சமீபத்திய மகிழ்ச்சியூட்டும் செய்திகள் சில...

  பிரதமர் அவர்களின் கடந்த வார அறிக்கைகள் சில படிக்கும் போதே, அடடா.., இப்படி நடந்தால் பரவாயில்லையே, நன்றாக இருக்குமே எனத் தோன்ற வைத்தன. அவற்றுள்  ஒன்று,


  Right to Reject Provision in Elections 

        திரு . மன்மோகன் சிங் ஐயா அவர்கள் தனது அரசாங்கம்,  தேர்தல் சீர்திருத்தங்கள் தொடர்பான பல்வேறு கோரிக்கைகளை தீவிரமாகப் பரிசீலித்து வருவதாகத் தனது கடிதம் ஒன்றில் தெரிவித்து இருக்கிறார். அவற்றில் ஒன்று 'RIGHT TO REJECT'. அதாவது தேர்தலில் நமதுத் தொகுதியில் போட்டியிடும் எந்த வேட்பாளரும் பொருத்தமில்லாதவராகத் தோன்றினால் நாம் வாக்குச் சீட்டிலேயே நமது விருப்பமின்மையைப்    பதிவு செய்வதன் மூலம் அவர்களை புறக்கணிக்கலாம். அதே சமயத்தில் தேர்தலை புறக்கணித்ததாகவோ, அல்லது ஒரு தவறான நபரைத் தேர்ந்தெடுத்து விட்டதாகவோ நாம் வருந்த வேண்டியது இல்லை. ஒருவேளை  அதிகப் படியான வாக்குகள் " யாரையும் தேர்வு செய்ய விருப்பமில்லை- None of the above" என்று பதிவாகும்  பட்சத்தில்  அந்தத் தேர்தலை ரத்து செய்து விட்டு சில மாதங்களுக்குப் பிறகு வேறு தேர்தல் நடத்த பரிந்துரைக்கலாம் என்றும் கூறப் படுகிறது. இந்தக் கடிதம் திரு அன்னா ஹசாரே அவர்களின் கடிதம் ஒன்றிற்குப் பதிலளிக்கும் விதமாக வெளியிடப் பட்டிருக்கிறது.

  இந்தப் பரிந்துரை நடைமுறைக்கு  வரும் என்றால், அரசியல்வாதிகளுக்கு சற்று கிலி பிடிக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. 

   இரண்டாவதாக,

                   CBI  மற்றும் மாநிலங்களின் ஊழல் தடுப்புத் துறை கூட்டமொன்றில் பேசியிருக்கும்  பிரதமர், தனியார்த்  துறைகளில் நிலவும் லஞ்சம் மற்றும் ஊழல் ஆகியவற்றையும் சட்டப் படி தண்டிக்கக் கூடிய குற்றமாக்குவதற்காக சட்டத்தினை மாற்றுவதற்குப்   பரிசீலித்து வருவதாகத் தெரிவித்திருக்கிறார்.

அரசாங்க அலுவலகங்களில் வெளிப்படையாக நடக்கும் லஞ்சம் மற்றும் முறைகேடுகளையே   தடுக்க முடியாத போது, தனியார்த் துறைகளை எவ்வாறு கட்டுப் படுத்த முடியும்?  அரசாங்கம்  கடைபிடிக்கவிருக்கும் வழிமுறைகள் என்னென்ன என்பனப் பற்றி இன்னும் தெளிவு படுத்தப் பட வில்லை.  ஆனாலும் பெரிய நிறுவனங்கள் மூலம் நடக்கும் உலக மகாக் கொள்ளைகளுக்கு சிறிது கடிவாளம் போடலாம். 

  மற்றுமொரு அறிக்கையில், 

                   'Whistle blowers protection act'  வரவிருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார். (சிறிது நாட்களுக்கு முன்பு வரை நான் நினைத்துக் கொண்டிருந்த விசில் ஊதுபவர்கள்.., பேருந்து நடத்துனரும், உடற்றிடக்  கல்வி ஆசிரியரும், மற்றும் திரை அரங்க ரசிகரும் தான்) இதன்படி நேர்மையான அரசாங்க ஊழியர்கள் தாங்கள் பணிபுரியும் நிர்வாகத்தில் நடக்கும் தில்லுமுல்லுகளைப் அப்பட்டமாக்கும் எண்ணம் அதிகரிக்கும். குஜராத்தில், சமீபத்தில் கைது செய்யப் பட்டு அலைக்கழிக்கப் பட்ட IPS  அதிகாரி சஞ்சய் பாட் அவர்களுக்கு நிகழ்ந்து வருவதுப் போன்ற சம்பவங்கள் குறைய வாய்ப்பு உண்டு. 

 என்ன முன்னேற்றம் ஏற்படுகிறது என்று பார்ப்போம் !.

  

Comments

  1. இதிலும் சந்து பொந்து வைப்பார்கள் தோழர்... நம் சட்டத்தில் இருக்கும் அத்தனை பிரிவுகளிலும் சந்து பொந்து இருக்கும் பொழுது இதில் மட்டும் இருக்காதா? பார்க்கலாம்...

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

நீதிமன்றத்தில் நாமே வாதாட - 2/2

நீதிமன்றத்தில் நாமே வாதாடுவதற்கு..1/2

போர்த் தொழில் பழகு (Porth thozhil pazhagu) (புத்தக விமர்சனம்) :