ஆலய தரிசனம் - 2/3

குத்தாலம் அருகில் உள்ள பாடல் பெற்றத் திருத்தலங்கள் சிலவற்றைக் காண்பது என முடிவாயிற்று. அதில் முதலில் பார்த்தது குத்தாலம் சொன்னவாறரிவார் திருத்தலம்தான். 

:

ஆலயப் புனரமைப்பு பணிகள் நடை பெற்றுக் கொண்டிருக்கின்றன. சன்னதியின் கல்வெட்டு எழுத்துக்களில் இறைவன் பெயரான `சொன்னவாறரிவார்` (உக்தவாகீஸ்வரர்) என்பதை கண்டுகொள்ள முடிந்தது. 



ஜெயங்கொண்ட சோழ வள நாட்டைக் கண்டு கொண்டேன்

குலோத்துங்க சோழ வள நாட்டையும் கண்டு கொண்டேன்

தஞ்சாவூர் குறிப்பிடப்பட்டு உள்ளது

மணவாளப் பட்டன் எழுத்து / நாராயணப் பட்டன் எழுத்து

இறைவன் பெயரான சொன்னவாறரிவார்



அதிகாலையில் ஆலயம் திறக்கப் பட்டவுடன், இறைவன் அருளால் அடியேனுக்கு நல்ல தரிசனம் கிட்டியது. அந்தத் திருப்தியுடன் அங்கு இருந்து திருவேள்விக்குடிக்கு சென்றேன்.

திருவேள்விக்குடி: 

குத்தாலத்தில் இருந்து சுமார் 3 கிமீ தொலைவில் உள்ளது திருவேள்விக்குடி. 

திருக்குளம்




ஆடல் வல்லானது காலை ஆரேனும் அழிக்கவும் இயலுமோ?


ராஜராஜ தேவர் பெயரைக் கண்டுகொண்டதில் அற்ப மகிழ்ச்சி

ஆளே இல்லாத பிரகாரத்தில் அப்பனும் அடியேனும்..


அம்மன் சன்னதி சுவற்றிலும் ராஜராஜர் பெயர் உள்ளன (எழுத்துக் கூட்டி அதை மட்டுமே படிக்க முடிந்தது).


அதன் பின்னர் சென்ற ஆலயம் திரு எதிர்கொள்பாடி. திரு எதிர்கொள்பாடி : திருமணஞ்சேரி செல்லும் அனைத்துப் பேருந்துகளும் இந்த ஆலயத்தில் நின்று செல்லும். ஒரு சிறிய அறிவிப்பு பலகை மட்டுமே வைக்கப் பட்டு உள்ளதால், பலருக்குகும் இங்கே ஒரு பாடல் பெற்றத் தலம் இருப்பது தெரிய வாய்ப்புகள் குறைவு. பாடல்கள் அனைத்தும் வாழ்வின் நிலையாமை பற்றியவை ஆகும்.

Comments

Popular posts from this blog

நீதிமன்றத்தில் நாமே வாதாட - 2/2

நீதிமன்றத்தில் நாமே வாதாடுவதற்கு..1/2

போர்த் தொழில் பழகு (Porth thozhil pazhagu) (புத்தக விமர்சனம்) :