தெம்மாங்குப் பாட்டு - வாழ்க்கை குறிப்புகள்

"தெம்மாங்குப் பாட்டு"ங்கறது,  நம்ம அழகுராசுப் பயலுக்கு "ப்ளஸ் -டூ" படிக்கிறப்ப, கணக்கு வாத்தியார் வச்சக் காரணப் பேரு.  ஏன்னா பயபுள்ள அப்பெல்லாம் எங்க மேடையப் போட்டு, மைக்க குடுத்தாலும் "நான் பாட்டு பாடுதேண்"டு கெளம்பிடுவான்... அதனால கணக்குப் பரீட்சை அடிக்கடிக் கந்தலாயிடும்.  அதுலக் கடுப்பாயிப் போன  பாலு வாத்தியார் சூட்டின நாமகரணம்தான் "தெம்மாங்குப் பாட்டு". 


   அப்புடி மெர்சலாப் போய்கிட்டு இருந்த பயலோட, வரலாற்றில ஒரு கருப்பு நாளா ஒரு நாள் வந்திச்சு. என்னன்னா,  பத்து வருஷம் முன்னாடி  ஒரு நா, LIC சம்பந்தமா ஒரு பேச்சுப் போட்டின்னு பயல கூட்டிட்டுப் போயிடான்ய்ங்க.  அவனுக்கு இன்னைய வரைக்கும் LIC- ன்னா என்னான்னு தெரியாது. அப்ப இருந்த ஆர்வக் கோளாறுல, பயலும் ஒண்ணுமே தெரியாட்டியும், சமாளிப்போமுன்னு கெளம்பிப் போயிட்டான். அங்கப் பாத்தா ஒரு அறுபது பேரு குறுக்கும் நெடுக்குமா நடந்துக்கிட்டு அவிங்களா  பேசிக்கிட்டுத் திரியிராய்ங்க(பயிற்சியாம்). அடடா  இத்தனைப் பேர எப்புடிடா சமாளிக்கறதுன்னு மனசுக்குள்ள டரியல் ஆயிட்டாலும் பய, 
சளைக்காம மைந்டைன் பண்ணிக்கிட்டிருக்கான்.


  அந்தக் காலத்துல எல்லாம், பெரம்பலூரு மாநகராட்சிக்குள்ள இருந்த சுத்துப்பட்டு  18  நகராட்சிகளுக்கு உட்பட்ட  எந்தப்  பகுதிகளிலும்  எந்தப் புள்ளையும் T-shirt போடற பழக்கம் இல்ல??. இப்ப எப்புடின்னு தெரியல??!!!. ஆனா நம்மப் பயலோட நேரம்... அங்க அன்னிக்குப் பாத்து ஒரு மேடம்!. T-shirt  ம், jeans panttu மா, sunny வண்டில வந்து எறங்குது. கையிலப் பாத்தா ஒரே,,,.., LIC பேருப் போட்ட நோட்டும் புக்குமா இருக்கு. நேராப் பயக் கிட்ட வந்த அந்த மேடம், "நீங்க.., ஸ்பீச்சுக் காம்பெட்டிசனுக்கு வந்துருக்கீங்களா?" ன்னு   கேக்குது..., நம்மப் பயலுக்கு ஏற்கனவே உள்ளுக்குள்ள ஒதறுது, அத வெளிலக் காமிக்காம "இல்ல மேடம் நான் பேச்சு போட்டிக்கு வந்திருக்கேன்னு"  ரெம்பத்.. தெளிவா சொல்லிட்டு சோலியப் பாத்துக்கிருக்கான். 


  அப்புறமாப் போயி உள்ள ஒக்காந்தாக்க,  இந்த மேடம் அங்கயும்.!!. அட இவங்க ஏண்டா இங்க இருக்காங்க? பயலுக்கு லேசா ஆச்சரியம். சரி, மேடம் ஜட்ஜா வருவாங்கப் போல இருக்குன்னு நெனச்சுக்கிட்டு, நல்ல வேளை நம்ம மரியாதையாப் பேசினோமுண்டு இவனுக்கு நம்மாளே பாராட்டி பரிசுக் குடுத்துக்கிட்டு இருக்கான்.அந்த மேடம் என்னடான்னா நம்மாளப் பாத்துக் கையக் காமிச்சு காமிச்சு, பக்கத்துல இருக்கப் புள்ளைக கிட்ட சிரிச்சு சிரிச்சு பேசுது.   அப்பவே மைல்டா பயலுக்கு டவுட்டு. சந்தேகப் பட்ட மாதிரியே , மூணாவதாப் பேசப் போறவங்கன்னு பேரச் சொன்னதும் இந்த மேடம் போயி பேசு பேசுன்னு பேசுது.  அடக்கொடுமையே இது மேடம் இல்ல.. போல இருக்குன்னு அப்பத்தான்  பயலுக்கு ஒறைக்குது. 


  வெசாரிச்சுப் பாத்ததில கண்டுகிட்ட சேதி என்னன்னா அது மேடம் இல்ல, பக்கதுல இருக்க இங்கிலீசு பள்ளிகூடத்துல பதினொன்னாப்பு படிக்கிற புள்ளங்கிறது... ஒரு வருஷம் கீழப் படிக்கிறப் புள்ளையப் போயி மேடமுன்னு கூப்பிட்டதும் இல்லாம இப்படி இங்கிலீசு தெரியாம அசிங்கப் பட்டுட்டியேடா அழகுராசுன்னு அன்னிக்குப் பூராப் பயலுக்கு வருத்தமாப் போச்சு..! 


   அதில இருந்து பயலுக்கு sunny வண்டிய யாரு ஒட்டிக்கிட்டு வந்தாலும், பின்னங்கால் பிடரியில் பட, வேறப் பக்கமா ஓடறது வழக்கம். இந்த மாதிரியான எல்லா வீர சாகசங்களையும் ... யாருக்கிட்டயும் சொல்றதில்ல...

Comments

Popular posts from this blog

நீதிமன்றத்தில் நாமே வாதாட - 2/2

நீதிமன்றத்தில் நாமே வாதாடுவதற்கு..1/2

போர்த் தொழில் பழகு (Porth thozhil pazhagu) (புத்தக விமர்சனம்) :