மனம்கவர் மணாலி – 2



கோவிலின் உள்ளே...:

இங்கிருந்துத் தெரியும் மலைச் சிகரத்திற்க்குப் பின்னால் இருந்து சீனா ஆரம்பம் என்றார்கள்.

ஒரு தேநீர்க் கடையின் அறிவிப்புப் பலகை :


 நெடுஞ்சாலையோரம் வெயிலின் வருகைக்காக உறைந்திருக்கும் ஓடை :

   பியாஸ் நதியின் பிரவாகம் :


  பனிப் பாறையின் கீழே ஆரம்பமாகும் மலையோடை :


மலையுச்சியில் ஒருக் காட்சி.

    பள்ளிக் குறிப்பேடுகளின் (Note books) அட்டைப் படங்களில்  இது போன்ற படங்களைப் முன்பு ஒரு காலத்தில் பார்த்ததாக நினைவு.


செங்குத்தாக விழும் நீ...ண்ட அருவி :


நைனா தேவி ஆலயம் :


    சிவனாருக்கு நேர்ந்த அவமானம் தாங்காமல் பார்வதி தேவி யாகத்தில் குதித்து தன்னை மாய்த்துக் கொண்டதாகவும், அவரைச் சுமந்து கொண்டு சிவனார் உக்கிரத்தாண்டவம் ஆடியதாகவும், அந்த உக்கிரம் காரணமாக உலகம் அழிந்துபட நேரிடலாம் என்று எண்ணிய மஹா விஷ்ணு தனது சங்கு சக்கரத்தை ஏவி, பார்வதி தேவியின் உடலை 51 பகுதியாக வெட்டியதாகவும், அந்தப் பாகங்கள் பாரதம் முழுவதும் விழுந்ததாகவும், அவ்வாறு விழுந்த அனைத்து இடங்களுமே அம்மன் ஆலயங்கள் உள்ளதாகவும் பார்வதி தேவியின் கண்கள் விழுந்த இடத்தில் னைனாதேவி ஆலயம் அமைந்துள்ளது எனவும் கூறப்படுகிறது.

   இமாச்சலப் பிரதேசம் செல்லுவோரின் காணவேண்டிய இடங்கள்  பட்டியலில் மிக முக்கிய இடம் இந்தக் கோவிலுக்கு எப்போதுமே உண்டு.  

   உல்லாச சுற்றுலாவாக ஆரம்பிக்கப் பட்ட இந்தப் பயணம் கிட்டத் தட்ட ஒரு ஆன்மீகச் சுற்றுலாப் போலவே அமைந்தது. ஏற்கனவெ சிம்லா சென்று வந்த நண்பர்கள் சிம்லாவைக் காட்டிலும் மணாலி சிறப்பானதாகத் தெரியவில்லை என்றார்கள். சிம்லாவில் எங்கும் பனி, எதிலும் பனி.., சாலைகளிலேயே வண்டியின் சக்கரங்கள் பனிப் பொழிவில் சிக்கிக் கொள்ளும் என்றார்கள். எப்படியாகிலும் மணாலி எங்களது மனதைக் கவர்ந்தது என்பது உண்மை.

Comments

Popular posts from this blog

நீதிமன்றத்தில் நாமே வாதாட - 2/2

நீதிமன்றத்தில் நாமே வாதாடுவதற்கு..1/2

போர்த் தொழில் பழகு (Porth thozhil pazhagu) (புத்தக விமர்சனம்) :