அசடு வழியரதுன்னா எப்புடி?!

           நம்மள யாராச்சும் வெளிநாட்டுக்காரங்க பாத்தாங்கன்னா, மொதல்ல தெரிஞ்சுக்கனும்ன்னு கேக்குறது இந்தியாவுல நீ எந்த பக்கம்ங்கறது தான்.  அவிங்களுக்கிட்டப் போயி நானு பெரும்புலியூர் பக்கத்துல....,  கூப்புடு தூரத்துல இருக்க கோதண்டராம புரமுன்னு  சொல்லிப் புரிய வைக்கறதுக்குள்ள இந்திய மேப்பையே முழுசா வரயற மாதிரி ஆயிப்போவும்!!!.



  அதுக்குப் பயந்துக்கிட்டு நான் சவுத் இந்தியா ன்னு சொல்லுறது புத்திசாலித்தனமா! சவுத் இந்தியங்கறது ஒன்னோடக் கலரப் பாத்தாலே எங்களுக்குத் தெரியுமுடி. நீ சவுத் இந்தியாவுல எங்கிட்டு ன்னுவாங்க!  நான் சென்னைன்னு பொத்தாம் பொதுவாச் சொல்லி சமாளிச்சர்றது வழக்கம். சில சமயம் சென்னைய எங்க இருக்குன்னுத் தெரிஞ்ச சில பயபுள்ளைக,  விடாம "ஓ... சென்னை எனக்குத் தெரியும். நீ சென்னை தானா!? நான் ஒரு பதினஞ்சு வருசத்துக்கு முந்தி அங்க வந்துருக்கேன் நீ சென்னையே தானா? இல்லப் பக்கமா"ன்னு கேப்பாங்க!?

  இல்ல சாமி!!  நான் சென்னையில இருந்து ஒரு ஆறு மணி நேரம் போனாக்கத்தான் எங்க ஊருக்குப் போவ முடியுமின்னு சொல்லியாவனும். அதக் கேட்ட வுடனே ..  "ஒ.. அம்புட்டுப் பெரிய நாட்டுப் புறத்தானா நீயி?"ங்கற மாதிரி பார்ப்பாய்ங்க !! இதே தமிழ் ஆளுங்க யாராச்சும் கேட்டாத் திருச்சின்னு சொல்லிரறது வழக்கம்.  "தம்பி, திருச்சில எந்தப் பக்கம்?" ன்னுக் கேட்டாங்கன்னாக்கத் தான் வில்லங்கம். " இல்லைங்க அங்கேருந்து ஒரு அறுபது குலோமீட்டறுப் போவனும். பெரம்பலூருன்னு ஒருப் பெரிய ஜில்லா ஒன்னு அங்க இருக்கு அந்த ஊருத்தான் அப்புடிங்கறது.


 "அப்புடியா பெரம்பலூரேவா? இல்ல.... பக்கத்துலையா?" அடுத்தக் கேள்வி வரும்.  இல்லங்க பக்கத்துல பத்துக் குலோமீட்டறுத்  தள்ளி,  'தடுக்கி விழுந்தான் பாளையம்' ன்னு ஒரு வழியா நம்ம ஆதி அந்தமேல்லாம் சொல்லி முடிக்கறது.  இப்புடியெல்லாம் சுத்தி வளைச்சு ஒரு வழியா விவரிச்சதுக்கு அப்புறமா அவரு சொல்லுவாரு நானும் "வேப்பந்தட்டை"ப் பக்கம் "வெண்பாவூறு"  தான்னு. அடக் கொடுமையே ! யோவ் நானும் பெரம்பலூருக் காரன்னு சொல்லித் தொலைக்க வேண்டியதுதானெய்யா. நான் வேற.., ஒனக்கு ஒன்னும் தெரியாதுன்னு பெரம்பலூறுப் பெரிய பட்டணம்ங்கற மாதிரி அள்ளித் தெளிச்சுக் கிட்டு இருக்கேன்.!!  அப்புடின்னு செல்லமாக் கோச்சுக்கிட்டு, (அசடு வழிஞ்சுட்டு)  போன் நம்பரக் கொடுத்துத் தொலயின்னு மரியாதைக்கு வாங்கிக்கறது.


   இப்புடி ஒரு நாளு, அழகுப்  பயக் கிட்ட  ஒருத்தன் சிக்குனான். "என்ன ஊருங்க நீங்க ?". "நான் திருச்சி"ன்னு சொன்னான். நம்மாளுக்குச்  சிரிப்பு வந்துருச்சி. "திருச்சி பக்கம் என்னா ஊரு?" ன்னுக் கேட்டான்!! "ஒங்களுக்குத் தெரியாதுங்க அங்கருந்து ஒரு அறுபது மையிலுத் தள்ளி". கடைசியாப் பார்த்தா பய புள்ள "நான் பெரம்பலூருக்கு அந்தாண்டை செருவாசூறுப் பக்கம் செங்காமுட்டிப் புதூரு"...ங்கறான்!!.  அப்பத்தான் அழகுராசுக்குப் புரிஞ்சது எல்லாருமே நம்பள மாதிரியே இருக்குராங்கங்கறது!!!

    ஒரு தடவ இப்புடித்தான் நம்ம அழகுப் பயலப் பாத்து ஒரு மலையாளிப் பொண்ணுக் கேக்குது  "ஒங்களுக்குத் தமிழ் தெரியுமா?" ன்னு,  தமிழ்ல.
    என்னடாக்  கஷ்டகாலம்? ஆத்தா மவராசி என் நிறத்த பார்த்தா ஆப்பிரிக்காக் காரன் மாதிரியாத் தெரியுது? " சத்தியமாத் தமிழத் தவிர வேற ஒன்னுமேத் தெரியாது தாயீ"ன்னு சொல்லி வச்சான்.

Comments

  1. உங்களது மின்னஞ்சல் முகவரி தெரியாமையால் இங்கே பதிலிடுகிறேன்.

    அஞ்சலியின் ஒரு குட்டித் தோட்டம் பற்றி ஆனந்த விகடனில் வந்திருந்ததுபற்றி நீங்கள் சொல்லித்தான் பார்த்தோம். அதை பார்த்து விட்டுப் போகாமல் எமக்கு அறியத் தந்ததற்கு மிகவும் மகிழ்ச்சியும் நன்றிகளும். அஞ்சலிக்கும், அவரது அம்மா என்ற முறையில் எனக்கும் மிகுந்த மகிழ்ச்சி.

    நன்றி கலை

    ReplyDelete
  2. நன்றி. இலங்கைத் தமிழ் பேச்சு வழக்கு மிகவும் இனிமை. தங்களதுப் பதிவுகளை அப்படியே எழுதுங்கள்.

    அந்த ஆனந்த விகடன் பிரதியைப் பத்திரமாக பாதுகாத்து வையுங்கள். வாழ்நாள் முழுக்க மகிழ்வாக இருக்கும்.!!

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

நீதிமன்றத்தில் நாமே வாதாட - 2/2

நீதிமன்றத்தில் நாமே வாதாடுவதற்கு..1/2

போர்த் தொழில் பழகு (Porth thozhil pazhagu) (புத்தக விமர்சனம்) :