Posts

Showing posts from May, 2010

தெம்மாங்குப் பாட்டு - வாழ்க்கை குறிப்புகள்

"தெம்மாங்குப் பாட்டு"ங்கறது,  நம்ம அழகுராசுப் பயலுக்கு "ப்ளஸ் -டூ" படிக்கிறப்ப, கணக்கு வாத்தியார் வச்சக் காரணப் பேரு.  ஏன்னா பயபுள்ள அப்பெல்லாம் எங்க மேடையப் போட்டு, மைக்க குடுத்தாலும் "நான் பாட்டு பாடுதேண்"டு கெளம்பிடுவான்... அதனால கணக்குப் பரீட்சை அடிக்கடிக் கந்தலாயிடும்.  அதுலக் கடுப்பாயிப் போன  பாலு வாத்தியார் சூட்டின நாமகரணம்தான் "தெம்மாங்குப் பாட்டு".     அப்புடி மெர்சலாப் போய்கிட்டு இருந்த பயலோட, வரலாற்றில ஒரு கருப்பு நாளா ஒரு நாள் வந்திச்சு. என்னன்னா,  பத்து வருஷம் முன்னாடி  ஒரு நா, LIC சம்பந்தமா ஒரு பேச்சுப் போட்டின்னு பயல கூட்டிட்டுப் போயிடான்ய்ங்க.  அவனுக்கு இன்னைய வரைக்கும் LIC- ன்னா என்னான்னு தெரியாது. அப்ப இருந்த ஆர்வக் கோளாறுல, பயலும் ஒண்ணுமே தெரியாட்டியும், சமாளிப்போமுன்னு கெளம்பிப் போயிட்டான். அங்கப் பாத்தா ஒரு அறுபது பேரு குறுக்கும் நெடுக்குமா நடந்துக்கிட்டு அவிங்களா  பேசிக்கிட்டுத் திரியிராய்ங்க(பயிற்சியாம்). அடடா  இத்தனைப் பேர எப்புடிடா சமாளிக்கறதுன்னு மனசுக்குள்ள டரியல் ஆயிட்டாலும் பய,  சளைக்காம மைந்டைன் பண்ணிக்கிட்டிருக்

ஒவ்வொரு தமிழனும் கட்டாயம் படிக்க வேண்டிய செய்தி

   சமீபத்தில் அமெரிக்காவின் அலாஸ்கா மாநிலத்தில் " மரியா ஸ்மித் ஜோனெஸ் " என்ற பெண்மணி இறந்து விட்டார் . ஒன்பது பிள்ளைகளுக்கு   தா யான இவர் இறக்கும் போது இவருடைய வயது 89. இவருடைய இறப்பு பலருக்கு துயரத்தை கொடுத்துள்ளது . அவருடைய இழப்பை யாராலுமே ஈடு செய்ய முடியாது என்று சொல்கிறார்கள் . பழங்குடி இனத்தை சேர்ந்த மரியா ஸ்மித் அலாஸ்காவில் வாழும் பழங்குடி மக்களின் உரிமைக்காக பல போராட்டங்களை மேற்கொண்டவர் . ஆனால் அவருடைய இறப்பு யாராலும் ஈடு செய்ய முடியாததாக பார்க்கப்படுவதற்கு காரணம் அது இல்லை . உண்மையான காரணம் , மரியா ஸ்மித் போகும் போது ஒரு மொழியையும் தன்னுடனே சேர்த்துக் கொண்டு போய் விட்டார் . ஆம் , அலாஸ்காவின் பழங்குடி மக்களின் மொழிகளில் ஒன்றான " ஏயக் " என்கின்ற மொழியை பேசத் தெரிந்த உலகின் கடைசி மனிதராக அவர் மட்டும்தன் இருந்தார் . அவர் இறந்ததன் பிறகு இன்றைக்கு உலகில் யாருக்குமே அந்த மொழியை பேசத் தெரியாது .        அவர் இறந்த தினத்தொடு உலகில் உள்ள பல மொழிகளில் ஒரு மொழி அழிந்து விட்டது . மரிய

புள்ளைங்களா வாங்க....

Apartment எண் 311 நண்பர்களே, சிங்கங்களே, யானைகளே, மென்பொருள், வன்பொருள், வேறு சில வெளங்காப் பொருள் "வால்"லுனர்களே.. வந்து நமது இந்த புதிய ப்ளாக் உள்ளே followers என்கிற இடத்தில உங்களது google அக்கௌன்ட் மூலமாக சேர்ந்து கொள்வது உங்கள் தார்மீக உரிமை.... + கடமையும்கூட .... இந்த தளத்தை நமது வீடு போல.. சுத்தமாகவும்...!!!!!!?????( ச்சும்மா ஒரு பேச்சுக்குத்தான் ), சத்தமாகவும் பார்த்து கொள்ளவேண்டியது உங்களது முழு முதல் பணி  என்பதை நினைவில் கொள்ளுங்கள்.... வரட்டுமா...

நண்பர்களே..

ஏலே மக்கா... இந்த கெரகத்த எப்புடி ஓபன் பண்றதுன்னு தெரியாமத்தேன் இம்புட்டு நாளாத் தெகச்சுப் போயி அடுத்தவிங்க ப்ளாக் எல்லாம் ஆச்சரியமாப் பாத்துக்கிட்டு இருந்தமப்பு. இது இம்புட்டு சிம்ப்பிளா இருக்குதுலே... இனிமே பாருங்களே.....!!!! சும்மா பறக்க விடுதமப்பு....!!