மனம்கவர் மணாலி - 1


  தமிழகத்தில் வசிப்பவர்கள் ஊட்டி  செல்வதுப் போல வட இந்தியாவில் வசிப்பவர்கள் கோடைக் காலங்களில் எளிதில் மணாலி அல்லது சிம்லா சென்று வர இயலும். நாங்கள் 6 பேர் குழுவாக சென்றிருந்தோம். மூன்றே நாட்கள்தான் என்றாலும் மறக்க முடியாத அனுபவமாக அமைந்தது. மலைப்பாதையில் பயணித்து...., பின்னர்..., மலைக்கு மேலே.., மலைக்கு மேலே..., இன்னும் மேலே.. சென்றால் ‘குல்லு’வைத் தாண்டி மணாலியை அடையலாம். செல்லும் வழியெங்கும் ஆப்பிள் மரங்களையும் விளைந்துத் தொங்கும் காய்களையும் காணலாம்.  மணாலி செல்லும் வழியில் சில மைல்களுக்கு முன்பாகவே பிரியும் மலைப் பாதை நம்மை மணிக்கரன் இட்டுச் செல்கிறது.
                   
மணிக்கரன் `நீர்வீழ்ச்சி :




         சீக்கியர்களின் புனிதத் தலம் இது. நீர் வீழ்ச்சி என்று அழைப்பதுப் பொருத்தமில்லை. இங்கு வெந்நீர் ஊற்று அமைந்துள்ளது. இந்தியாவில் வெந்நீர் ஊற்று இருப்பதாகக் கேள்விப்படாத எங்களுக்கு ஆச்சர்யமான விசயமாக இருந்தது. அதுவும் இமய மலையில் கண்டதில் மிகவும் ஆச்சர்யம். அருகாமையில் இமய மலையில் இருந்து இறங்கி அசுர வேகத்துடன் ஆர்ப்பரித்து ஒடிவரும் ஆற்றின் பலத்த இரைச்சல் பாலத்தின் மீது நிற்கும் நம்மையே லேசாகப் பயமுறுத்தும். இரவு நேரங்களில் நீரின் அளவு அதிகமாக இருக்கும் என்கிறார்கள். என்ன அறிவியல் காரணமோத் தெரியவில்லை.
      வழியில் தென்படும் திசைக் காட்டிப் பலகை சிம்லா-100 என்கிறபோது அங்கேயும் சென்றால்தான் என்ன? எனத் தோன்றும். எந்தக் குளிர் பிரதேசத்திற்குச் செல்லும்போதும் குளிர் தாங்கும் உடைகள் அணிந்துக் கொண்டு செல்வது நல்லது. இல்லையெனில் வேறு வழியில்லாமல் சற்று அதிக விலைக் கொடுத்து வாங்க வேண்டி வரலாம்.

பனி போர்த்திய இமயமலையின் அழகுக் காட்சி:

பனி விலக ஆரம்பிக்கையில் மாசியாக மாறி....
பின்புப் பனி முற்றிலும் கரைந்தப் பிறகு....


  ஊட்டி சென்றவர்களுக்கு சன்னல் ஓர இருக்கையில் அமர்ந்து வெளியில் பார்க்கும் போது சாலையின் விளிம்பில் உள்ள கிடு கிடுப் பள்ளங்கள் கிலியை உண்டாக்கும். கிட்டத்தட்ட அதேப் போன்றெ இன்னும் பெரியப் பள்ளத்தாக்குகள் இங்கு உள்ளன. எந்த இரு மலைகளுக்கு நடுவில் பார்த்தாலும் ஏதொ ஒரு ஆறு தண்ணீருடன் ஒடிக் கொண்டிருக்கும், வற்றாத ஜீவ நதிகள் பாய்ந்து வளம் செய்கின்றன. மணாலியில் பியாஸ் நதியின் நீர்ச்சறுக்கு(Rafting ), மற்றும் பனிச்சறுக்கு(Ice Skating), பாராசூட்டில் பறத்தல் (paragliding) போன்ற விளையாட்டுகள் சுற்றுலாப் பயணிகளுக்கு உற்சாகம் அளிப்பவை. பியாஸ் நதி நீங்கள் சாlலையில் செல்லும் போது உங்களுடனேயேப் பின்தொடர்ந்து பல மைல்களுக்கு வரும் காட்சி இனிமையான ஒன்று.

மணாலிக்கு உயரே... - ரோத்தாங்க் பாஸ் :

       (-1˚C) செல்சியஸ் வெப்ப நிலையில் கூட வாழ்ந்துப் பழக்கப் பட்ட எங்களுக்கே அங்கிருந்த குளிர், அதிக காற்றின் காரணமாக நடுக்கம் வரவழைத்தது. தொட்டப் பெட்டா செல்வதைப் போல மணாலிக்கும் மேலே 40 கிமீ தூரம் பலக் கொண்டைஊசி வளைவுகளைத் தாண்டிப் பய(ம்)ணித்தால் நாம் ரோத்தாங்க் பாஸ் என்ற மலை உச்சிப் பகுதியை அடையலாம்.

      இந்தப் பகுதி ஒரு தேசிய நெடுஞ்சாலை. இங்கிருந்து இரண்டு நாள் பயணம் செய்தால் தான் காஷ்மீரின் லே, லடாக் பகுதிகளை அடைய முடியும். ஆனால் சாலையில் சில இடங்களைப் பார்த்தால் நமது பகுதிக் குக்கிராமங்களை இணைக்கும் மண் சாலையைப் போல இருந்தது. அந்த ஊர் அரசாங்கத்தின் மீது அதீதக் கோபம் வந்தது. அதன் பிறகுதான் தெரிந்தது அந்தச் சாலையில் அரை நாளைக்கு ஒருமுறை மண்(மலைச்?)சரிவு நிகழ்கிறது என்பது. GREF- General  Reserve Engineering Force  வீரர்கள் எந்நேரத்திலும் தயாராகவே இருக்கிறார்கள். மண் சமன்படுத்தும் இயந்திரங்கள் உடனடியாக வரவழைக்கப் பட்டு துரிதமாக சரிந்தப் பாதைகள் செப்பணிடப் படுகின்றன. ஆனாலும் போக்குவரத்து சிலசமயம் நீண்ட நேரத்திற்குத் தடைப் படுகின்றது.

  ரோத்தாங்க் பாஸ் செல்வதற்காக நாம் மணாலியில் இருந்து தனியார் வாகனத்தை அமர்த்திக் கொள்ள வேண்டும். அதிக செலவு என்று எண்ணுபவர்கள், ஒரு மணி      நேரத்திற்கு ஒருமுறை செல்லும் Himachal Pradhesh Tourism Development Bus  களை பயன்படுதிக்க் கொள்ளலாம் (68 ரூபாய் மட்டுமே). அல்லது நீங்கள் இரு சக்கர வாகன வாகன ஓட்டுதலில் வல்லவர் என்றால் வாடகைக்கு Enfield bullet  களை அமர்த்திக் கொள்ளலாம்.


பியாஸ் நதி :

      ரோத்தாங்க் பாஸ் பகுதியில் இருந்துதான் பியாஸ் நதி உற்பத்தி ஆகிறது. இங்கு ஒரு தேவி சன்னதி அமைந்துள்ளது. குளிர் காலங்களில் இந்தக் கோவிலைக் காண முடியாது, முற்றிலும் பனிப் முற்றிலுமாக மூடி இருக்கும் என்றார்கள்.


Comments

  1. 2010 ல் நாங்களும் சென்று வந்தோம்.அந்த மலை உச்சிக்கு செல்லும் ஒத்தையடிப் பாதைகளின் சுற்று வரிசைகளின் அடுக்கடுக்கான பாதைகள் குளிரைவிட பயமுறுத்தியது.

    சுறுக்கமாக பல விசியங்களை சொல்லியுள்ளீர்கள்.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

நீதிமன்றத்தில் நாமே வாதாட - 2/2

நீதிமன்றத்தில் நாமே வாதாடுவதற்கு..1/2

போர்த் தொழில் பழகு (Porth thozhil pazhagu) (புத்தக விமர்சனம்) :