Posts

Showing posts from March, 2019

வருமான வரி ரிடர்ன் சமர்ப்பித்தல்

Image
    பொதுவாகவே, மாத சம்பளதாரர்கள் அல்லது நிரந்தர வைப்பு திட்டத்தில் சற்று அதிக பணம் சேமித்து வைத்திருப்பவர்களுக்கு TDS (ஆதார வரி பிடித்தம்) முறையில் எதிர்பார்க்கப் படும் ஆண்டு வருமானத்திற்கான வருமான வரி முன்கூட்டியே பிடிக்கப்படுகிறது. வேலை வழங்கும் நிறுவனம் மற்றும் சேவை வழங்கும் வங்கி ஆகியவை இவ்வாறு பிடித்தம் செய்து தகவல் தெரிவிக்கின்றன. இந்த தகவல்கள் Form 16A மற்றும் Form 26AS போன்றவை மூலம், சம்பந்தப்பட்ட நபருக்கு தெரிவிக்கப் படுகின்றன. நாம் வரிச்சலுகை பெறுவதற்காக முதலீடுகள் செய்திருந்தாலோ, அல்லது நன்கொடைகள் வழங்கி இருந்தாலோ அதனைத் தெரிவித்து வரி செலுத்த வேண்டிய வருமானத் தொகையை குறைப்பதன் மூலம், குறைக்கப்பட்ட வருமானத்திற்காகவும் சேர்த்து பிடிக்கப் பட்ட TDS தொகையை திரும்பப் பெறுவதற்காகவே Income tax return பதிவு செய்கிறோம்.  தாக்கல் செய்வது எப்படி? : ஓரளவு கணினியை இயக்கத் தெரிந்து, இணையத்தில் உலவத் தெரிந்தவர்களான, நேர்மையாக வரி செலுத்தும் மாத ஊதியதாரர்கள் தானாகவே ரிடர்ன் தாக்கல் செய்ய முடியும். இதனை செய்ய, நன்கொடை பெற்றவரின் PAN no தேவை. மேலும் மாதச் சம்பளத்தில் பிடித்