ஒரு நாகரிக படைப்புத் திருட்டு!

        நண்பர் ஒருவர் மின்னஞ்சல் செய்திருந்த வரிகள். !  களவாணிப் படம் பார்த்து ஏற்கனவே எனது கிராமம் பற்றிய ஏக்கத்தில் இருந்த, என்னை நிறைய விசயங்களை இழப்பதாக எண்ண வைத்து விட்ட வரிகள்.



வயல்வெளி பார்த்து
வறட்டி தட்டி
ஓணாண் பிடித்து
ஓடையில் குளித்து
எதிர்வீட்டில் விளையாடி
எப்படியோ படித்த நான்
ஏறிவந்தேன் நகரத்துக்கு !


சிறு அறையில் குறுகிப் படுத்து
சில மாதம் போர்தொடுத்து
வாங்கிவிட்ட வேலையோடு
வாழுகிறேன் கணிப்பொறியோடு !


சிறிதாய்த் தூங்கி
கனவு தொலைத்து
காலை உணவு மறந்து
நெரிசலில் சிக்கி
கடமை அழைக்க
காற்றோடு செல்கிறேன்
காசு பார்க்க !
மனசு தொட்டு
வாழும் வாழ்க்கை
மாறிப் போகுமோ ?

மௌசு தொட்டு
வாழும் வாழ்க்கை
பழகிப் போகுமோ ?
வால்பேப்பர் மாற்றியே
வாழ்க்கை
தொலைந்து போகுமோ ?
சொந்த பந்த
உறவுகளெல்லாம்
ஷிப் பைலாய்
சுருங்கிப் போகுமோ?
வாழ்க்கை 
தொலைந்து போகுமோ
மொத்தமும்!
புரியாது
புலம்புகிறேன் 
நித்தமும்!
தாய் மடியில் தலைவைத்து
நிலவு முகம் நான் ரசித்து
கதைகள் பேசி
கவலைகள் மறந்த காலம்
இனிதான் வருமா ?
இதயம் நனைத்த
இந்த வாழ்வு
இளைய தலைமுறைக்காவது
இனி கிடைக்குமா ?


சொந்த மண்ணில்
சொந்தங்களோடு
சோறு திண்பவன்
யாரடா ?இருந்தால் அவனே
சொர்க்கம் கண்டவனடா!


Comments

  1. நல்லா இருக்குங்க..


    //நாங்கல்லாம்... தலையில இடியே விழுந்தாலும் !!.. வாயி சேதாரம் இல்லாம இருந்துச்சின்னா சாப்புடச் சூடா என்னா இருக்கு? - ன்னு கேக்குரவிங்க..!!!//

    இந்த நாலு வரிக்காகவே உங்களை follow செய்யலாம்..தப்பே இல்லங்கன்னா....started

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

நீதிமன்றத்தில் நாமே வாதாட - 2/2

நீதிமன்றத்தில் நாமே வாதாடுவதற்கு..1/2

போர்த் தொழில் பழகு (Porth thozhil pazhagu) (புத்தக விமர்சனம்) :