மயில் போல வேணும் பொண்ணு...


     “உங்கப் பங்காளிக்கு ‘ஆனந்தி’ய நிச்சயம் பண்ணிரலாமுன்னு இருக்கோம், நீ என்ன நினைக்கிற மாப்பிள்ளை?” என்று கேட்டு(கேட்க வைத்து)ப் போனது ஒரு ‘ஆசை’.....

    கணவன் குடிகாரன், பிரிந்துவிட்டேன்.., மரணம் பற்றி யோசிக்கிறேன், மனமிருந்தால் சொல்லு இல்லையெனில் உன் மிஞ்சிய வாழ்வில் என்னை மன்னித்து விடு என்று திகில் கிளப்பியது ஒரு ‘மனசு’....

    ஆலய வாயிலில் வீடென்று அம்மைக்குப் பிடித்துவிட, பொம்மை ஒன்றைத் தந்துவிட்டுப் புன்னகைத்தது ஒரு ‘மனசு’...

     வேறு தேசம் எனிலும், நானும் பச்சை (பச்சைக் குத்திய)த் தமிழச்சி, மணம் புரிவோமா? என்று, அம்மாவைக் கூட்டிக் கொண்டு அகம் தேடி வந்து அச்சமூட்டியது ஒரு மனசு...

     சூதாடிக் கணவன் தந்தக் குழந்தையுடன் நான், வேறு மொழியாய் இருந்தாலும் என்ன, மாதாஜி சொன்னதால்தான் செய்கிறேன் என்று, தேனீர்க் கோப்பையை சட்டென்று வைத்து விட்டு, பதட்டத்தோடுப் பட்டென்றுப் பறந்தோடியது மற்றொரு ‘மனசு’....

    தோளில் தொங்கும் துப்பாட்டாவை விருட்டெனத் தலையில் அணிந்து, நானும் பாரம்பரியம் பின்பற்றுபவள் என்னைப் பிடிக்குமா?! என்றது இன்னொருக் குட்டி மனசு....

    வார இறுதி நாட்களின் நடன விடுதிகளில் மது அருந்தும் பழக்கமுண்டு. பணியிடத்து நாகரிகம் அப்படி, என்னைப் பிடிக்குமா? எனத் திருநீறும் குங்குமமுமாய்ப் பூசித் திரும்பிப் பார்க்க வைத்தது ஒரு முரண் ‘மனசு’...

  சொந்தங்களுடன் போரிட்டுப் போரிட்டு, சூழ்நிலைக் கைதியாய் சொல்ல முடியாத் துயருடன் சோர்ந்துக் கிடந்தது சொந்த மனசு..

பொருளியல் மட்டும் பெரிதென்னும் பொறியியல் தவிர்த்து, கலை.. இலக்கிய அறிவியல் ஒன்றைப் படித்து, மண்ணும் தெரிந்த மனமும் புரிந்தவராக கருத்த தேகமும், வெள்ளை மனசுமா.., ஒரு நாட்டுப்புறத் தமிழச்சியைக் கரம் பற்ற ஆசை..


துன்பமெல்லாம் மறந்து போக, தோல்வியெல்லாம் பறந்து போக,
வாசல் முழுசும் வண்ணமாக, வாழ்வில் ஒரே எண்ணமாக,

வரனும் ஒருத் தேவதை..பாரதி சொன்ன மயில் போல..!!!

Comments

  1. ரசித்தேன்... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. நன்றி.. சில நேரங்களில்.., ஆளே இல்லாதக் கடையில் டீ ஆற்றுவதுப் போன்ற நினைப்பு இருக்கிறது. உங்கள் பின்னூட்டம் மகிழ்வு அளிக்கிறது..!! :)

    ReplyDelete
  3. சிங்கம் வெகுவிரைவில் மயிலோடு உலா வர வாழ்த்துக்கள் :)

    ReplyDelete
  4. ரெம்ப நல்லாருக்குங்க எழுத்து

    ReplyDelete
    Replies
    1. நன்றி நண்பரே.. தங்கள் பாராட்டு மேலும் நன்றாக எழுத வேண்டும் என உத்வேகம் அளிக்கிறது.

      Delete

Post a Comment

Popular posts from this blog

நீதிமன்றத்தில் நாமே வாதாட - 2/2

நீதிமன்றத்தில் நாமே வாதாடுவதற்கு..1/2

போர்த் தொழில் பழகு (Porth thozhil pazhagu) (புத்தக விமர்சனம்) :