ஆலய தரிசனம்-1/3

 அவ்வப்போது பாடல் பெற்றத் திருத் தலங்களுக்கு செல்வது அடியேனின் வழக்கம். சமீபத்தில் அவ்வாறு சென்ற போது, முதலில் தரிசித்த தலம் திருவிடை மருதூர்.

அதன் சில புகைப்படங்கள் கீழே:

திருவிடைமருதூர் :

கும்பகோணத்தில் இருந்து மயிலாடுதுறை செல்லும் வழியில் உள்ள திருக்கோயில்.

மராட்டிய அரச குடும்பத்து பெண்மணி ஒருவர் தான் மணக்க விரும்பியவரை மணக்க அருள் புரிந்தமைக்காக இத்தலத்து ஈசருக்கு ஒரு லட்சம் விளக்குகள் ஏற்றி வழிபட்டு, விளக்குடன் நிற்கும் தனது உருவத்தை பித்தளையில் செய்து வைத்து இந்த செய்தியையும் எழுதி வைத்து உள்ளார். பட்டினத்தார் துறவியாக வாழ்ந்து வந்தது இத்தலத்தில்தான்.



அதன் பின்னர் அங்கிருந்து அதே வழித்தடத்தில் செல்லும் பேருந்தில் சென்று திருவாலங்காடு பேருந்து நிறுத்தத்தில் இறங்கினேன். 

திருவாலங்காடு ( நாகை மாவட்டம்) : 

திருவாலங்காடு என்ற பெயரில் திருத்தணி அருகே ஒரு சிவ ஆலயமுண்டு என்பதால் குழப்பம் ஏற்படாமல் இருக்க மாவட்டத்தையும் குறிப்பிட வேண்டி உள்ளது. 

இந்த ஆலயம் மூன்றாம் குலோத்துங்க சோழர் காலத்தில் புகழ் பெற்று விளங்கி இருக்க வேண்டும். இந்த ஆலய ஈசரின் திருவடிகளைத் தம் தலை மீது தாங்கியவாறு குலோத்துங்கர் தமக்கு தாமே சிலை அமைத்து உள்ளார். 





சிலைகளை புகைப்படம் எடுக்க கூடாது என்பதால், பாதுகையை தன் தலைமீது வைத்து இருக்கும் குலோத்துங்க சோழரின் புகைப்படத்தை இங்கே பதிவிட முடியவில்லை. திருவாலங்காட்டில் இருந்து 2 கிமீ தொலைவில் திருவாவடுதுறை ஆலயமும் அதன் ஆதீனமும் உள்ளது. 

திருவாவடுதுறை :

ஆலயத் திருக்குளம்


நுழைவுக் கோபுரம்

  

மார்கழி திருவாதிரை உற்சவம் :







திருமூலர் 3000 பாக்கள் எழுதிய இடம்-திருமூலர் சன்னதி :



திருமூலரின் திருமந்திர ஓலைகள் கற்களுக்குள் மறைந்து உள்ளதை அறிந்து திருஞானசம்பந்தர், கற்களை அகற்றச் செய்து அவற்றை நமக்குத் தந்தருளிய இடம் மற்றும் திருஞானசம்பந்தருக்கு எடுக்க எடுக்க ஒவ்வொன்றாய் மொத்தம் 1000 பொற்காசுகள் பூதகணத்தின் பொற்கிழி மாடத்தில் ஈசனார் வழங்கிய இடமும் இதுவே :


சுதந்திர பாரதத்தின் முதல் பிரதமர், சம்பிரதாயமாய் தமது செங்கோலினை திருவாவடுதுறை ஆதீனம் அவர்களிடம் இருந்து பெற்றுக் கொண்டு ஆட்சி செய்ய துவங்கிய செய்தி:








Comments

Popular posts from this blog

நீதிமன்றத்தில் நாமே வாதாட - 2/2

நீதிமன்றத்தில் நாமே வாதாடுவதற்கு..1/2

போர்த் தொழில் பழகு (Porth thozhil pazhagu) (புத்தக விமர்சனம்) :