இப்பத்தான் கொஞ்சம் பரவால்ல. சீக்கிரத்துலக் கலியாணம் ஆவப் போவுது.  பாவம் வூட்டுக்காரம்மா!!

           இப்படிக்கா  ஒரு முறை எல்லாரும் சாப்பிட்டு முடிச்சுட்டு T . V  ல சேனல் மாத்தலாமுன்னு ரிமோட்டத் தேடறோம்,.. தேடறோம் கெடைக்கவே இல்லை. எல்லாரும் அங்கிட்டும் இங்குட்டும் தேடறோம் கெடைக்கவே இல்லை. ஒரு பீசு,
 ( பீசு என்றால் 'அந்த நேரத்தில் கிடைக்கும் இளிச்சவாய் நபர்' என்று அறிக! சொல் உபயம் - அரவிந்த் கோயம்புத்தூர் ) மட்டும் கொஞ்சம் யோசிச்சுட்டு, "ஒருவேள யாராச்சும் குப்பையில போட்டுட்டுடாங்கலா" ன்னுப் பாருங்க அப்புடின்னுச்சி. அதுக்கு இன்னொரு பீசு சொன்னுச்சி "எந்தக் கோமாளிப் பயலாச்சும் அவ்வளவுப் பெரியப் பொருளைக் கவனிக்காம குப்பயிலப் போடுவானா?"  அப்புடின்னு. அதுக்கப்புறமா பாத்தாக்க, சத்தமே இல்லாம அந்த பீசு போயி குப்பைத்தொட்டில இருந்து அந்த ரிமோட்டை எடுத்துக்கிட்டு வந்துட்டு " ஹி ஹி ஹீ ... எப்புடி போச்சுன்னுத் தெரியல பேப்பரோட சுத்தி வீசிட்டேன் போல இருக்கு" அப்புடிங்குது.

           அன்னைக்கு அந்தப் பீச தொவச்சு தொங்கப் போட்டுட்டாய்ங்க!!  இன்னமும் கிண்டலடிக்க ஆளு கெடைக்கலன்னா அந்த சம்பவம் தான் வெறும் வாய்க்கு அவலு மாதிரி!!

பின்குறிப்பு :
    
           ( இந்த பதிவில் உள்ள சம்பவங்களும் கதாப் பாத்திரங்களும் "பிரபல  வலைப் பதிவர் அழகுராசு" - அவர்களின் சொந்தக்? கற்பனையே! அண்ணன் திருச்சி ரமேசு மற்றும் மதுரை கார்த்திக், புதுசா கலியாணம் ஆகப் போற லால்குடி சரவணன் ஆகியோரை பற்றிய எந்த விதமானக் நேரடியாகவோ மறைமுகமாகவோ சிறு கருத்தும் இல்லை என்பதை கம்பெனி சார்பாக தெரிவித்துக் கொள்கிறோம். மான நஷ்ட வழக்கு, அல்லது காப்பி ரைட்டுன்னு ஏதாவது கேசு போட்டீங்க.... (எத்தன ஊரத் தாண்டி என்னக் கண்டிசன்ல இருக்கேன்னுத் தெரியுமாய்யா ஒங்களுக்கு? ) :)

Comments

Popular posts from this blog

நீதிமன்றத்தில் நாமே வாதாட - 2/2

நீதிமன்றத்தில் நாமே வாதாடுவதற்கு..1/2

போர்த் தொழில் பழகு (Porth thozhil pazhagu) (புத்தக விமர்சனம்) :