அழகுராசு வகையறா ஆளுங்கப் பண்ணின "தெம்மாங்கு"- கள் சில...!

எல்லாருமே பள்ளிக்கொடம் படிக்கும்போது பல தில்லுமுல்லு பண்ணியிருப்போம். ஆனாக்க சில விசயங்களக் கேட்டா நம்ம எல்லாம் சொக்கத்தங்கமின்னு சொல்லிக்கற அளவுக்கு, சிலபேரு தெல்லவாரித்தனம்  பண்ணி இருப்பாங்க.

  என்னோட நண்பர் ஒருத்தர் வீட்டில் காசு வாங்குறதுக்கு செஞ்ச உத்திய சொன்னாரு.  அது என்னன்னா வீட்டிலப் படிக்காத அப்பாக்கிட்டப் போயி, கம்பியூட்டருக்கு ஆயில் ஊத்தக் காசு வேனுமுன்னுக் கேட்டு வாங்கி செலவு செஞ்சுக்கிட்டு இருந்துருக்காரு. அவரும் சரி தையல் மிசினுக்கு,  சயிக்கிளுக்கு  எல்லாம் ஊத்தறது மாதிரி கம்பியூட்டருக்கும் ஊத்துனாத் தான் ஒழுங்கா வேல செய்யும் போல இருக்குன்னு நெனச்சுக்கிட்டு,  மாசா  மாசம் கேக்கும் போதெல்லாம் தவறாம குடுத்துருக்காரு.

  நம்ம கிராமத்து அப்பா, அம்மமாருங்களுக்கு எல்லாம் இந்த பெற்றோர் ஆசிரியர் சங்க மீட்டிங்  அப்படிங்கறது ஒரு கவுரவமான விஷயம். அங்கன வந்துதான் மத்த ஆளுங்கள விட தான் கொஞ்சம் விவரமான ஆளுன்னுக் காட்டரதுக்காகவே, "ஏன் ஓங்கப் பள்ளிக்கூடத்துல கராத்தே, குங்க்பூ, ஹிந்தி எல்லாம் சொல்லித் தர்றதே இல்ல"? அப்புடின்னு பொங்கி எழுந்திரிப்பாங்க. அங்க தமிழ் சொல்லித்தரவே ஆளு இல்லாம ததிங்கினத்தோம் பாடிக்கிட்டு இருப்பாங்க.  அத வெளிலக் காமிச்சுக்காம, கண்டிப்பா அடுத்த வருஷம் பன்னிருவோமுன்னு சொல்லி அனுப்பிச்சிருவாங்க.

   இப்புடியா, நம்ம நண்பரோட  அப்பா   பெற்றோர் ஆசிரியர் சங்க கூட்டத்துக்கு போனவரு, சும்மா இருக்காம, " ஏங்க இம்புட்டுக் காசு வாங்குறீங்க ஒரு நல்லக் கம்பியூட்டரு வாங்கிப் புள்ளைங்களுக்கு சொல்லித் தரப்படாதா? என்னாத்துக்கு, ஆயில் ஊத்தி ஓட்டுற அளவுக்கு பழைய கம்பியூட்டர எல்லாம் வச்சுப் பாடம் சொல்லித் தாரீங்கன்னு?"  கேட்க, வாத்தியாருங்க எல்லாம் என்ன நடந்திருக்குமின்னு புரிஞ்சிக்கிட்டு அவருக்கிட்ட "உங்கப்  பையன் உங்கள  நூதனமா ஏமாத்தி இருக்காங்க"  ன்னு வெளக்க வெவரம்மா  சொல்லி இருக்காங்க.

  அப்புறம் என்ன? அன்னைக்கே நம்ம ஆளு சோலி முடிஞ்சு போச்சுது.

Comments

  1. ரொம்ப சிரிச்சிட்டேன்.....இனி முடியாதுப்பா..... !

    ReplyDelete
  2. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  3. இந்த பதிவை வலைச்சர வலைதளத்தில் அறிமுகம் செய்துள்ளேன்

    கீழ் வரும் முகவரியில் வந்து பார்க்கவும்.

    http://blogintamil.blogspot.com/2011/10/8102011.html

    ReplyDelete
  4. இந்த பதிவை வலைச்சர வலைதளத்தில் அறிமுகம் செய்துள்ளேன்

    கீழ் வரும் முகவரியில் வந்து பார்க்கவும்.

    http://blogintamil.blogspot.com/2011/10/8102011.html

    ReplyDelete
  5. இந்த பதிவை வலைச்சர வலைதளத்தில் அறிமுகம் செய்துள்ளேன்

    கீழ் வரும் முகவரியில் வந்து பார்க்கவும்.

    http://blogintamil.blogspot.com/2011/10/8102011.html

    ReplyDelete
  6. இந்த பதிவை வலைச்சர வலைதளத்தில் அறிமுகம் செய்துள்ளேன்

    கீழ் வரும் முகவரியில் வந்து பார்க்கவும்.

    http://blogintamil.blogspot.com/2011/10/8102011.html

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

நீதிமன்றத்தில் நாமே வாதாடுவதற்கு..1/2

நீதிமன்றத்தில் நாமே வாதாட - 2/2

போர்த் தொழில் பழகு (Porth thozhil pazhagu) (புத்தக விமர்சனம்) :